முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி செய்ய ரெசிபி..!

ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி செய்ய ரெசிபி..!

பூண்டு இட்லி பொடி

பூண்டு இட்லி பொடி

Garlic | இன்று நாம் சூடான இட்லி மற்றும் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கு சுவையான பூண்டு மிளகாய் பொடியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாதம், இட்லி போன்ற உணவுகளுக்கு குழம்பு, கிரேவி, சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு மிளகாய் பொடி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

பூண்டு -20 பல்

காஷ்மீர் மிளகாய் தூள் - 2 டேபிஸ்பூன்

மல்லி - 2

சீரகம் - 1டீஸ்பூன்

வெள்ளை எள்ளு - 3 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் - 1டீஸ்பூன்

கடுகு உளுந்த பருப்பு - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை -  சிறிது

செய்முறை: 

1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மல்லி, சீரகம் மற்றும் வெள்ளை எள்ளு போன்ற பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

2.பின் எள்ளு பொரிந்து மணம் வரும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

3. அதன் பின்பு வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்துவிட்டு. அதன் பின் தேவையான அளவு பூண்டு பற்களை நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

4. பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் நசுக்கிய பூண்டு பொருட்களை சேர்த்து பூண்டு பொன்னிறமாக வதங்கி வரும் வரை வறுக்கவும்.

5. பின் வதக்கிய பூண்டையும் நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். அதோடு ஏற்கனவே வதக்கிய அனைத்து பொருட்களையும் சற்று ஆரவைத்து ஒரு மிக்ஸி ஜாரில், முதலில் வறுத்த மல்லி, சீரகம், எள்ளு இந்த பொருள்களை மட்டும் சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.

6. அதன் பின்பு மிக்ஸியில் வதக்கிய பூண்டு மற்றும் காஷ்மீர் மிளகாய் பொடியை சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.

7. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். பின் அதில் கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து அந்த தாளிப்பை அரைத்த பூண்டு மிளகாய் பொடியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் பூண்டு மிளகாய் பொடி ரெடி.

First published:

Tags: Chilli, Garlic