ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆந்திரா ஸ்டைல் கார நண்டு மசாலா!

ஆந்திரா ஸ்டைல் கார நண்டு மசாலா!

கார நண்டு மசாலா

கார நண்டு மசாலா

நண்டை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சளியை கட்டுப்படுத்துகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நண்டு உடலில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு - அரை கிலோ

உப்பு - தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி

தக்காளி - நான்கு

தேங்காய் - ஒரு மூடி

முட்டை - இரண்டு

கிராம்பு - நான்கு

தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

எண்ணெய் - நான்கு தேக்கரண்டி

கசகசா - ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - இரண்டு

ஏலக்காய் - இரண்டு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - நான்கு

பட்டை - இரண்டு

செய்முறை:

நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாகக் கழுவி தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். இரண்டு தக்காளியை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது நண்டில் அரைத்த தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் என அனைத்தையும் சேர்த்துப் பிசறி நன்கு ஊற விடவும். அதன் பின்னர், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நன்கு கீறிக் கொள்ளவும்.

இப்போது முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்சியில் போட்டு கசகசா சேர்த்து நன்கு விழுது போல அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை விட்டு அது நன்கு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து அதில் பச்சை மிளகாய், தக்காளி நன்கு வதக்கவும்.

இவை அனைத்துப் பொருள்களும் நன்கு வதங்கியதும் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து லேசாக வதக்கி அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

மேலும் படிக்க... தித்திக்கும் தேங்காய் அல்வா.. இதோ ரெசிபி..

பிறகு நண்டைச் சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக விடவும். நண்டு வேந்து சிவந்து வந்ததும் அடித்த முட்டையை வடிகட்டி மூலம் மெதுவாக நண்டின் மீது ஊற்றவும் முட்டை, நண்டு இரண்டும் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சுடச் சுட பரிமாறவும்.

சுவையான கார நண்டு மசாலா ரெடி.

.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Food