முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முடி பயங்கரமா வளர இந்த ஜூஸ் குடிச்சா போதுமாம்..முடி அழகி அனிதா சம்பத் தான் சொல்றாங்க!

முடி பயங்கரமா வளர இந்த ஜூஸ் குடிச்சா போதுமாம்..முடி அழகி அனிதா சம்பத் தான் சொல்றாங்க!

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

வாரத்திற்கு 3 முறை குடித்தாலே போதுமாம். அனிதாவின் முடி ரகசியத்துக்கும் இதுதான் காரணமாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தினமும் நாம் உண்ணும் உணவு மூலம் எப்படி முடி வளர்ச்சியை தூண்டலாம் என்பதற்கு பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் சிம்பிளான ஜூஸ் ஒன்றை செய்து காட்டியுள்ளார்.

அவசர வாழ்க்கை முறையில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்தல். 30 வயதை தொட்டுவிட்டாலே முடி உதிர்தல் பிரச்னை தலைதூக்கிவிடுகிறது. அதற்கென பிரத்யேக சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், அது நிரந்தர தீர்வாக இருக்காது. இருக்கும் வேலைப்பளு மற்றும் அவசர வாழ்க்கை முறையில் தினசரி வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் முடி கொட்டுதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதில் மிகவும் முக்கியமான ஒன்று உணவு பழக்கம். நாம் உண்ணும் உணவில் ஒரு சில பொருட்களை சேர்ப்பதன் மூலமாகவே முடி வளர்ச்சியை தூண்டலாம். என்னத்தான் விளம்பரங்களை பார்த்து ஆயில், ஷாம்பூ, மசாஜ், சீரம் என ஏகப்பட்ட அழகு பொருட்களை முடிக்காக பயன்படுத்தினாலும் கூட உணவில் நாம் செய்ய வேண்டிய மாற்றம் என்பது கட்டாயம்.

அந்த வகையில் பிக் பாஸ் புகழ், முன்னாள் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் இயற்கையிலேயே அழகான முடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். யூடியூப்பில் தனது கணவருடன் சேர்ந்து விலாக்ஸ் ஷேர் செய்து வரும் அனிதா இதுவரை பலமுறை முடி வளர்ச்சி, முடி உதிர்த்தல் குறித்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ஆனாலும் அவரிடம் தொடர்ந்து ரசிகர்கள் முடி குறித்த கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதற்கும் மிக முக்கிய காரணமே அவரின் முடி அழகு தான். அதனால் இந்த முறை தனது முடிக்கு அனிதா என்ன சாப்பிடுவார், அதை எப்படி சாப்பீட வேண்டும் என்ற வீடியோவையே அவர் வெளியிட்டுள்ளார். அதுக்குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில் நெல்லிக்காய் - கறிவேப்பிலை ஜூஸ். அதாவது, முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மற்றும் ஆம்லா இரண்டுமே கைக்கொடுக்கும். அதை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அதை ஜூஸ் போட்டு குடித்தால் அதை விட நல்லதாம். கொஞ்சம் கறிவேப்பிலை, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்து மிச்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும், பின்பு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

' isDesktop="true" id="562349" youtubeid="N6XVevyGGh8" category="food">

பின்பு இந்த கரைசலில் உப்பு அல்லது தேன் சேர்த்து குடித்தால் போதும். அவ்வளவு எல்தியாக இருக்குமாம். முடி வளர்ச்சிக்கு அபாரமாக கைக்கொடுக்குமாம். முக்கியமான விஷயம் இதில் சர்க்கரை மட்டுமே சேர்க்க கூடாது. தேன் அல்லது உப்பு மட்டுமே சேர்க்க வேண்டும். இதை தினமும் அல்லது வாரத்திற்கு 3 முறை குடித்தாலே போதுமாம். அனிதாவின் முடி ரகசியத்துக்கும் இதுதான் காரணமாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Anitha sampath