Home /News /lifestyle /

இந்த 9 உணவுகள் மூளையின் ஆற்றலை எப்போதும் சுருசுருப்பாக வைத்திருக்க உதவுகின்றன - ஊட்டச்சத்து நிபுணர்

இந்த 9 உணவுகள் மூளையின் ஆற்றலை எப்போதும் சுருசுருப்பாக வைத்திருக்க உதவுகின்றன - ஊட்டச்சத்து நிபுணர்

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்

உங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றை பெற பச்சைக் காய்கறிகள், பீட்ரூட் மற்றும் முட்டை போன்ற உணவுகளை தேர்வு செய்யுங்கள்

குளிர்காலம் உங்களை எப்போதும் சோர்வுடனே வைத்திருக்கும். நீங்கள் சுருசுருப்பாக இருக்க நினைத்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. மூளையும் சைலண்ட் மோடிற்கு சென்றுவிடும். இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே உங்கள் எப்போதும் போல் உற்சாகமாகவும், சுருசுருப்பாகவும் வைத்துக்கொள்ள மூளையின் ஆற்றலை தூண்டி விடுங்கள். அதற்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள். இவை உங்கள் மூளையை எனர்ஜியாக்க உதவுகின்றன. இந்த உணவுகளை ஊட்டச்சது நிபுணர் உமா நாய்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

உமா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கேப்ஷனாக ”ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக தேர்வு செய்து சாப்பிடுவதே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை சோர்வை நீக்கி உங்களை தெளிவாக்குகின்றன. அப்படி டார்க் சாக்லேட், பெர்ரி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற உணவுகள் இதில் அடங்கும்” என்கிறார்.

மேலும் , "ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகள் மூளையின் செயல்பாட்டிற்கு சிறந்தவை.  ஒமேகா -3 கொழுப்பு நிறைந்த கொட்டைகள், வெண்ணெய் மற்றும் கடல் உணவுகளை தேர்வு செய்யுங்கள்,” என்கிறார் உமா.

"உங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றை பெற பச்சைக் காய்கறிகள், பீட்ரூட் மற்றும் முட்டை போன்ற உணவுகளை தேர்வு செய்யுங்கள்" என்கிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Uma Naidoo, MD (@drumanaidoo)






அப்படி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் 9 உணவுகளை பரிந்துரைக்கிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.

அவகடோ : Lutein என்னும் ஊட்டச்சத்து மூளையின் செயல்பாட்டில் பாசிடிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது அவகடோ பழத்தில் நிறைவாக உள்ளது.

பெர்ரி: உமாவின் கூற்றுப்படி, பெர்ரி உங்கள் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

காஃபி பழக்கத்தை கைவிட நினைக்கிறீர்களா..? உங்களுக்கான 5 ஆரோக்கியமான மாற்று பானங்கள்...

டார்க் சாக்லேட்: "மன சோர்வைக் குறைக்கிறது, மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, நினைவாற்றலை அதிகரிக்கிறது" என்கிறார் உமா.

முட்டை: மூளையின் செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் இயற்கையின் மல்டிவைட்டமின் முட்டைகள் என்று கூறுகிறார் உமா .

பச்சை காய்கறிகள் : சிறந்த மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.



பீட்ரூட்: பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடு நிறைந்துள்ளது. இது சரியான இரத்த ஓட்டம் மற்றும் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

கடல் உணவு : கடல் உணவுகளில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. அவை மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அத்தியாவசிய கொழுப்புகளை கொண்டுள்ளன.

நட்ஸ்: ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்த முழுமையான ஸ்நாக்ஸ் எனில் அது நட்ஸ் வகைகள்தான். மூளை மற்றும் உடலுக்கு எரிபொருளாகவும் உதவுகிறது என்கிறார் உமா.

சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களில் கற்றல் மற்றும் நினைவாற்றலை ஊக்குவிக்கும் ஃபிளாவனாய்டுகள் அதிகம் இருப்பதாக உமா கூறியுள்ளார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Brain Health

அடுத்த செய்தி