அம்மாவின் ஆடி பலகாரம்.. இதோ ரெசிபி..

ஆடி கும்மாயம்

நம் முன்னோர்கள் தந்து சென்ற அதிசய மருத்துவ குணம் நிறைந்த உணவில் ஆடி கும்மாயமும் ஒன்று |

  • Share this:
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு பலகாரங்களை செய்து அசத்தி வந்தவர்கள் தமிழர்கள். இடத்துக்கு ஏற்றவாறு இவை வேறுபட்டாலும், இனிப்பு என்ற ஒற்றை சொல்லில் ஒன்றுபட்டு நிற்கிறது. முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த இனிப்பு பலகாரங்களில் ஒன்று ஆடி கும்மாயம். செட்டிநாட்டு பகுதியில், ஆடி மாதம் வீட்டுக்கு வரும் புதுமாப்பிள்ளைக்கு வழங்கவும், ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கடவுளுக்கு பிரசாதமாக படைக்கவும் இந்த ஆடி கும்மாயம் தயாரிக்கப்படுகிறது.

1. ஆடி கும்மாயம்

தேவையான பொருட்கள்:

உளுந்தம்பருப்பு - 4 டம்ளர்,

பச்சரிசி - 4 டம்ளர்,

கருப்பட்டி - அரை கிலோ,

தண்ணீர் - 6 டம்ளர்,

நெய் - சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்து, மிக்சியில் அரைத்து, சலித்து கொள்ள வேண்டும். இதை கும்மாய மாவு என்போம். அதன்பிறகு அரைத்தமாவை சிறிது வாணலியில் இட்டு வறுக்க வேண்டும். இன்னொரு அடுப்பில் கருப்பட்டியையும், தண்ணீரையும் சேர்த்து மிதமான சூட்டில் உருக வைத்து கொள்ள வேண்டும். வறுத்தமாவுடன் நீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் கருப்பட்டி நீரை விட்டு, அதில் கும்மாயமாவை ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய்யை சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பின்னர் அதனை இறக்கி தட்டில் கொட்டி ஆற விடவும். இப்போது ஆடி கும்மாயம் ரெடி

2. அரிசி முறுக்கு:
தேவையான பொருட்கள்:


புழுங்கல் அரிசி - 2 கிலோகடலை மாவு - 500 கிராம்


பொட்டுக்கடலை - 500 கிராம் (அரைத்து வைக்க)


எள்ளு - தேவையான அளவு


ஓமம் - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


வெண்ணெய் - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு


கருவேப்பிலை - தேவையான அளவு


சீரகம் - 1 தேக்கரண்டி


காய்ந்த மிளகாய் - தேவையான அளவுசெய்முறை:முதலில் அரிசியை ஊற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் கடலை மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலையை சேர்த்து கலக்க வேண்டும். மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால் போதுமானது.

அதன் பின்னர் கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு பிழியும் அச்சில் மாவை எடுத்து மெதுவாக பிழிந்து விட வேண்டும். பின்னர் நன்றாக வேந்தவுடன் முறுக்கை ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். இப்போது மொறுமொருப்பான, சுவையான அரிசி முறுக்கு தயார்.

Published by:Vaijayanthi S
First published: