தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள மிகுதியான கொழுப்புகளை கரைக்கவும் ஆப்பிள் உதவியாக இருக்கும். உடல் எடையை குறைக்க எண்ணற்ற டிப்ஸ் சோஷியல் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் எதுவுமே பலனளிக்கவில்லை என்றாலும், நீங்கள் ஆப்பிள்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக பலன் தெரியும்.
உதாரணத்திற்கு, கலோரி குறைவான உணவுகளைச் சாப்பிட விரும்பும் பலர் ஆப்பிள்களைத் தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ஆப்பிளில் எத்தனை கலோரி இருக்கிறதோ, அதைவிட கூடுதலான கலோரிகள் அதன் செரிமானத்திற்கு தேவைப்படும். என்ன இருந்தாலும் வெறுமனே ஆப்பிள் பழங்களை ஒரே மாதிரியாக சாப்பிடுக் கொண்டிருந்தால் போர் அடித்து விடும் அல்லவா? அதற்குத் தான் சில சாலட் வகைகளை பரிந்துரை செய்கிறோம்.
பன்னீர், கொண்டக்கடலை மற்றும் ஆப்பிள் சாலட்
எந்தவொரு சாலட் என்றாலும், அதில் ஆப்பிளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை. அதன் மொறு, மொறுப்பும், இனிப்பு சுவையை சாலட்டின் சுவையை அதிகரிக்கும். இப்படிப்பட்ட ஆப்பிள் பழங்களை வெட்டி, அதனுடன் மசாலா சேர்க்கப்பட்ட கொண்டக்கடலை மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். பல சுவை பொருந்திய உணவுகள் இரே பவுலில் கிடைப்பதால் உங்களுக்கு நிச்சயமாக அது பிடித்துப் போகும்.
ஆப்பிள் வால்நட் சாலட்
ஆப்பிள் பழங்களுடன் சேர்த்து வால்நட் மற்றும் பைன் நட்ஸ் போன்ற பழங்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், உடலுக்கு நன்மை பயக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் பாலிஅன்சாச்சுரேடட் ஃபேட்டி ஆசிட் ஆகியவை நமக்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இதில் நிரம்பியுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உடல் எடையை குறைக்க உதவும்.
Also Read : அதிக எடை கொண்டவர்களுக்கும் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் நோர்டிக் டயட்.!
கிரீன் ஆப்பிள் சாலட்
சத்து மிகுந்த கிரீன் ஆப்பிளுடன் வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். தாய்லந்து மக்கள் இதுபோல சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கொய்யா, பன்னீர் மற்றும் ஆப்பிள்
கொய்யாக்காய்களில் விட்டமின் சி சத்து நிரம்பியுள்ளது. கொய்யா, ஆப்பிள், சீஸ், வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாலட் செய்தால் மிகுந்த சுவையாக இருக்கும். மீண்டும், மீண்டும் இதைச் செய்து சாப்பிட தோன்றும். இதனுடன் பேரீட்சை, கொஞ்சம் புளி மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
Also Read : உடல் எடையை குறைக்க உதவும் வாழைப்பழங்கள்!
நீங்கள் உடல் எடை குறைப்புக்காக டயட் கடைப்பிடிக்கும்போது இதுபோன்ற சாலட் வகைகளை சாப்பிடலாம். இதனால், சுவை மிகுந்த உணவை, வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் உடல் எடை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.