முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இரும்புச்சத்து நிறைந்த ராகி.. குழந்தைகளுக்கு சமைத்துக்கொடுக்க 8 வகையான ஸ்பெஷல் ரெசிப்பிகள்..

இரும்புச்சத்து நிறைந்த ராகி.. குழந்தைகளுக்கு சமைத்துக்கொடுக்க 8 வகையான ஸ்பெஷல் ரெசிப்பிகள்..

ராகி

ராகி

விரும்பும் வகையில் நீங்கள் விதிவிதமான ராகி டிஷ்களை செய்து கொடுக்கலாம். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான சத்தும் கிடைக்கும்.

  • Last Updated :

ராகியை வைத்து குழந்தைகளுக்கு இந்த மாதிரி விதவிதமான சுவையான டிஷ் வகைகளை செய்து கொடுங்க!! கட்டாயம் விரும்பி சாப்பிடுவாங்க!!

ராகி ஆரோக்கியமான மற்றும் மிகவும் சுவையான முழு தானியங்களில் ஒன்றாகும். இதில் கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. ராகி ஒரு குளுட்டன்-பிரீ தானியம் மற்றும் சந்தையில் எளிதாக கிடைக்கிறது. இந்த சத்தான தானியத்தை உங்கள் குழந்தையின் உணவில் கட்டாயம் சேர்ப்பது அவசியம். ஆனால் ராகியை பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இருப்பினும், அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் விதிவிதமான ராகி டிஷ்களை செய்து கொடுக்கலாம். இதனால் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான சத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

1. ராகி இட்லிஸ்:

தேவையான பொருட்கள்

முழு ராகி - ஒரு கப்

ராகி தினை - ஒரு கப்

அரிசி - அரை கப்

உளுந்து - ஒரு கப்

அவல் - மூன்று டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை: முதலில், அரிசி, உளுந்து, ராகி மற்றும் வெந்தயம் சேர்த்து சுமார் 5 மணி ஊறவைத்து பிறகு அதனை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கலக்கி சுமார் ஆறு மணி நேரம் மாவை புளிக்கவிடவும். இறுதியாக, வழக்கம்போல் இட்லி ஊற்றுவதைப் போல் இந்த கலவையை ஊற்றி வேகவிட்டு இறக்கி காலை சுற்றுண்டியாக பரிமாறலாம்.

2. ராகி-தேங்காய் பர்ஃபி:

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - ஒரு கப்

தேங்காய் துருவல் - ஒரு கப்

ஆர்கானிக் கொக்கோ பவுடர் - 2 டீஸ்பூன்

வெல்லம் - அரை கப்

உளர் பேரிச்சம்பழ துண்டுகள் - சிறிதளவு

பாதம் துண்டுகள் - சிறிதளவு

தேங்காய் எண்ணெய் - அரை கப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை எடுத்து ஒரு கொதி நிலைக்கு வரும் வரை சூடு படுத்திங்கள். பின்னர் அதில் 2-3 சொட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி உடைத்து வைத்த அரை கப் வெல்லத்தை சேர்த்து உருக விடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அரைத்த தேங்காய், ராகி மாவு கொக்கோ பவுடர் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை கிளறிக்கொண்டே இருங்கள். கலவையை ஒன்றாகப் பெற தேங்காய் எண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். கலவை ஒரு கெட்டி பதத்திற்கு வரும் போது உலர் பேரிச்சம்பழம், பாதம் போன்றவற்றை பொடித்து சேர்க்கவும்.பின்னர் வெப்பத்தை அணைத்து, கலவையை சிறிது எண்ணெய் தடவப்பட்ட தட்டுக்கு மாற்றி சமநிலை படுத்த வேண்டும். மேலும் கலவையை சதுரங்களாக வெட்டி நன்கு ஆற விட வேண்டும். அவ்வளவுதான் ராகி தேங்காய் பர்ஃபி ரெடி.

3. ராகி நூடில்ஸ்:

தேவையான பொருட்கள்

ராகி சேமியா -ஒரு கப்

தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

வெங்காயம் (நறுக்கியது) - 1

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கடுகு - சிறிதளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

வெஜிடபிள் ஆயில் - தேவையான அளவு

ஹிமாலயன் இளஞ்சிவப்பு உப்பு - தேவையான அளவு

செய்முறை: ராகி சேமியாவை சுமார் 2 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொது ஒரு கடையை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு போடா வேண்டும். கடுகு பொரிந்ததும் கடலை பருப்பை போட்டு வதக்க வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக வேக வைத்த ராகி சேமியாவை சேர்த்து கிளறி விடவும். பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து பரிமாறலாம்.

4. ராகி அல்வா:

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - அரை கப்

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

சூடான பால் - ஒரு கப்

சர்க்கரை - கால் கப்

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

பாதாம் - 6 முதல் 7 (பொடியாக நறுக்கியது)

பிஸ்தா - 6 (பொடியாக நறுக்கியது)

செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் 1/2 கப் ராகி மாவை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் கெட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும். பின் அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை உருக கிளறி விடவும். பிறகு அதில் 1 கப் நன்கு சூடான பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும். பால் சேர்த்த பின் கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும். எப்போது வாணலியில் ஒட்டாத பதத்தில் கலவை வருகிறதோ, அப்போது 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து அலங்கரித்து பின்னர் பரிமாறுங்கள்.

5. ராகி லட்டு:

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - ஒரு கப்

வெல்லம் அல்லது கருப்பட்டி - ஒரு கப் (துருவியது)

நெய் - 2 மேசைக்கரண்டி

முந்திரி - 1 தேக்கரண்டி

கருப்பு எள் - 1 தேக்கரண்டி

திராட்சை - 1 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

சுக்கு தூள் - 1 சிட்டிகை

top videos

    செய்முறை : வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது. பின்னர் எள்ளை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். பின்னர் வேறொரு கடாயில் கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, மாவு சூடாக இருக்கும் போதே காய்ச்சிய வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். அவ்வளவு தான் சுவையான லட்டு தயார்.

    First published:

    Tags: Children, Health, Millets, Ragi