முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Air Fryer : ஏர் ஃபிரையர் பயன்படுத்தி சமைப்பது நல்லதா..? கெட்டதா..?

Air Fryer : ஏர் ஃபிரையர் பயன்படுத்தி சமைப்பது நல்லதா..? கெட்டதா..?

ஏர் ஃபிரையர்

ஏர் ஃபிரையர்

மைக்ரோவேவ்களை கொண்டு அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் பிரையரில் சூடான காற்றைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எண்ணெய்யில் பொறித்த நொறுக்குத்தீனியை விரும்பாதவர்கள் கிடையாது. ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புவோரும், எடையை பராமரிக்கும் நபர்களுக்கும் எப்போதும் பொறித்த உணவுகள் ஆகாதவை ஆகும். அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சமைத்து சாப்பிட ஏர் பிரையர் எனப்படும் கிட்சன் சாதனம் பயன்படுகிறது. இது மைக்ரோவேவ் ஓவன்களைப் போல் செயல்படக்கூடியது.

அதாவது மைக்ரோவேவ்களை கொண்டு அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் பிரையரில் சூடான காற்றைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது. கன்வெக்ஷன் ஹீட்டிங்கில் குறைந்த கொழுப்புடன் கூடிய மொறுமொறுப்பான, மிருதுவான ஸ்நாக்ஸ் வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

இதன் மூலம் பிரெஞ்ச் பிரைஸ் முதல் ப்ரைடு சிக்கன் வரை பல வகையான உணவு வகைகளையும் சமைக்கலாம். ஏர் பிரையர்கள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. அதன் உயர்ந்த பொறியியல் மற்றும் செயல்திறன் காரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி சமையலை மிகவும் எளிமையான மற்றும் குறைந்த எண்ணெய் கொண்டதாக தயார் செய்கிறது. நீங்கள் ஒரு ஏர் பிரையரைப் பெறுவது பற்றி யோசிக்கும் போதே, அது மதிப்புள்ளதா இல்லையா என்று நீங்கள் யோசிக்கலாம். ஏர் பிரையர் மூலமாக கிடைக்க கூடிய சில அற்புதமான நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான சமையல்:

ஏர் பிரையர் வாங்கும் பெரும்பாலான மக்களுக்கு ஆரோக்கியமான சமையலுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. சமையல் செயல்பாட்டில் மிகக் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால், ஆரோக்கியமற்ற வறுத்த உணவுகளை ஆரோக்கியமானதாக மாற்ற உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது:

டீப் ப்ரை செய்யப்பட்ட உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன, எனவே அத்தகைய உணவுகளை ஏர் பிரையரில் சமைக்கும் போது அவற்றை மாற்றுவது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது.

பாதுகாப்பான சமையல்:

டீப் ப்ரை உணவுகளை சமைக்க அதிக அளவிலான எண்ணெய்யை மிகவும் அதிகமான கொதிநிலையில் சூடாக்க வேண்டியிருக்கும். இது வீட்டின் சமையலறையில் ஆபத்தானது, ஏனெனில் சூடான எண்ணெய் சிந்தலாம், தெறிக்கலாம் அல்லது அதிக வெப்பம் காரணமாக தீப்பிடிக்கவும் செய்யலாம். ஆனால் ஏர் பிரையர்களில் இதுபோல் எந்த விதமான பிரச்சனைகளும் கிடையாது.

Coronavirus : நோய் எதிர்ப்பு சக்தியை பெற உங்கள் லஞ்ச் பாக்ஸில் இருக்க வேண்டிய 5 உணவுகள்

ஊட்டச்சத்துக்களைப் பாதுகாத்தல்:

ஏர் பிரையரை பயன்படுத்தி சமைக்கும் போது அட்வெக்ஷன் ஹீட், வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் எனப்படும் பல்வேறு தாவரப் பொருட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை பாதுகாக்கிறது. இதனால் டீம் ப்ரை செய்யப்படும் உணவுகளை விட அதிக சத்துக்கள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

உணவை மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும் மாற்றும்:

ஆனியன் ரிங்ஸ் மற்றும் சிக்கன் டெண்டர்ஸ் போன்ற உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீங்கள் நிறைய சமைக்கவும், சாப்பிடவும் ஏர் பிரையர்கள் சிறந்தவை. இது எண்ணெய்யே இல்லாமல் உணவை மிருதுவாகவும், மொறுமொறுப்பாக்கும் பென்னிறத்தில் சமைத்துக் கொடுக்க கூடியது. எனவே லிட்டர் கணக்கில் எண்ணெய்யை உற்றி மணிக்கணக்கில் சமைப்பதை விட சுவையான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளை ஏர் ப்ரையர் சமையலில் பெறலாம்.

First published:

Tags: Cooking tips