• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடலில் எதிர்ப்பு திறன் கம்மியா இருக்குன்னு நினைக்கிறீங்களா? இந்த 5 வகை நெல்லிக்காய்-காம்போ ஜூஸ்களை ட்ரை பண்ணுங்க..

உடலில் எதிர்ப்பு திறன் கம்மியா இருக்குன்னு நினைக்கிறீங்களா? இந்த 5 வகை நெல்லிக்காய்-காம்போ ஜூஸ்களை ட்ரை பண்ணுங்க..

நெல்லிகாய் ஜூஸ்

நெல்லிகாய் ஜூஸ்

கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காயை பல விதமான முறையில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

  • Share this:
ஆம்லா என்றழைக்கப்படும் நெல்லிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது ஒரு சூப்பர்ஃபுட் என்று கூறப்படுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தி, கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு, கரோட்டின், தையாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதனால் நெல்லிக்காய் பல நோய்களை குணப்படுத்தும் ஒரு உன்னதமான மருந்தாக செயல்படுகிறது. மேலும் இதில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகம் நிறைந்துள்ளதால், தொற்றுநோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. இதனால் இந்த குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்கும். 

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்க ஐந்து அற்புதமான நெல்லிக்காய் ஜூஸ்கள் குறித்து நாம் இங்கு காண்போம்., 

1.நெல்லிக்காய் ஜூஸ் : 

நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்க முதலில் 5 நெல்லிக்காய்களை எடுத்து விதையை நீக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் 1 துண்டு இஞ்சி மற்றும் 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள் சேர்த்து, இதனுடன் தேவையான அளவு தண்ணீர், சுகர் அல்லது தேன் சேர்த்து அரைத்து ஜூஸ் எடுத்து அருந்தவும். கொத்தமல்லிக்கு பதிலாக புதினா இலைகளையும் சேர்க்கலாம். இந்த ஜூஸை தினமும் காலை குடித்து வர உங்கள் இதயம் பலம்பெறும், மேலும் இந்த பானத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன, அவை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.மேலும் இருமல், தலைவலி ஆகியவற்றை குணமாக்கவும் சிறந்தது. 

2.நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸ் : 

நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சம அளவு எடுத்து அரைத்து சாற்றைப் பிரித்தெடுத்து அருந்தவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பானத்தை தினமும் உட்கொள்ளுங்கள். இது ஒரு சிறந்த நச்சுத்தன்மையை நீக்கும் பானமாக செயல்படுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வேளையில் அருந்துபவர்களுக்கு வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று தலைமுடி ஆரோக்கியமாக வளர்கிறது.

3.நெல்லிக்காய் சர்பத்:

நெல்லிக்காய் சர்பத் தயாரிக்க நெல்லிக்காய் சாறுடன், தேன், ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலந்து அருந்தவும். இந்த பானம் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும் கண்பார்வை மேம்படுத்த, இரத்தத்தை சுத்திகரிக்கவும், கல்லீரலை பலப்படுத்தவும் உதவுகிறது.  மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பானத்தை தினமும் அருந்தவும். அதுமட்டுமின்றி இதயம், எலும்புகள் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு கண்களில் உள்ள கருவிழியின் திசுக்களின் வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டு, கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைகிறது. 

4.நெல்லிக்காய், தேன் பானம் :

இந்த பானத்தில் அரை கப் மட்டுமே குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம். நெல்லிக்காயை நறுக்கி அதில் தண்ணீர் கலந்து சாறு எடுத்து அதனுடன் தேன் சேர்த்து அருந்தலாம். இந்த பானம் தோல் மற்றும் கூந்தலுக்கும் சிறந்தது. உங்களை நீரேற்றமாக வைத்திருக்க மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் தினமும் காலையில் 20 முதல் 30 மில்லி அளவு நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுபவர்களுக்கு கொழுப்புக்கள் உடலில் படிந்து எடை அதிகரிப்பதை தடுக்கிறது. 

5.நெல்லிக்காய், பாகற்காய் ஜூஸ் : 

நெல்லிக்காய், பாகற்காய் ஜூஸ் மற்றும் மஞ்சள் தூள் கலந்து ஜூஸ் செய்து அருந்தலாம். கசப்பு பிடிக்காதவர்கள் இதில் தேன் கலந்து அருந்தாலும். இந்த ஜூஸ் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் சிறந்தது. தினமும் காலையில் இந்த ஜூஸ் அருந்துவதால், ரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும். சரும பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. மேலும் முகப்பரு பிரச்சனை இருப்பவர்களுக்கு முகப்பருக்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, தோல் சுருக்கங்களை நீக்கி முகத்திற்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: