ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Heart Health | தினமும் சிறிதளவு சாக்லேட் சாப்பிடுபவர்களை இதய நோய் தாக்காதாம்… ஆய்வு கூறும் தகவல் என்ன?

Heart Health | தினமும் சிறிதளவு சாக்லேட் சாப்பிடுபவர்களை இதய நோய் தாக்காதாம்… ஆய்வு கூறும் தகவல் என்ன?

பால் சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கும், அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

பால் சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கும், அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

பால் சாக்லேட்டில் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கும், அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தினமும் சிறிதளவு பாலாடைக்கட்டி (cheese) அல்லது சாக்லேட் சாப்பிடுவது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு 200 கிராம் வரை பால் பொருட்களை சாப்பிடுவது இதய நோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடைய நோய்கள் மனிதர்களை தாக்குவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உதாரணமாக, தயிர் சாப்பிடாதவர்களை விட ஒரு நாளைக்கு குறைந்தது 200 கிராம் அல்லது முக்கால் கப் தயிரை உட்கொண்டவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து குறைவு என்பது தெரியவந்துள்ளது.

மேலும், தினமும் காலையில் கொஞ்சமாக வெள்ளை சாக்லேட் சாப்பிடுவது உடல் எடை குறைப்பை ஊக்குவிக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் சிறிது சாக்லேட் உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்:

ஒரு நாளைக்கு 20 கிராம் முதல் 45 கிராம் சாக்லேட் வரை உண்பதில் அதிக நன்மைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், அதிகப்படியான சர்க்கரை அல்லது அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை ஈடுசெய்யும் என்பதால் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளைக்கு 10 கிராம் சாக்லேட் பரிந்துரைக்கிறார்கள்.

Must Read | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

சாக்லேட்டில் இதய ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடைய ஃபிளவனோல்ஸ் எனப்படும் கோகோவில் உள்ள குறிப்பிட்ட சேர்மங்களை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்திய ஆய்வுகள், சாக்லேட் வகைகளுக்கு இடையே வேறுபாடு காட்டவில்லை என்றாலும், முந்தைய ஆய்வுகள் டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த வழி என்று கூறுகின்றன. ஏனெனில் இது ஃபிளவனோல்ஸ், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாறாக, பால் சாக்லேட்டில் சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கும், அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் எச்சரிக்கின்றனர்.

Published by:Archana R
First published:

Tags: Chocolate, Healthy Lifestyle, Heart disease, Heart health