கொரோனோவில் இருந்து தப்பிக்க உதவும் நெல்லிக்காய் - முருங்கக்கீரை ஜூஸ் : செய்வது எப்படி?

நெல்லிக்காய் - முருங்கக்கீரை ஜூஸ்

செரிமான பிரச்சனை இருப்பவர்கள் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். கீரை சூப், மூலிகை டீ ஆகியவற்றையும் வைத்துக் குடிக்கலாம்.

  • Share this:
நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வீட்டில் இருப்பது, முககவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது ஆகியவற்றின் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதேநேரத்தில் உடலில் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டியது அவசியம். நாள்தோறும் அன்றாட உணவில் வைட்டமின்கள், புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

செரிமான பிரச்சனை இருப்பவர்கள் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். கீரை சூப், மூலிகை டீ ஆகியவற்றையும் வைத்துக் குடிக்கலாம். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பதால், அவை நிறைந்த உணவுகளை தேடி சாப்பிடுவது கூடுதல் நன்மை. ஆரஞ்சு, அன்னாசி பழம், கொய்யா, மொசாப்பி ஆகியவற்றில் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. அதேபோல், முருக்கக்கீரை மற்றும் நெல்லிக்காய்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இந்த உணவுகளை இந்த நேரத்தில் சாப்பிடும்போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால், அவற்றில் இருந்து வித்தியாசமான ஒரு ரெசிபியை இன்றைக்கு டிரை பண்ணலாம்.

அந்தவகையில், முருங்கக்கீரை சூப், நெல்லிக்காய் ஜூஸ் தனித்தனியாக குடித்திருப்போம். ஆனால், அவை இரண்டும் ஒன்றாக சேர்ந்த ஜூஸை குடித்திருப்பது அரிது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நெல்லிக்காய் - முருங்கக்கீரை ஜூஸ் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.நெல்லிக்காய்

வைட்டமின் சி அதிகம் இருக்கும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தைகளில் விற்பனை செய்யப்படும் நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை சாப்பிட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வேறு ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் சேர்க்கப்பட்டு மிட்டாய் தயாரிக்கப்படுவதால் அவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கின்றனர். எப்போதும் நெல்லிக்காயை பிரெஷ்ஷாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். வயிற்றுப் புண்களை ஆற்றுவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட பிராணயாமா எப்படி உதவி செய்கிறது?

முருங்கக்கீரை

முருங்கக்காய் மரத்தில் இருக்கும் முருங்கை இலையில் அதிக ஆன்டிஆக்சிடன்டுகள் உள்ளன. நெல்லிக்காயுடன் இதனை சேர்த்து சாப்பிடும்போது உடலில் இரும்பு சத்து உறிஞ்சுவது அதிகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள், வாரத்தில் இரண்டு மூன்று முறை இந்த ஜூஸ் தயார் செய்து குடிக்கலாம் என கூறியுள்ளனர். முருங்கை இலை இல்லாத சமயத்தில் புதினா அல்லது கொத்தமல்லி இலைகளை சேர்ந்து இந்த ஜூஸ் தயாரிக்கலாம்.நெல்லி -முருங்கை ஜூஸ்

தேவையான பொருட்கள்:

1/2 டீஸ்பூன் - முருங்கக்காய் பவுடர் அல்லது 5 -10 முருங்கை இலைகள்,
2 - நெல்லிக்காய், அரை டம்ளர் - தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை :

இந்த ஜூஸை செய்வதற்கு மேற்கூறிய அனைத்து மூலப் பொருட்களையும் ஒன்றாக சேர்க்க வேண்டும். அரை டம்ளர் தண்ணீரையும் அவற்றுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், நெல்லிக்காய், முருங்கை இலை, தண்ணீர் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக மைய அரைக்கவும். தற்போது ஜூஸ் ரெடியாக உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அப்படியே குடிக்கலாம். இல்லையென்றால் வடிகட்டி குடிக்கலாம். தினமும் காலை நேரத்தில் குடிக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவுடன் சேர்த்து குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: