சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நம் உடல் நலனை பராமரிப்பது சவால் மிகுந்த காரியமாக உள்ளது. இத்தகைய சூழலில், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், வெயில் காலத்தில் சரும பாதுகாப்பை தக்க வைத்துக் கொள்ளவும் சில ஆலோசனைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். உடனே அதிக செலவு கொண்ட டிப்ஸ் என்று நினைத்து விட வேண்டாம்.
நம் வீட்டிலேயே ஒரு சின்ன தொட்டியில் கூட வளர்க்க முடிகின்ற சோற்றுக் கற்றாழை ஒன்றே போதுமானது. வெயில் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்களுக்கு இதுவே தீர்வாக அமையும்.
வீட்டில் கற்றாழை ஜூஸ் தயாரிப்பது எப்படி
- கற்றாழையை வெட்டி எடுத்து, அதன் இரு புறங்களிலும் உள்ள தோல் மற்றும் பக்க வாட்டில் உள்ள முள் போன்ற அமைப்பை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கற்றாழை வழுவழுப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி அதன் மேற்பரப்பில் உள்ள சில ரசாயனங்கள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே, குறைந்தபட்சம் 6, 7 முறை கற்றாழை ஜெல்லை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அலசி எடுத்த கற்றாழையை மிக்ஸி ஜாரில் போட்டு அடித்து எடுக்கவும்.
- வெறும் கற்றாழையைக் அப்படியே குடிப்பது கொஞ்சம் கசப்பாக இருக்கும். எனவே, இதனுடன் சுவைக்காக சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் முதலில் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
- பின்னர் தோல் சீவி, இடித்து வைத்த இஞ்சி, உப்பு, சீரகத் தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கலக்கி குடிக்கலாம்.
- கற்றாழையின் கசப்பு சுவை பிடிக்காதவர்கள், இந்த ஜூஸில் சரிபாதி மோர் கலந்து கொண்டால் கசப்புத்தன்மை பெரும்பகுதி நீங்கிவிடும்.
- கற்றாழை இயற்கையான குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால், இதில் நீங்கள் ஐஸ்கட்டி சேர்க்கத் தேவையில்லை. ஜூஸ் பருகிய பிறகு, வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதை நீங்களே உணர முடியும்.

கற்றாழை ஜூஸ் பலன்கள்
- கற்றாழையில் உடல் நலன் மேம்படுத்தும் எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. முழங்கால் வலி அல்லது முதுகு வலி போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல நிவாரணத்தை கொடுக்கும். கற்றாழையில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. ஆகவே, கோடைகாலத்தில் ஏற்படும் நீர் இழப்பை இது சரி செய்யும்.
- அல்சர் புண் குணமாகாமல் தொந்தரவை எதிர்கொண்டு வருபவர்கள் கற்றாழை ஜூஸ் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை ஜெல் எடுத்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடியின் பலம் அதிகரிக்கும்.
- வெயில் நேரத்தில் நம் முகம் மற்றும் இதர பகுதிகளில் சருமம் மிகுந்த வறட்சியடையும். இத்தகைய சூழலில் கற்றாழை ஜெல் எடுத்து சருமத்தில் அப்ளை செய்தால், சருமம் பொலிவு பெறும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.