ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வயிறு சரியில்லாத நாட்களில் இந்த BRAT டயட் ஃபாலோ பண்ணுங்க... மருத்துவர்களின் பரிந்துரை..!

வயிறு சரியில்லாத நாட்களில் இந்த BRAT டயட் ஃபாலோ பண்ணுங்க... மருத்துவர்களின் பரிந்துரை..!

பிராட் டயட்

பிராட் டயட்

ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் அது வாந்தி அல்லது பேதியை அதிகரிக்கும். எனவே நீங்கள் ஃபுட் பாய்ஸன் அல்லது வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, மிகவும் எளிமையாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எத்தனையோ விதமான டயட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கொழுப்பு உணவுகள் மட்டுமே சாப்பிடும் கீடோ டயட், புரதச்சத்து நிறைந்த டயட், கலோரிகள் இல்லாத ஜீரோ-கலோரி டயட், குறிப்பிட்ட உணவை மட்டுமே சாப்பிடும் டயட் என்று பலவிதமான டயட்கள் உள்ளன. ஒவ்வொரு டயட்டும் ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டுள்ளன. உதாரணமாக, எடை குறைப்பு, கொழுப்பு கரைப்பு, உடல் நலம் மேம்பாடு போன்றவை. அதில் ஒன்று தான் பலரும் கேள்விப்படாத BRAT டயட். பெயரே வித்தியாசமாக இருக்கிறதே, இந்த டயட் எதற்கு, டயட் பின்பற்றும்போது என்ன சாப்பிடவேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

வயிற்றுப்போக்கு, ஃபுட் பாய்சன், வாந்தி, பேதி என்று பலவிதமான செரிமான கோளாறுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு உணவு ஒவ்வாமை அல்லது அதிகப்படியான உணவு சாப்பிடுவதால் இது உண்டாகலாம். சிலருக்கு ஸ்டமக் வைரஸ் என்று கூறபப்டும் வைரஸ் தொற்று பாதிப்பால் பல பிரச்சனைகள் உண்டாகலாம். பொதுவாகவே வயிற்று வலி அல்லது பேதி ஆகும்போது குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் ஸ்டமக் வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த BRAT டயட் பெரிய அளவுக்கு உதவியாக இருக்கும். நோனா வைரஸ் போன்ற மிகவும் தீவிரமான தொற்றில் இருந்து மீண்டு, உடல் தேறி வரும் காலத்தில், இந்த நாட்டை பின்பற்றுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பிராட் டயட் என்றால் என்ன?

What is the BRAT diet?

BRAT என்பது நான்கு உணவுகளின் முதல் எழுத்துக்களை குறிக்கிறது.

B - banana

R - Rice

A - Applesauce

T - Toast

லீனா பெல் என்ற தெரப்பிடியுக் டயட்டீஷியன் ‘வாழைப்பழம், அரிசி, ஆப்பிள் சாஸ் மற்றும் டோஸ்ட் ஆகிய நான்கும் ஆண்டாண்டு காலமாக குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகும் பொழுது, அவர்களால் எந்த உணவையும் சாப்பிட முடியாத சூழ்நிலையில் குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பேதி, வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவற்றால் அவதிப்படும் நபர்களுக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

வாழைப்பழம், அரிசி, ஆப்பிள் சாஸ் மற்றும் டோஸ்ட் ஆகிய நான்கு உணவுகளுமே மிக மிக எளிதாக ஜீரணமாகும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு ஆற்றலையும் கொடுக்கும். இந்த உணவுகளில் இருக்கும் அதிகப்படியான நார்சத்து பேதியை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

ஸ்டமக் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டால் என்ன சாப்பிட வேண்டும்

வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றால், தீவிரமான வாந்தி அல்லது பேதி ஏற்பட்ட பிறகு குறைந்தபட்சம் 6 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உடலில் இருக்கும் நீர்ச்சத்து வற்றிப்போகாமல் இருப்பதற்கு, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவை கொஞ்சம் அதிகரிக்கலாம். அதற்கு பிறகு ஆப்பிள் ஜூஸ், ஜெல்லோ, பால் கலக்காத மைல்டான தேநீர் அல்லது தெளிந்த சூப் ஆகியவற்றை குடிக்கலாம்.

அடுத்த நாள், BRAT டயட்டில் உள்ள உணவுகள் அதாவது வழைப்பழம், ஆப்பிள் சாஸ், அரிசி கஞ்சி அல்லது குழைய வடித்த சாதம் ஆகியவற்றை சாப்பிடலாம். காரம் சேர்க்காமல் ஓட்ஸ், கஞ்சி ஆகியவற்றைக் குடிக்கலாம்.

மூன்றாம் நாள் கொஞ்சம் கொஞ்சமாக சிறிய அளவில் வேகவைத்த முட்டை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். அதிக நறுமணம் அல்லது காரம் அளிக்கும் மசாலாப் பொருட்களை தவிர்க்க வேண்டும். நன்றாக சமைத்த, பெரும்பாலும் வேக வைத்த உணவுகளை மட்டும் சாப்பிடும்.

Also Read : பேலியோ டயட்டின் போது என்னவெல்லாம் சாப்பிடலாம்..? எதை சாப்பிட கூடாது..?

 வயிற்றுப் பிரச்சனைகள் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் அது வாந்தி அல்லது பேதியை அதிகரிக்கும். எனவே நீங்கள் ஃபுட் பாய்ஸன் அல்லது வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, மிகவும் எளிமையாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

  • பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்துமே
  • அதிக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள்
  • காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது
  • பைன் ஆப்பிள், ஆரஞ்சு, கிரேப் ஃப்ரூட் போன்ற சிட்ரஸ் பழங்கள்
  • பெர்ரிக்கள் மற்றும் விதைகள் இருக்கும் பழங்கள்
  • சோடா, காஃபி மற்றும் மது

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diet, Diet Plan, Kids diet, Stomach Pain