ஆப்பிள் ஜாம் என்பதால் இதில் உள்ள நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.
ஆப்பிள் ஜாம் என்பதால் இதில் உள்ள நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.
இன்ரைய குழந்தைகள் ஜாம் சாபிட கொடுத்தால் போதும் அப்படியே சாப்பிட்டுவிடுவாரக்ள். அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் ரொம்பவும் பிடித்தமான ஒன்று . கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்றவை உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர். எனவே வீட்டிலேயே எளிதான முறையில் ஆப்பிள் ஜாம் தயாரித்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 2
சர்க்கரை - 1கப்
லெமன் - 1/2 பழம்
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை
முதலில் ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பின்னர் அடுப்பில் கடாயை வைத்து 2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். அதன் பின்னர் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்.
பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.பிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம்யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும். ஜாம் அப்படி இல்லையென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி ஆற விடவும். ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம். 2 மாதங்கள் வரை கெட்டுபோகாமல் இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.