ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அன்றாட உணவில் இந்த 6 சிறு தானியங்களை சேர்த்துப்பாருங்கள் : உடல் நலப் பிரச்சனைகளே வராது..!

அன்றாட உணவில் இந்த 6 சிறு தானியங்களை சேர்த்துப்பாருங்கள் : உடல் நலப் பிரச்சனைகளே வராது..!

உணவு தானியங்கள்

உணவு தானியங்கள்

இந்த உணவு தானியங்கள் பழங்காலத்திலிருந்தே இந்திய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன, தற்போது அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக மேலை நாடுகள் வரை பிரபலமடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியர்களின் உணவை பொறுத்தவரை வட இந்தியர்கள் மத்தியில் சப்பாத்தியும், தென் இந்தியர்கள் மத்தியில் அரிசியும் பிரதான உணவாக உள்ளது. அரிசியில் கார்ப்போஹைட்ரேட் அதிகம் என்பதால் தற்போது பெரும்பாலானோர் சப்பாத்தி போன்ற கோதுமையால் ஆன உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

‘என்னது இது எப்ப பாரு சாப்பாடு, சப்பாத்தின்னு நல்ல ஆரோக்கியமாவும், ருசியாவும் சாப்பிட வேற உணவே இல்லையா?’ என அலுத்துக் கொள்ளுபவர்கள் பலர் உண்டு. அப்படி அரிசியை தவிர்த்துவிட்டு ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவோருக்கு நமது ஆரோக்கியமான தினை வகைகள், முழு தானியங்கள் சிறப்பான மாற்றாகும். ஏனென்றால் அவற்றில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் என நிறைய நல்ல விஷயங்களும், குறைவான கார்ப்போஹைட்ரேட்டும் உள்ளது.

இந்த உணவு தானியங்கள் பழங்காலத்திலிருந்தே இந்திய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன, தற்போது அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக மேலை நாடுகள் வரை பிரபலமடைந்துள்ளது.

உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் 6 வகையான தினைகளை இங்கே பார்க்கலாம்...

1. ராகி (கேழ்வரகு):

ராகி எனப்படும் கேழ்வரகு இரும்புச் சத்து நிறைந்தது, ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய நமது உடலுக்குத் உதவுகிறது. இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. ராகியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது நீண்ட நேரத்தில் வயிற்றில் பசி உணர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ராகியில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் சமைக்க எளிதானது, சாப்பிட ருசியானது என்பதாகும்.

2. சோளம்:

வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலங்கள் மற்றும் டானின்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சோளத்தில் நிறைந்துள்ளது. பி வைட்டமின்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், முடி மற்றும் நகத்தின் வளர்ச்சி மற்றும் வலிமையை பாதுக்காக உதவுகிறது. அதே நேரத்தில் மெக்னீசியம் எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சோளத்தில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

International Year Of Millets

3. பக் வீட் (Buck wheat):

ஆங்கிலத்தில் பக் வீட் என அழைக்கப்படும் இது, தமிழில் பப்பரை அல்லது மரக்கோதுமை என அழைக்கப்படுகிறது. இது முழு தானிய வகைகளிலேயே மிகவும் சத்தானது ஆகும். இது புரதம், நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாக விளங்குகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், செலியாக் நோயை தடுக்கவும் பக்வீட் மாவு மூலம் தயாரிக்கப்படும் உணவு உதவுகிறது. மேலும் உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

தினசரி முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா, கெட்டதா..? எத்தனை முட்டை சாப்பிடலாம்..?

4. கம்பு:

கம்பில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு, கால்சியம் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து உங்களை நிறைவாக உணரவைப்பதால், அதிக கலோரிகளை உட்கொள்வது தடுக்கப்படுகிறது. மேலும் டைப் 2 நீரழிவு நோய் மற்றும் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

5. அமர்நாத்:

அமராந்த் என்பது தண்டுகீரை விதைகளில் இருந்து எடுக்கப்படும் தானியம் அமர்நாத் என அழைக்கப்படுகிறது. நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அனைத்தை விடவும் அமர்நாத்தில் அதிக அளவு மாங்கனீசியம் உள்ளது. தானியத்தில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து தசைகளை உருவாக்கவும் செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள தாதுக்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், சில நரம்பியல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

6. தினை:

தினையில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது, இந்த தானியமானது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தினை ஒரு நல்ல உணவாகும். இதில் குறைந்த கொழுப்பு அளவு, நல்ல செரிமானம் மற்றும் நல்ல இதய ஆரோக்கியம் ஆகியவை அடங்கும்.

First published:

Tags: Health Benefits, Millets