முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இட்லியில் இத்தனை வகைகளா..? 30 நிமிடத்தில் தயாரிக்கக் கூடிய 7 வகை ரெசிபீஸ்..!

இட்லியில் இத்தனை வகைகளா..? 30 நிமிடத்தில் தயாரிக்கக் கூடிய 7 வகை ரெசிபீஸ்..!

இட்லி

இட்லி

ஆவியில் வேகவைத்த இட்லியை, சுடச்சுட தட்டில் போட்டு, தக்காளி, தேங்காய் சட்னி சைடுஸுடன் கொடுத்தால் வேண்டாம் என சொல்ல மனம் வருமா என்ன.?

  • Last Updated :

வானத்து நிலவை குட்டியாக்கி தட்டில் வைத்தது போல் இருக்கு இட்லியை யாருக்கு தான் பிடிக்காது. அரிசியுடன் உளுந்து சேர்த்து அரைத்து, நன்றாக புளிக்க வைத்து, ஆவியில் வேகவைத்த இட்லியை, சுடச்சுட தட்டில் போட்டு, தக்காளி, தேங்காய் சட்னி சைடுஸுடன் கொடுத்தால் வேண்டாம் என சொல்ல மனம் வருமா என்ன.? தென்னிந்தியாவில் தொடங்கி நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் பஞ்சு போன்ற இட்லியை பல வெரைட்டிகளில் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்...

30 நிமிடங்களில் தயாரிக்க கூடிய 7 வகையான இட்லி வகைகள் இதோ உங்களுக்காக...

1) அவுல் இட்லி:

அவசர அவசரமாக வெளியே செல்ல வேண்டி இருந்தால், உடனடியாக தயாரிக்க இந்த அவல் இட்லி ஏற்றது. வெறும் 20 நிமிடத்தில் தட்டையான அவுலைக் கொண்டு இந்த இட்லியை தயார் செய்துவிடலாம். பிஸியான காலை நேரத்தில் இதை தயார் செய்து, காலை உணவை உண்ணலாம்.

2) ஆலு சுஜி இட்லி ( உருளைக்கிழக்கு + ரவை):

இந்தியர்களின் விருப்ப உணவான உருளைக்கிழங்குடன் ரவையை சேர்த்து ஆலு சுஜி இட்லி தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த சுவையான இட்லியை சாதாரணமான எந்த சைடிஷ் உடனும் நீங்கள் தொட்டுக்கொள்ளலாம்.

3) வெள்ளரிக்காய் இட்லி:

வேகாத வெயிலுக்கு குளிர்ச்சி கொடுக்க வெள்ளரிக்காய் இட்லி ஏற்றதாக இருக்கும். வீட்டில் வெள்ளரிக்காய், புளித்த தயிர், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், ரவை என அடிப்படையான பொருட்கள் இருந்தால் போதும், 20 நிமிடத்தில் தயார் செய்து விடலாம். இது ஆரோக்கியம் நிறைந்தது மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இறுதியில் செரிமானத்திற்கு உதவுகிறது. இது தவிர வெள்ளரிக்காயில் உடலுக்கு நன்மை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. எனவே, வழக்கமான முறையில் சாப்பிடுவதை விட, இந்த சுவையான வெள்ளரி இட்லிகளை நீங்கள் தயார் செய்து, காய்கறியின் நன்மையை அனுபவிக்கலாம்.

4) காஞ்சிபுரம் இட்லி:

காஞ்சிபுரம் இட்லிகளில் கேரட், பச்சைப் பட்டாணி, பிரெஞ்ச் பீன்ஸ் போன்ற காய்கறிகளின் நன்மதிப்பு உள்ளது. குளிர்சாதனப்பெட்டியில் இந்தக் காய்கறிகள் இருந்தால், காஞ்சிபுரம் இட்லியை நொடியில் செய்துவிடலாம். இந்த செய்முறையின் மூலம் உங்கள் இட்லிக்கான ஆரோக்கியத்தை மேலும் கூட்டுங்கள்.

5) சீன இட்லி:

இட்லியின் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் அத செய்முறையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதைச் செய்வதற்கான பாரம்பரிய முறையை நம்ப வேண்டியதில்லை, மேலும் உங்கள் விருப்பப்படி பொருட்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள இட்லியுடன் நறுக்கிய காய்கறிகளுடன் சுவையான சாஸ்களை கலந்து இந்தோ-சீன இட்லி போன்ற ஃப்யூஷன் ரெசிபியையும் நீங்கள் உருவாக்கலாம். இதன் சுவை வேற லெவலுக்கு இருக்கும்.

பருப்பே இல்லாத இட்லி சாம்பார்.. தெரிஞ்சு வச்சிக்கோங்க அவசரத்திற்கு யூஸ் ஆகும்!

6) லோ கார்ப் ஓட்ஸ் இட்லி:

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் அல்லது லோ கார்ப் டயட்டை பின்பற்றும் அனைவருக்கும் இது ஆரோக்கிமானது. குறைந்த கார்ப் ஓட்ஸ் இட்லி ஆரோக்கியமானது மற்றும் பல சட்னிகளுடன் சேர்த்து சாப்பிட ருசியாகவும் இருக்கும். ஓட்ஸ் உடன் தயாரிக்கப்படுவதால் இது இட்லிக்கு அதிக ஊட்டச்சத்தையும், நல்ல சுவையையும் அளிக்கிறது.

7) ) இட்லி டிக்கா:

top videos

    பனீர் அல்லது சிக்கன் டிக்கா கேள்விப்பட்டிருப்பீர்கள், சுவைத்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இட்லி டிக்கா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இது வடக்கு மற்றும் தென்னிந்திய செயல்முறையின் கலப்பு திருமணமாகும். இதைச் செய்ய இட்லி துண்டுகளை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் மசாலாவில் கலந்து ஊற வைக்கவும். இட்லி துண்டுகள், குடைமிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை தவாவில் அனைத்து பக்கங்களிலும் நன்றாக வேகவைத்து எடுத்தால், சுவையாக இட்லி டிக்கா ரெடி.

    First published:

    Tags: Idli dosa batter