Home /News /lifestyle /

ரம்ஜான் 2022 : இப்தார் விருந்தில் இந்த 4 ரெசிபீஸை கட்டாயம் டிரை பண்ணிப்பாருங்க!

ரம்ஜான் 2022 : இப்தார் விருந்தில் இந்த 4 ரெசிபீஸை கட்டாயம் டிரை பண்ணிப்பாருங்க!

ரம்ஜான் விருந்து

ரம்ஜான் விருந்து

ஒரு பவுலில் மைதா மாவு, சீரகம், உப்பு சேர்ந்து நன்கு கலந்து, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர்

இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் அல்லது ரம்ஜான் உள்ளது. நோன்பு மேற்கொள்ளப்படும் மிகவும் புனிதமான காலம் ரமலான் அல்லது ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இந்த புனித மாதத்தில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பிரார்த்தனை செய்யவும், நோன்பு நோற்கவும் நேரம் ஒதுக்குகிறார்கள்.

இந்த நேரத்தில் நோன்பு நோற்பவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே இப்தார் எடுத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து பாரம்பரிய முறைப்படி பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீருடன் ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து இனிப்புகள், சைவம் மற்றும் அசைவ உணவுகள் அடங்கிய இப்தார் சிறப்பு உணவு பரிமாறப்படும். இபதார் விருத்திற்காக நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில ரெசிபி வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. உருளைக்கிழங்கு சமோசா ரோல்ஸ்:

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிப்பு:

மைதா - 2 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கேற்ப

உருளைக்கிழக்கு மசாலா தயாரிக்க:

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ வேகவைத்து, உரிக்கப்பட்டது
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
புதினா - 2 தேக்கரண்டி நறுக்கிய
உப்பு - தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 கப்



செய்முறை:

ஒரு பவுலில் மைதா மாவு, சீரகம், உப்பு சேர்ந்து நன்கு கலந்து, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் மென்மையாக பிசைந்து கொள்ளவும். அதனை 15 முதல் 20 நிமிடங்கள் நன்றாக ஊறவிடுங்கள். இதற்கிடையில், மற்றொரு பவுலில் வேகவைத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

இப்போது, ​​மாவை நான்கு சம பாகங்களாக வெட்டி, ஒவ்வொன்றையும் தட்டையான ரொட்டிகளாக உருட்டி, ஒவ்வொன்றையும் சதுரமாக வெட்டவும். அதனுடன் உருளைக்கிழக்கு மசாலாவை வைத்து ரோல்களை தயார் செய்யவும். கடைசியாக, ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, சமோசா ரோல்களை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் சிறிது சில்லி சாஸுடன் பரிமாறவும்

2. எக் பக்கோடா

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டைகள் - 6
கடலை மாவு - 2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தண்ணீர் - தேவைக்கேற்ப
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - ருசிக்க ஏற்ப



செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, பேக்கிங் சோடா, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை தண்ணீர் விட்டு கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை காயவைத்து கொள்ளுங்கள் . இப்போது முட்டைகளை இரண்டாக வெட்டி, அதனை மாவில் தோய்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். கிரீன் சட்னி அல்லது கெட்ச் அப் சாஸ் உடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

இந்த ரம்ஜானுக்கு மட்டன் பிரியாணி செய்யப்போறீங்களா..? இப்படி செஞ்சு பாருங்க... இதுவரை சாப்பிடாத சுவை கிடைக்கும்..!

3. ஷமி கபாப்ஸ்:

தேவையான பொருட்கள்:

போன் லெஸ் சிக்கன் - 1/2 கிலோ
கடலை பருப்பு (30 நிமிடம் ஊறவைத்தது) - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
முழு சிவப்பு மிளகாய் - 8
உப்பு - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
முட்டை - 1
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -4
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தண்ணீர் - 1 கப்



 

செய்முறை:

கடாயில் சிக்கன், ஊறவைத்த கடலை பருப்பு, சிவப்பு மிளகாய், உப்பு, நறுக்கிய வெங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து வதக்கி, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். சமைத்த கோழிக்கறி, கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து ஒரு முட்டையை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை எடுத்து சிறிய கபாப் பஜ்ஜிகளை உருவாக்கவும். கபாப்ஸை எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறலாம்.

4. ஷாஹி துக்ரா:

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
இலவங்கப்பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
கண்டன்ஸ்டு மில்க் - 150 மிலி
சர்க்கரை - 1 கப்
வெள்ளை ரொட்டி
வெட்டப்பட்ட பாதாம் - 1/4 கப்
வெண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். பாலில் ஏலக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், கண்டன்ஸ்டு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, இறுதியில் வண்ணத்திற்காக ஒரு சிட்டிகை குங்குமப்பூவை சேர்க்கவும். பாலில் நன்றாக ரீச் அண்ட் கிரீமியாக வரும் வரை காய்ச்சவும். இப்போது, ​​வெள்ளை ரொட்டியின் 5-6 துண்டுகளை முக்கோணங்களாக வெட்டி, வெண்ணெயில் வறுத்து, அவற்றை தனியே எடுத்து வைக்கவும். துண்டுகளாக்கப்பட்ட பாதாமை சிறிது வெண்ணெயில் வறுத்து தனியாக வைக்கவும். இறுதியில், பரிமாறத் தயாரானதும் ரொட்டியின் மீது பால் கலவையை ஊற்றி பாதம் துருவல்களை கொண்டு அலங்கரிக்கவும்.

ரம்ஜான் ஸ்பெஷல் கிண்ணத்தப்பம் எப்படி செய்வது தெரியுமா..? வீட்டில் கண்டிப்பாக செஞ்சு பாருங்க..!

கோழி மலாய் கபாப்:

தேவையான பொருட்கள்:

சிறிய அளவிலான கோழி துண்டுகள் - 15
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
கிரீம் சீஸ் - 1 கப்
அரைத்த மொஸரெல்லா சீஸ் - 2 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - 1 தேக்கரண்டி
ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி
தேவைக்கு ஏற்ப உப்பு



செய்முறை:

முதலில் காப் செய்ய உள்ள ஸ்கீவரை நன்றாக தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும், இது கோழிக்கறியை தீயில் வாட்டும் போது அதில் ஒட்டிக்கொள்வதை தடுக்கும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், கருப்பு மிளகு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, ஜாதிக்காய் தூள், பச்சை ஏலக்காய் தூள், எலுமிச்சை சாறு, தொங்கும் தயிர் மற்றும் கார்ன்ஃப்ளார் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதனுடன் கிரீம் சீஸ் மற்றும் மொஸரெல்லா சீஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சிக்கன் துண்டுகளை skewers அல்லது ஒரு பேக்கிங் தட்டில் வைத்து மற்றும் மீதமுள்ள மசாலா கலவையை தூவவும். ஒரு வாணலியை எடுத்து அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றவும். சிக்கனை வறுக்கவும், எரியாமல் இருக்க திருப்பிப் போடவும். வெந்ததும் சிக்கனை பரிமாறும் தட்டில் மாற்றி கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food recipes, Ramzan

அடுத்த செய்தி