• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆலு மட்டர் கிரேவி செய்ய ரெசிபி...

ஆலு மட்டர் கிரேவி செய்ய ரெசிபி...

மாலை நேரத்தில் டிபன் சாப்பிடும் போது இந்த ஆலு மட்டர் கிரேவியை செய்து கொடுத்தால் எதையும் மிச்சம் வைக்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டுவிடுவார்கள்

  • Share this:
    உருளைகிழங்கு என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அத்தகைய உருளைகிழங்கில் ஆலு மட்டர் கிரேவியை செய்து கொடுத்தால் சாப்பாட்டை விரும்பி சாப்பிடுவர்கள்... வாங்க எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம்... 

    தேவையான பொருட்கள்

    உருளை கிழங்கு 3

    பட்டாணி1/4 கப்

    இஞ்சி பூண்டு விழுது 1/2 டீ.ஸ்

    மிளகாய் தூள் 2 மே. க

    மல்லி தூள் 2 மே.க

    கரம் மசாலா 1/2 டீ. ஸ்

    கசூரி மெத்தி 1/4 டீ.ஸ்பூன்

    உப்பு தேவைக்கேற்ப

    எண்ணெய் 3 மே.க

    பட்டை 1

    ஏலக்காய் 1

    கிராம்பு 2

    வதக்கி அரைக்க:

    வெங்காயம் 3

    தக்காளி 4

    உருளைக்கிழங்கு


    மேலும் படிக்க... செட்டிநாடு பால் பணியாரம் எப்படி செய்வது தெரியுமா?

    செய்முறை 

    ஒரு வாணலியில் வெங்காயம் தக்காளி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி விழுதாக அரைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
    இப்பொது மசாலா பொருட்கள், உப்பு, உருளை கிழங்கு, பட்டாணி சேர்த்து அத்துடன் தண்ணீர் 1 கப் சேர்க்க வேண்டும். அதன் பிறகு  கஸ்தூரி மெத்தி சேர்த்து குக்கர் மூடவும் ஒரு 3 விசில் வந்ததும் இறக்கவும். இப்போது ஆலு மட்டர் கிரேவி ரெடி... இதனை சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசையுடன் வைத்து சாப்பிடலாம்.

    மேலும் படிக்க...உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி ரெசிபி...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: