ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கேரளா ஸ்டைல் ஆப்பம் செய்ய ரெசிபி...

கேரளா ஸ்டைல் ஆப்பம் செய்ய ரெசிபி...

ஆப்பம்

ஆப்பம்

Aappam | மெதுமெதுவென ஆப்பம் கேரளாவின் ஸ்பெஷல் என்றாலும் அது இந்தியா முழுவதிலும் பிரபலம். இதற்கு தேங்காய் பால் அல்லது காய்கறி கலவையை தொட்டுக்கொள்வது ஆரோகியமானதாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இட்லி தோசையை விட ஆப்பம் செய்து கொடுத்தால் சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வகையாக ஆப்பம் இருக்கின்றது. இதனை கேரளா ஸ்டைலில் செய்து கொடுத்தால் அவ்வளவுதான் மிச்சம் இருக்காது... 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கப்

தேங்காய் -1 /2 கப் (துருவியது)

இளநீர் – 2

உப்பு – தேவை யான அளவு

ஆப்பம்

செய்முறை

முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு, தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து, ஆப்ப மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி, ஒரு துணியால் அந்த வாணலியை தேய்க்கவும்.

மேலும் படிக்க... புத்துணர்ச்சி ஊட்டும் கேரள புட்டு...கடலை கறி, தேங்காய் பால் சேர்த்தால் ஆஹா என்ன ருசி! சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி!

பின் ஒரு கரண்டி ஆப்ப மாவை ஊற்றி, ஒரு முறை வட்டமாக ஆப்பம் வருவது போல் சுற்றி, பின்பு  2-3 நிமிடம் மூடவும். முறுகலாக வரும் போது அதனை எடுத்து பரிமாறவும். இப்போது சுவையான கேரள ஸ்டைஸ் அப்பம் ரெடி. இதனை தேங்காய் பாலுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

First published:

Tags: Food, Kerala