வீட்டில் காய்கறிகளே இல்லையா..? உடனே செய்து அசத்த பருப்பு ரெசிபீஸ் லிஸ்ட்..!

பருப்பு உணவுகள்

பருப்பு சுவையுடன், குறைந்த கலோரிகள், இரும்புச்சத்து, புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும். அவற்றை 20 முதல் 30 நிமிடங்களுக்குள் எளிதாக சமைக்கலாம்.

  • Share this:
இந்தியா பல்வேறு கலாச்சாரங்களின் காரணமாக பலவகையான உணவுகள் சுவைக்கும் நாடு. உணவு மீதான அன்பு பல ஆண்டுகளாக மக்களை ஒன்றிணைத்து வருகிறது. பல வீடுகளில் பிரதானமாக இருக்கும் உணவு 'தால்' எனும் பருப்பு ரெசிபிகளாகும்.

டூர், மசூர், சனா, மூங் என பல்வேறு வகையான பருப்பு வகைகள் உள்ளது. பருப்பு சுவையுடன், குறைந்த கலோரிகள், இரும்புச்சத்து, புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும். அவற்றை 20 முதல் 30 நிமிடங்களுக்குள் எளிதாக சமைக்கலாம். 30 நிமிடங்களுக்குள் நீங்கள் செய்யக்கூடிய சில சுவையான சமையல் ரெசிபிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

துவரம் பருப்பு ரெசிபிதேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1கப்
உளுந்து - 1கைபிடி
சிவப்பு மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
புளி - எளுமிச்ச அளவு
வெல்லம் - 2ஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
வெங்காயம் - 2

தாளிக்க

எண்ணைய் - 3 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு
உ.பருப்பு - 1/4 ஸ்பூன்,
க.பருப்பு - 1/4 ஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
வெந்தியம் - 1/4 ஸ்பூன்
மிளகாய் - 3 எல்லாவற்றையும் வாணலியில் வதக்கி பொடி செய்து கொள்ளவும்.

கோவக்காயை வைத்து இத்தனை வெரைட்டி செய்ய முடியுமா ?

செய்முறை :

இரண்டு பருப்புகளையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த பருப்புகளுடன் சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவை உற்றி 20 நிமிடம் வேகவைக்கவும். ஒரு கிண்ணத்தில் புளி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள், வெல்லம், எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி அந்த துண்டுகளை சேர்த்து நன்று கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உ.பருப்பு, க.பருப்பு போட்டு தாளிக்கவும். இறுதியாக வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் ஊறிய துண்டுகளை சேர்த்து நன்கு சூடாகும் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.

தால் தட்காதேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
நெய் - 100 கிராம்
சீரகம் - 10 கிராம்
காய்ந்த மிளகாய் - 10 கிராம்
பூண்டு - 50 கிராம்
கறுப்பு உளுந்து - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, சூடானதும், சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வெந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும். அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பை, சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

பாசிப்பருப்பு பாயசம்தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்
பாசிப்பருப்பு - 1/3 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 6
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வெல்லத்தை குறைவான தண்ணீரில் போட்டு கரைய வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உடனே தண்ணீர் ஊற்றி, பின் தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு துருவிய தேங்காய் மற்றும் அரிசி மாவை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் மற்றும் அரிசி மாவை போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பு, அரிசி மாவு கலவை, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அனைத்து பொருட்களும் ஒன்று சேர நன்கு கிளறி விட்டு இறக்கி, நன்கு குளிர விட வேண்டும். பின்னர் கடாயில் பாலை ஊற்றி, பால் நன்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு, பாலானது நன்கு சுண்டியதும், அதில் குளிர்ந்த வெல்லக் கலவையை சேர்த்து, பின் முந்திரியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.

மசூர் பருப்பு கடைசல்தேவையான பொருட்கள்:

மசூர் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 6 துண்டு
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மசூர் பருப்பை நன்கு கழுவி போட்டு, பின் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி நெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். குக்கரில் உள்ள பருப்பை எடுத்து, மத்து கொண்டு லேசாக கடைய வேண்டும். பின்பு அடுப்பில் உள்ள வாணலியில் கீறிய பச்சை மிளகாய், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூளை போட்டு, கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மசூர் பருப்பு கடைசல் தயார்.

 
Published by:Sivaranjani E
First published: