HOME»NEWS»LIFESTYLE»food a rare costly black turmeric used for cancers shares ifs officer esr ghta

கேன்சரை குணமாக்கும் 'கருப்பு மஞ்சள்’ மகத்துவம் பற்றி தெரியுமா?.. ட்விட்டரில் பகிர்ந்த IFS அதிகாரி!

இந்த கருப்பு மஞ்சள் கிழங்கு பசியின்மையைப் போக்கி, பசியைத் தூண்டுகிறது.

கேன்சரை குணமாக்கும் 'கருப்பு மஞ்சள்’ மகத்துவம் பற்றி தெரியுமா?.. ட்விட்டரில் பகிர்ந்த IFS அதிகாரி!
கருப்பு மஞ்சள்
  • Share this:

இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் ஒரு பொதுவான மூலப்பொருளாக உள்ளது. இது சமையலுக்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ நன்மைகளுக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் என்றால் அது, மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும் என பலர் நினைப்பது உண்டு. ஆனால், கருப்பு மஞ்சளும் உள்ளது. சமீபத்தில், இந்திய வனத்துறை அதிகாரி (Indian Forest Service official) ஸ்வேதா போட்டு (Swetha Boddu) 'கருப்பு மஞ்சளின்' (Black Turmeric) படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வகை மஞ்சள் நீல நிறத்தில் உள்ளது மற்றும் வழக்கமான மஞ்சளின் விலையை விட இதன் விலை அதிகம். இதுகுறித்து தனது ட்வீட்டில் விளக்கியுள்ள ஸ்வேதா போட்டு, கருப்பு மஞ்சள் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்றும் இது கேன்சருக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். பரவலாக கிடைக்கும் கலப்பின மஞ்சளை அதிக விலை கொடுத்து வாங்காமல் லோக்கலில் கிடைக்கும் தரமான மஞ்சளை வாங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த IFS அதிகாரியின் ட்வீட்டுக்கு பதிலளித்த ஒருவர், கருப்பு மஞ்சள் செடியின் அறிவியல் பெயரான குர்குமா சீசியாவை (Curcuma caesia) குறிப்பிட்டு செடியின் படத்தையும் பகிர்ந்துகொண்டார். இந்த செடிக்கும் மஞ்சள் செடிக்கும் உள்ள வித்தியாசம், என்னவென்றால் குர்குமா சீசியாவானது மஞ்சளின் மையப்பகுதியில் கரு நிறத்தில் இருக்கும்.



மற்றொரு யூசர் கருப்பு மஞ்சள் செடியின் படத்தைப் பகிர்ந்து கொண்டு, எந்த சூழ்நிலையில் இந்த மூலப்பொருளை நாம் பயன்படுத்தலாம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். வீக்கம், காய்ச்சல், மூட்டு வலி, தோல் கோளாறு, சுவாசக் கோளாறுகள், டிஸ்ஸ்பெசியா, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, இருமல் போன்றவற்றில் இந்த கருப்பு மஞ்சள் அட்டகாசமான மேஜிக்குகளை செய்கிறது என்று அவர் கூறினார்.

கருப்பு மஞ்சள் பெண்களுக்கு மிகவும் பயனளிக்கிறது, ஏனெனில் இது மாதவிடாயை சீராக்கவும், சிறுநீர் நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Diaspora Co என்ற இன்ஸ்டாகிராம் பேஜ் (An Instagram page) கருப்பு மஞ்சள் உற்பத்தியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் படம் விஜயவாடாவில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ குணமிக்க செடியை பயிரிடுவது மிகவும் கடினம் என்றும் இது குறைந்த மகசூலை தருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Diaspora Co (@diasporaco)




கருப்பு மஞ்சளின் அழகை வெளிப்படுத்தும் அதன் படத்திற்கு ஒரு இன்ஸ்டாகிராமர் பின்வருமாறு கூறுகிறார், “நீல மஞ்சளா? அதை பயன்படுத்த விரும்புகிறேன். பார்ப்பதற்கு  மிகவும் அழகாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு யூசர் கருப்பு மஞ்சள் என்ற ஒன்றை இதுநாள் வரை தான் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் “Dope !! நீல மஞ்சள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, மேலும் இது ஒரு அதிசய வேர் என்பதால் எனக்கு அவ்வளவாக ஆச்சரியமில்லை” என்று கூறினார். கருப்பு மஞ்சளில், வேதி எண்ணை, மாவுச்சத்து, தாதுக்கள், கொழுப்பு, பசை, ரென்மின், ஜெர்மாக்ரின் கார்டியோன், ஆல்கலாயிடுகள், குர்குமின், மற்றும் டானின் நிறமிகள் நிறைந்துள்ளன. இந்த கருப்பு மஞ்சள் கிழங்கு பசியின்மையைப் போக்கி, பசியைத் தூண்டுகிறது.

 

 
Published by:Sivaranjani E
First published: