தாமரைப் பொரியில் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸா..? குழந்தைகளுக்குக் கொடுத்தா அவ்வளவு நல்லது..!

மக்கானா (Makhana) எனப்படும் தாமரை விதையிலிருந்து பெறப்படும் தாமரை பொரியை ஆங்கிலத்தில் லோட்டஸ் சீட்ஸ் பாக்ஸ் நட்ஸ் (Lotus Seed boxs Nuts) என்று கூறுகின்றனர்.

மக்கானா (Makhana) எனப்படும் தாமரை விதையிலிருந்து பெறப்படும் தாமரை பொரியை ஆங்கிலத்தில் லோட்டஸ் சீட்ஸ் பாக்ஸ் நட்ஸ் (Lotus Seed boxs Nuts) என்று கூறுகின்றனர்.

  • Share this:
பொரி என்றால் நமக்கு அரிசியில் தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள் மற்றும் மக்காசோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் போன்ற ஸ்னாக் வகைகள் தான் நினைவுக்கு வரும். ஆனால் தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொரியை சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?.

மக்கானா (Makhana) எனப்படும் தாமரை விதையிலிருந்து பெறப்படும் தாமரை பொரியை ஆங்கிலத்தில் லோட்டஸ் சீட்ஸ் பாக்ஸ் நட்ஸ் (Lotus Seed boxs Nuts) என்று கூறுகின்றனர். இது முக்கியமாக விரதம் இருக்கும் நேரங்களில் சாப்பிடலாம் என பலரும் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் தாமரை விதைகளில் புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை உங்களுக்கு மிகவும் தேவையான ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீண்ட நேரம் பசியெடுக்காதவாறு உங்கள் வயிற்றை நிறைந்ததாக வைக்கின்றன. இதனை நீங்கள் ஓரு டீ டைம் ஸ்னாக் போன்றும் செய்து சாப்பிடலாம். மேலும் இரவு நேர உணவிலும் கூட சமைத்து சாப்பிடலாம் அல்லது இதை ஒரு சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். ஒருவரின் பசி வேதனையைத் தீர்ப்பதற்கு தாமரை விதை பொரிகள் மிகவும் சரியானவை. அதுவும் குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற இந்த சூப்பர் ஈஸி ஸ்னாக்கை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அதன் செயல்முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.1. மசாலா தாமரைப்பொரி: (Masala Roasted Lotus Seeds)

தேவையான பொருட்கள்:

தாமரை விதை - 2 கப்
வறுத்த வேர்க்கடலை - 3/4 கப்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சாட் மசாலா - 1/4 ஸ்பூன் (தேவைப்பட்டால்)
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை : ஓரு பேனில் சிறிதளவு நெய் சேர்த்து தாமரை விதைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் வறுக்கவும். அவை பொரிகளாக மாறிவிடும். அதில் வறுத்த வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். பின்பு மேற்கண்ட மசாலா பொருட்களுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதனை ஒரு கிணத்திற்கு மாற்றி பரிமாறலாம். வேண்டுமானால் குழந்தைகளுக்காக மசாலா பொருட்களின் அளவை குறைத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு சூப்பர் மசாலா தாமரை பொரி ஸ்னாக் தயார்.2. கிரீமி தாமரைப்பொரி கறி: (Creamy Roasted Lotus seeds Curry)

இந்த டிஸ்சை மதிய உணவிற்கு மட்டுமல்ல, ஒரு முழுமையான சிற்றுண்டாகவும் சமைத்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

தாமரைப் பொரி - 1 கப்
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி பேஸ்ட் - 1 கப்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
க்ரீம் - 3 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி கூழ், மஞ்சள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை 5 முதல் 6 நிமிடங்கள் மூடி வைக்கவும். இப்போது வேக வைத்த பட்டாணி அல்லது பிரெஷ் பட்டாணி ½ கப் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். குறைந்த தீயில் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். கடைசியாக கிரீம் உடன் மக்கானாக்களைச் அதாவது தாமரைப்பொரிகளை சேர்த்து, கடைசியாக கிளறி, அடுப்பை அணைக்கவும். கூடுதல் சுவைக்காக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வறுத்த எள் கொண்டு அலங்கரிக்கலாம்.3. கேரமலைஸ்டு தாமரைப்பொரி (Caramelised Makhana)

தாமரைப் பொரியில் காரம் மட்டுமல்ல இனிப்பு வகைகளையும் செய்யலாம். குழந்தைகளுக்கு சிறந்த ஸ்னாக்காக இது இருக்கும்.

தேவையான பொருட்கள்:

தாமரை விதை- 1 கப்
வெல்லம் தூள் செய்தது - 3/4 ஸ்பூன்
தண்ணீர் - 1 ¼ கப்
நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி தாமரை விதைகளை பொரித்து அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு கடாயில், தண்ணீருடன் தூள் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் வரை 1 முதல் 2 நிமிடங்கள் கிளறவும். வெல்லம் நன்கு கொதித்த பிறகு கடாயில் தாமரைப் பொரிகளை சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்து தாமரைப் பொரி குளிர்த்தவுடன் அதனை சாப்பிடலாம்.4. கிளாசிக் ரோஸ்டட் மக்கானா (Classic Roasted Lotus seeds)

கிளாசிக் ரோஸ்டட் மக்கானாக்கள் அதாவது தாமரைப்பொரி ஒரு சிறந்த ஸ்னாக் டைம் உணவுப்பொருளாக இருக்கும். இதனை ஒரு சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். நீண்ட நேரத்திற்கு நீங்கள் முழுமையாக உணர்வீர்கள்.

தேவையான பொருட்கள்:

தாமரைப்பொரி - 1 கப்,
வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,
கருப்பு மிளகு - ½ தேக்கரண்டி,
இந்து உப்பு - ½ தேக்கரண்டி,
மாதுளை விதைகள் - 4 டீஸ்பூன்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் உலர்ந்த வறுத்த மக்கானா (தாமரை விதைகள்) மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து அதனுடன் மிளகு, உப்பு, மாதுளை விதைகள் மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்க்கவும். நன்கு கிளறி பிறகு அதனை ஒரு பிளேட்டில் பரிமாறி சாப்பிடலாம். சிறந்த ஆரோக்கியம் நிறைந்த மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

சாதாரணமாக நாம் சாப்பிடும் சிற்றுண்டிக்கு பதில் இந்த தாமரை பொரியை நாம் சாப்பிட்டு வருவது மிகவும் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். இதில் கலோரி மிகவும் குறைந்து காணப்படுவதால் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல, இதய ஆரோக்கியத்திற்கும் எலும்புகளும் அதிக பலம் சேர்க்கும் ஒரு அரிய உணவு பொருள் இது. மேற்கண்ட ஸ்னாக் வகைகளை தாமரைப்பொரியில் செய்து சாப்பிடுங்கள். சுவையோடு அதிக ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறலாம்.

 

 

 
Published by:Sivaranjani E
First published: