முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Covid-19 Vaccine | கொரோனா தடுப்பூசி போட்டா இந்த 5 உணவுகள் உங்க மெனுல இருக்கணும்..!

Covid-19 Vaccine | கொரோனா தடுப்பூசி போட்டா இந்த 5 உணவுகள் உங்க மெனுல இருக்கணும்..!

வைட்டமின் டி பற்றாக்குறை சுவாசப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. வைட்டமின் சி நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும். வெள்ளை இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இதேபோல், ஸிங்க் மற்றும் ஒமேகா 3 அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியமானதாகும். எதுவயினும் உங்கள் மருத்துவரிடம் ஒரு முறை கலந்து ஆலோசிப்பது அவசியம்.

வைட்டமின் டி பற்றாக்குறை சுவாசப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. வைட்டமின் சி நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும். வெள்ளை இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இதேபோல், ஸிங்க் மற்றும் ஒமேகா 3 அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியமானதாகும். எதுவயினும் உங்கள் மருத்துவரிடம் ஒரு முறை கலந்து ஆலோசிப்பது அவசியம்.

மஞ்சள் என்பது நம் இந்திய உணவுகளுக்கு மசாலாவாக மட்டும் பயன்படாமல் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

  • Last Updated :

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் கோவிட் மூன்றாம் அலை தாக்கும் அபாயம் இருப்பதால் அதற்குள் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி கொரோனாவிற்கு எதிரான போரில் முக்கிய கேடயமாக இருப்பதால் அனைவரும் தவறாமல் போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் தடுப்பு மருந்து எடுத்து கொண்டு வருகின்றனர். இதனிடையே கோவிட் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு ஊசி போட்ட இடத்தில் காயம், தலைவலி, காய்ச்சல், உடல் வலி, பலவீனம் மற்றும் சோர்வு போன்ற சில மிதமானது முதல் கடுமையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. பொதுவாக இந்த அறிகுறிகள் அதிகபட்சம் 2-3 நாட்கள் வரை நீடிக்கிறது.

எனவே, நீங்கள் இனி தான் கோவிட் தடுப்பூசி போட்டு கொள்ள போகிறீர்கள் என்றால் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவுடன் ஏற்படும் சில அறிகுறிகளை குறைத்து இயல்பாக இருக்க முக்கியமான மற்றும் சத்தான பொருட்கள் சிலவற்றை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். அவை தடுப்பூசி போட்டு கொள்வதன் காரணமாக ஏற்படும் சோர்வு அல்லது வலிகளை எதிர்த்து போராட உங்களுக்கு உதவும்.

மஞ்சள்:

மஞ்சள் என்பது நம் இந்திய உணவுகளுக்கு மசாலாவாக மட்டும் பயன்படாமல் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. மிகை பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுடன் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை கணிசமாக ஊக்குவிக்கிறது மஞ்சள். இதில் காணப்படும் குர்குமின் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் (முதன்மையாக மோனோடெர்பீன்கள்) ஆகியவை மஞ்சளின் முக்கிய உயிர்சக்தி கூறுகளாக உள்ளன மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கான சிகிச்சை முகவராக (therapeutic agent) செயல்படுகின்றன. எனவே, தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு உணவில் மஞ்சளை தொடர்ந்து சேர்த்து வருவது பக்கவிளைவுகளை சமாளிக்க உங்களுக்கு உதவும்.

இஞ்சி:

மஞ்சளை போன்றே இஞ்சியும் சிறந்த மசாலா பொருளாகவும் அதே சமயம் பல மருத்துவ பண்புகளையும் சேர்த்தே கொண்டுள்ளது. அமினோ அமிலங்கள் மற்றும் முக்கிய நொதிகளால் முழுமையாக நிரம்பியுள்ளது இஞ்சி. உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இரைப்பை பிரச்சனைகளை குறைப்பதிலும், குடல் வீக்கத்தை குறைப்பதிலும் நன்மை அளித்து குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது. மாலை நீங்கள் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து குடிப்பது உங்களை ரிலாக்ஸாக உணர வைக்கும்.

பச்சை இலை காய்கறிகள்:

கீரைகள், முட்டைக்கோஸ், ப்ரோக்லி, கடுகு கீரை உள்ளிட்ட பச்சையிலை காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வது உடல் சோர்வை குறைத்து கொஞ்சம் சுறுசுறுப்பாக உணர வைக்கும். தடுப்பூசிக்கு பிந்தைய ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சையிலை காய்கறிகள் சிறந்த துணையாக இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் சி, புரோவிட்டமின் ஏ கரோட்டினாய்டுகள், ஃபோலேட், மாங்கனீசு மற்றும் மிக முக்கியமாக வைட்டமின் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

நீர் நிறைந்த உணவுகள்:

தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளவர்கள் அடுத்த 3 முதல் 5 நாட்களுக்கு நீர் உள்ளடக்கம் நிறைந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிடலாம். உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்தால், அது சுற்றுப்புற உடல் வெப்பநிலை மற்றும் மன நிலையை பராமரிக்க உதவும். நீர் நிறைந்த உணவுகள் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவது உங்களை புத்துணர்ச்சி மற்றும் அமைதியுடன் வைத்திருக்க உதவும். எனவே, தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் ஆரஞ்சு, அன்னாசி, முலாம்பழம், வெள்ளரிகள் மற்றும் தர்பூசணி போன்ற பழங்களையும், நீர்ச்சத்துமிக்க காய்கறிகளையும் எடுத்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல தானிய உணவுகள்:

top videos

    உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்பை பராமரிப்பது எப்போதும் முக்கியமானது. சிறப்பான குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானம் என்பது சிறந்த ஆரோக்கியத்திற்கான அடையாளங்களில் ஒன்று. எனவே, உங்கள் ஆற்றலின் அளவை அதிகரிக்க, தடுப்பூசிக்கு பிந்தைய உங்கள் உணவில் பல தானிய உணவுகளை சேர்த்து கொள்வது சிறப்பான பலனை தரும். பல தானிய உணவுகளில் காணப்படும் அதிக அளவிலான நார்ச்சத்து, குடலில் உள்ள ஊட்டச்சத்தை சிறப்பாக உறிஞ்சி ஆற்றலாக மாற்ற அனுமதிக்கும்.

    First published:

    Tags: CoronaVirus, Covid-19 vaccine, Healthy Food, Lifestyle