ஆன்லைன் உணவு விநியோகத்தில் களமிறங்கிய அமேசான்

அக்டோபர் 15 முதல் தற்போது வரையிலான ஒரு வாரகாலத்தில் 34,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

அமேசான் செயலி மூலமே உணவு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

 • Share this:
  அமேசான் நிறுவனம் ஆன்லைன் மூலம் உணவு விநியோகிக்கும் சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

  முதற்கட்டமாக பெங்களூருவில் மகாதேவபுரம், வொயிட்பீல்ட் உள்ளிட்ட 4 பகுதிகளில் இந்த சேவை 100 ஓட்டல்களுடன் இணைந்து அமலுக்கு வந்துள்ளது. அதனை படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தாலும் அது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

  அமேசான் செயலி மூலமே உணவு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உணவு தொழில் 4 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக  ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.

  கொரோனா ஊரடங்கால் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ நிறுவனங்கள் உணவு விநியோகத் தொழிலில் பின்னடைவை சந்தித்து சுமார் 1,500 பேரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் அமேசான் இந்த துறையில் கால் பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Also see...


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: