ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டிலேயே கஃபே ஸ்டைலில் காஃபி போட தெரியுமா..? உங்களுக்கான ஈஸி டிப்ஸ்

வீட்டிலேயே கஃபே ஸ்டைலில் காஃபி போட தெரியுமா..? உங்களுக்கான ஈஸி டிப்ஸ்

கஃபே ஸ்டைல் காஃபி

கஃபே ஸ்டைல் காஃபி

92-95 செல்சியஸில் தண்ணீரைக் காய்ச்சும் போது காபியின் கசப்புத்தன்மையை நீக்கிவிடாமல் நமக்கு இனிப்பு மற்றும் கசப்பு கலந்த ஒருவித சுவையைக் கொடுக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால் தான் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். குறிப்பாக வேலையில் இருக்கும் போது ஏற்படும் போது மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தைக் கட்டுப்படுத்தவும் காபியை அதிகளவில் குடிக்கும் பலர், காப்ஃபைன் பொருளுக்கு எளிதில் அடிமையாகின்றனர். இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் காபி பிரியர்களுக்காக கும்பகோணம் டிகிரி காபி முதல் எஸ்பிரஸ்ஸோ, காபி லட்டே, காப்பசீனோ, மாக்கசீனோ, இந்தியன் டிகிரி காபி என பலவகைகள் உள்ளது.

இவ்வாறு பல விதமான காபி வகைகள் இருந்தாலும் நம்மால் வீட்டில் இந்த சுவைக்குக் கொண்டுவருவது கடினம். ஆனால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்றும், சரியான நுட்பங்களுடன் செய்து உங்களுக்குப் பிடித்த ஓட்டல்களில் வழங்கப்படும் காபியைப் போலவே வீட்டிலேயும் நீங்கள் சுவையாக செய்யலாம்.. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள இங்கே….

முழு காபிக் கொட்டையைப் பயன்படுத்துதல்:

காபிக் கொட்டைகளை சிறிய இயந்திரத்தின் போது அவ்வப்போது அரைத்து நாம் உபயோகிக்கலாம். இதில் மற்ற காபிகளைப் போன்று இல்லாமல் நமக்கு கூடுதல் சுவையை அளிக்கும். எந்த அளவு உங்களுக்குத் தேவையோ? அதற்கேற்ப உபயோகித்துக் கொள்ளலாம். இது நிச்சயம் உங்களுக்கு ஹோட்டலில் சாப்பிடும் சுவையைக் கொடுக்கும்.

நீரின் தரம் மற்றும் சரியான வெப்பநிலையைப் பயன்படுத்துதல்:

நமக்கு பிடித்த காபியைப் போல வீட்டிலேயும் செய்ய வேண்டும் என்றால், தண்ணீர் உபயோகிப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் காபிக்கு வைக்கப்படும் தண்ணீரைச் சுத்திகரித்து உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது காபியின் சுவையை மாற்றிவிடும். மேலும் 92-95 செல்சியஸில் தண்ணீரைக் காய்ச்சும் போது காபியின் கசப்புத்தன்மையை நீக்கிவிடாமல் நமக்கு இனிப்பு மற்றும் கசப்பு கலந்த ஒருவித சுவையைக் கொடுக்கும்.

இதோடு வீட்டில் செய்யும் உங்களது காபி இயந்திரத்தை தவறாமல் சுத்தம் செய்துக் கொள்ளும் போது, காபியின் சுவை குறைய வாய்ப்பில்லை. எனவே காபி இயந்திரத்தில் அழுக்குகள் தேங்கியிருக்கும் என்பதால், நாள் முழுவதும் வேலை செய்த பிறகு இரவில் அதை நன்றாக சுத்தம் செய்வதை மறந்துவிடாதீர்கள்.

வீட்டில் வைத்திருக்கும் காபி கொட்டைகளை எப்போதும் நீங்கள் ஜாடிகள் அல்லது பீங்கான் பாத்திரத்தில் காற்று புகாத கொள்கலனில் மூடி வைக்க வேண்டும்.

Also Read : சுவையான பில்டர் காபி போட சில டிப்ஸ்!

நீங்கள் வீட்டில் தயாரிக்கும் காபி சுவையாக இருப்பதற்கு அளவை சரியாக கையாள வேண்டும். இதைத் தான் பல காபி ஷாப்கள் பயன்படுத்துகின்றனர். எனவே வீட்டிலும் இந்த முறையைப் பின்பற்றுங்கள். எனவேஒவ்வொரு முறையும் ஒரு சரியான கப் காபியைப் பெற, காபியின் அளவுக்கும் தண்ணீரின் அளவிற்கும் இடையே உள்ள விகிதத்தை பராமரிப்பது முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Coffee, Cooking tips, Kitchen Tips