தங்கள் குழந்தைகளுக்கும் காரம் சாப்பிட பழக்கும் இந்தியர்கள் : ஆச்சர்யத்தில் அமெரிக்கர்கள்!

தங்கள் குழந்தைகளுக்கும் காரம் சாப்பிட பழக்கும் இந்தியர்கள் : ஆச்சர்யத்தில் அமெரிக்கர்கள்!

மாதிரி படம்

சூடான, காரசாரமான சுவைமிக்க உணவுகளை சாப்பிட இந்திய குழந்தைகளும் பழகிக்கொள்வதை கண்டு மசாலா அல்லாத உணவுகளை சாப்பிடும் அமெரிக்கர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

  • Share this:
இந்தியர்கள் காரமான மசாலா நிறைந்த உணவுகள் சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர்கள். மேலும் இந்த சூடான சுவைமிக்க உணவுகளை சாப்பிட இந்திய குழந்தைகளும் பழகிக்கொள்வதை கண்டு மசாலா அல்லாத உணவுகளை சாப்பிடும் அமெரிக்கர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். இது குறித்து தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒரு அமெரிக்கர் ரெட்டிட் எனும் தளத்தில் இந்திய பயனர்களை மசாலாப் பழக்கத்துடன் எவ்வாறு பழகிக்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதில் “இந்திய குடும்பங்கள் குழந்தைகளுக்கு காரமான உணவை எவ்வாறு அறிமுகப்படுத்துகின்றன? என்ற கேள்வி R/ india எனப்படும் சப்ரெடிட்டில் கேட்கப்பட்டது. இந்திய உணவு காரமாக இருப்பதால் எப்படி மோசமாக இருக்கிறது என்று தனது கேள்வி மூலம் அவர் விவரித்தார். ஒரு அமெரிக்கராக அவர் அவற்றைக் கையாள்வதில் பயங்கரமாக உணர்வதாக தெரிவித்தார். மேலும் கருப்பு மிளகு போன்ற ஒன்றைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தனது சிறிய சகோதரர் மசாலா பொருட்களை சாப்பிடுவதில் இன்னும் மோசமானவர் என்று அவர் கூறியிருந்தார்.

"ஆனால் ஒரு இந்தியர் தங்கள் வாழ்நாள் முழுவதும் காரமான உணவைத் தவிர்ப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது எவ்வாறு அறிமுகப்படுத்தப்படுகிறது? ” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்திய குழந்தைகள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு காரமான உணவை வழங்குவதை கண்டு தான் ஆச்சரியப்படுவதாக தெரிவித்தார். ஒரு படிப்படியான செயல்முறையில், லேசான காரமான மசாலா பொருட்களை சாப்பிட அவர்கள் பழகிக்கொள்கின்றனர். பின்னர் மேலும் ஹார்ட்கோர் உணவுகளை சாப்பிட அவர்கள் ஆரம்பிக்கின்றனர்.அது எப்படி சாத்தியமாகிறது. இதனை தெரிந்து கொள்ள தான் உண்மையிலேயே ஆர்வமாக இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அப்பட்டமான கேள்வியுடன் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது ஆர்வத்தைத் திருப்திப்படுத்த பயனர்கள் கருத்துப் பிரிவில் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். அவருக்கு அதிர்ஷ்டம், அவரது கேள்வியால் யாரும் எரிச்சலடையவில்லை என்பது தான் நல்ல விஷயம். மேலும் மசாலா விரும்பும் மற்றும் மசாலா பொருட்களை வெறுக்கும் பலவிதமான இந்தியர்களிடமிருந்து பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

அதில் மூஸ்மேனியம் என்ற ஒரு பயனரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஒரு பதில் வந்தது. குழந்தைகளுக்கு பொதுவாக கஞ்சி மற்றும் பருப்பு வகைகள் போன்ற உப்பு உணவுகள் மற்றும் லேசான மசாலாப் பொருட்கள் வழங்கப்படுவதால் இது ஒரு படிப்படியான செயல் முறை. அவர்கள் வளரும்போது, அவர்கள் வீட்டில் சமைக்கும் வழக்கமான உணவுக்கு பழக்கப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார். மேலும் பதிலளித்த மற்றொரு பயனர், இந்திய உணவு மிகவும் காரமானது என்பது ஒரு கட்டுக்கதை.சாப்பிட்ட உடனேயே காதுகளில் இருந்து நீராவி வெளியே வந்தால், அது காரமானது என்று சொல்லலாம். இருப்பினும், பெரும்பாலான மக்கள் "காரமான உணவு" என்ற கூற்றை ஒரு ஒப்பீட்டு சொல்லாக பயன்படுத்த முடியாது என்றும், மக்கள் அனைவரும் உணவுகளில் வெவ்வேறு தரங்களைக் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு பயனர் இந்திய பெற்றோர் சொல்லும் மிகவும் வேடிக்கையாக ஒரு பதிலை பதிவிட்டிருந்தார். அதாவது, நாங்கள் வழங்குவதை சாப்பிடுங்கள். இல்லையெனில் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என பதிவிட்டிருந்தார்.
Published by:Sivaranjani E
First published:

சிறந்த கதைகள்