ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடல் எடையை மளமளவென குறைக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க.!

உடல் எடையை மளமளவென குறைக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க.!

எடை இழப்பிற்கு நெல்லிக்காய்

எடை இழப்பிற்கு நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள கசப்பு மற்றும் புளிப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் சிறிதளவவு தேனைக் கலந்து சாப்பிடலாம். இது நிச்சயம் உங்களது உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெயிட் ஆயிட்டேனோ? என்ன செய்தால் உடல் எடைக்குறையும்.. ஜிம்மிற்கு போகலாமா? இல்லை சாப்பாட்டின் அளவைக் குறைக்கலாமா? என பல கேள்விகள் நம்மில் தோன்றும். அந்தளவிற்கு இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படுவதால் தான், எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதற்காக பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கியமான முறைகளில் அதிகரித்துள்ள உடல் எடையை குறைக்கலாம். பல ஆரோக்கிய உணவுகள் இருந்தாலும் இன்றைக்கு உடல் எடையை குறைப்பில் முக்கிய பங்காற்றும் நெல்லிக்காயின் அற்புதங்கள் குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் உடலுக்கு நல்லது என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது மட்டுமில்லை நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், டானின்கள், பாலிபினால்கள், நார்ச்சத்துக்கள், ஹைப்போலி பிடெமிக் பண்புகள் போன்றவை அதிகளவில் உள்ளது. இவை அனைத்தும் உடல் எடை குறைப்பிற்கு மிகுந்தப் பயனுள்ளதாக உள்ளது. அதிலும் தற்போது குளிர்காலம் என்பதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும். எனவே இது போன்ற நேரத்தில் நெல்லிக்காய் சிறந்த டயட் உணவாக இருக்கும்.

Also Read : கூந்தலை அடர்த்தியாக்கும் நெல்லிக்காய் பொடி.. வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்த வழிமுறைகள் இதோ...

உடல் எடைக்குறைப்பில் நெல்லிக்காய்..

பெரும்பாலும் நெல்லிக்காயை உப்பு மற்றும் மிளகாய் வைத்து சாப்பிடுவோம் அல்லது ஊறுகாய் தயாரித்து சாப்பிடுவோம். ஆனால் இதன் சத்து முற்றிலும் குறையாத வகையில் சாப்பிட வேண்டும் என்றால், நெல்லிக்காயை ஜூஸாக பருகலாம்.

இதற்கு நீங்கள் முதலில் இரண்டு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். நன்றாக அரைப்பதற்காக சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இதனையடுத்து வடிகட்டிக் கொண்டு ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை அப்படியே சாப்பிடலாம். சிறிதளவு உப்பு சேர்த்தும் பருகலாம். இல்லை நெல்லிக்காயில் உள்ள கசப்பு மற்றும் புளிப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் சிறிதளவவு தேனைக் கலந்து சாப்பிடலாம். இது நிச்சயம் உங்களது உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.

நெல்லிக்காயின் மருத்துவ பலன்கள்..

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் இருக்கும் நச்சுகள் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடுவதோடு வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

நெல்லியில் உள்ள ஹப்போலிபிடெமிக் பண்புகள் கொழுப்பு கல்லீரல் மற்றும் கொழுப்போடு தொடர்புடைய அறிகுறிகளை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் உடல் எடையைத் தடுக்கவும், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை அகற்றவும் உதவியாக உள்ளது.இதுப்போன்று பல்வேறு நன்மைகள் உள்ளதால் இனி எந்தவித அச்சமும் இன்றி நெல்லிக்காயை உங்களது டயட் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். நிச்சயம் நல்ல பலனளிக்கும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Amla, Diet tips, Weight loss