ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தீபாவளி நேரத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 6 ஆயுர்வேத குறிப்புகள்..!

தீபாவளி நேரத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 6 ஆயுர்வேத குறிப்புகள்..!

தீபாவளி பலகாரம்

தீபாவளி பலகாரம்

உணவை மிக எளிமையாகவும் எளிதில் செரிமானமடையும் படியாகவும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளி வந்துவிட்டது என்றாலே அனைவருக்கும் குஷியாகி விடும். விதவிதமான உணவுகளும் தின்பண்டங்களும் எப்போதும் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆனால் இவற்றை தொடர்ந்து உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகளை பற்றி நாம் எப்போதும் கவலை கொள்வதே இல்லை. அதிகமாக சாப்பிடும் சில உணவுகள் உங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கலாம்.

எனவே உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் 7-15 நாட்கள் வரை பஞ்சகர்மா எனப்படும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மருத்துவ முறையை நாம் கடைப்பிடிக்கலாம். இவை உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்றுகிறது. மேலும் இதற்காக நீங்கள் மருத்துவமனைக்கோ ஏதேனும் தனியாக சிகிச்சைக்கோ செல்ல வேண்டியது இல்லை. வீட்டிலே மிக எளிமையாக இந்த முறையை கடைபிடிக்கலாம்.

1. நேரத்திற்கு சாப்பிட வேண்டும்

அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலை வழக்கமாக உணவு உண்ணும் நேரங்களில் உங்களுக்கு பசி எடுக்கவில்லையெனில் குறைவான உணவை சாப்பிடலாம். அது மட்டுமல்லாமல் ஒருமுறை உணவு உண்ட பிறகு நான்கில் இருந்து ஆறு மணி நேரம் கழித்து மற்றொரு வேலை உணவை உண்ண வேண்டும். இதற்கிடையில் உங்களுக்கு பசி அதிகமாக இருந்தால் ஊட்டச்சத்து உடைய பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளையும் பழங்கள், சாலட் ஆகியவற்றை உண்ணலாம். இதை உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக்குவதுடன் உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

Also Read : செரிமான மண்டலத்தை தூண்டும் யோகாசனங்கள் : தினமும் செய்யுங்கள்..பலனை உணருங்கள்

2. சரியான மசாலாக்களை உபயோகியுங்கள்

புத்துணர்ச்சியோடு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் தூள் கருப்பு மிளகு தூள் ஆகியவற்றை உணவில் பயன்படுத்தலாம்.

3. எளிமையான எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்

உணவை மிக எளிமையாகவும் எளிதில் செரிமானமடையும் படியாகவும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். முக்கியமாக தென்னிந்தியாவில வழக்கமாக மக்களால் விரும்பி குடிக்கப்படும் கஞ்சி வகைகளில் கொழுப்புகள் குறைவாகவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

4. என்ன விதமான பானங்களை குடிக்கலாம்

அறை வெப்ப நிலையில் வைக்கப்பட்ட குடிநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதனுடன் ஐஸ் கட்டிகள் கலப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் சிறிதளவு தேனை அதனுடன் கலந்து குடிக்கலாம். மேலும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து லேசாக சூடு படுத்தி தூங்கச் செல்வதற்கு முன் குடிக்கலாம். அதில் சிறிதளவு தேன் கலந்தும் குடிக்கலாம்

5. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்

இது போன்ற பண்டிகை கால நேரங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிகமாக எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளையும் பாதி சமைத்த உணவுகளையும் உண்பது தவிர்க்க வேண்டும். முக்கியமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் மைதா மாவு கலந்த உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ரொட்டி, பன், ரஸ்க், பரோட்டா, பேக்கரியில் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தையும் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

Also Read : நெஞ்சு எரிச்சல்... வயிறு ஜீரணம் ஆகாத மாதிரியே இருக்கா..? இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க..!

6. இதர குறிப்புகள்

முடிந்த அளவு தினமும் இரண்டு நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ளலாம். ஆயுர்வேத முறையில் மூலிகைகளும் மசாலாக்களும் கலந்து செய்யப்பட்ட மூலிகை டீ குடிக்கலாம். இவை தவிர்த்து உணவை சரியான நேரத்தில் உண்பதும் சரியான நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் போதுமான அளவு தூக்கம் ஆகியவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Ayurveda, Deepavali, Digestion Problem, Diwali