ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காஃபி பிரியரா நீங்கள்..? அப்போ இந்த கட்டுக்கதைகளை நம்புவதை நிறுத்துங்க!

காஃபி பிரியரா நீங்கள்..? அப்போ இந்த கட்டுக்கதைகளை நம்புவதை நிறுத்துங்க!

காஃபி

காஃபி

பலர் காஃபியுடன் தங்கள் நாளை துவக்காவிட்டால் எதையோ இழந்தது போல உணர்வார்கள். உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக இருந்தாலும், காஃபியை சுற்றி சில பொதுவான கட்டுக்கதைகள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழை மற்றும் குளிர் நீடிக்கும் நிலையில் காலை புத்துணர்ச்சியாக உணரவும், மாலை நேரத்தை இனிமையாக மாற்றவும் ஒரு கப் சூடான காஃபி பலருக்கும் போதுமானதாக இருக்கிறது.

பலர் காஃபியுடன் தங்கள் நாளை துவக்காவிட்டால் எதையோ இழந்தது போல உணர்வார்கள். உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் பானங்களில் ஒன்றாக இருந்தாலும், காஃபியை சுற்றி சில பொதுவான கட்டுக்கதைகள் உள்ளன. நீங்களும் ஒரு காஃபி பிரியர் என்றால் அது பற்றி கூறப்படும் சில பொதுவான கட்டுக்கதைகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போது தான் எவ்வித தயக்கமும் இன்று உங்களது காஃபியை அனுபவித்து சுவைத்து பருக முடியும்.

காஃபியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்பது நீண்ட காலம் நீடிக்க உதவும்:

டார்க் கூல், ட்ரை பிளேஸ்களில் ஸ்டோர் செய்து வைக்க விரும்பும் பொருட்களை எப்போதும் ஏர்-டைட் கன்டெய்னரில் வாங்குவது நல்லது. அதே போல உங்கள் காஃபியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்வது உண்மையில் அதை மாய்ஸ்டர் மற்றும் நாற்றங்களுக்கு வெளிப்படுத்துகிறது. இது காஃபியை ஃப்ரெஷ்ஷாக வைக்காது. எனவே ஃபிரிட்ஜில் வைப்பது உங்கள் காபிஃயை அதிக நேரம் நீடிக்க செய்யாது. அதே நேரம் காய்ச்சிய காபியை சீல் செய்யப்பட்ட கன்டெயினரில் 3-4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்து பருகுவது பாதுகாப்பானது.

காஃபி தயாரிக்க கொதிக்கும் நீரை (பாய்லிங் வாட்டர்) பயன்படுத்த வேண்டும்:

பொதுவாக பாய்லிங் வாட்டரின் வெப்பநிலை 100 டிகிரி அல்லது அதற்கு மேல் இருக்கிறது. ஆனால் காஃபி காய்ச்சுவதற்கு உகந்த நீரின் வெப்பநிலை 95 டிகிரி என்பதால் kettle-ஐ ஓரிரு நிமிடங்களுக்கு விட்டு விட்டு பிறகு பயன்படுத்துங்கள். அடுப்பில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து பயன்படுத்தினால் அடுப்பை அணைத்த ஒரு சில நிமிடங்கள் கழித்து உங்கள் காஃபி கிரவுண்ட்ஸில் தண்ணீரை ஊற்றவும். காஃபியை காய்ச்சும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் சென்றால் உங்கள் பானத்தின் சுவையை கசப்பாக மாற்றி விடும். சில நேரங்களில் கருகிய வாசனை மற்றும் சுவை உணர்வை ஏற்படுத்த கூடும்.

Also Read : குளிர்காலத்தில் கறிவேப்பிலையை உணவில் ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும்..? இந்த 6 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

டார்க் ரோஸ்ட் காஃபியில் அதிக காஃபின்:

உண்மை என்னவென்றால் லைட்டர் ரோஸ்ட்ஸ்களை விட டார்க் ரோஸ்ட் காஃபியில் சற்று குறைவான காஃபின் உள்ளது. காபி பீன்ஸானது நீண்ட நேரம் வறுத்தெடுக்கப்பட்டால் (டார்க் ரோஸ்ட்) அதிலிருக்கும் அதிக ஈரப்பதம் அகற்றப்பட்டு அதோடு கொஞ்சம் சிறிதளவு காஃபினும் கரைந்து விடுகிறது. நீண்ட நேரம் ரோஸ்ட் செய்யப்பட்ட காஃபியின் டேஸ்ட் கேரமலைசேஷன் அதிகம் எரிந்ததன் காரணமாக ஸ்ட்ராங்காக இருக்கும். ஆனால் காஃபின் அளவு அதிகரித்து இருக்காது.

கர்ப்பிணிப் பெண்கள் காஃபி குடிக்க கூடாது:

ஆய்வுகளின் படி மிதமான காஃபின் நுகர்வு ( 3-4 கப் காஃபி) கர்ப்பிணி மற்றும் கருவிலிருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதே போல வேறு சில ஆய்வுகள் காஃபின் அடங்கிய பானங்களை பருகுவது ஒரு பெண் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்களை வழங்கவில்லை. அமெரிக்காவில் நடத்தப்பட்ட 2 முக்கிய ஆய்வுகள் காஃபின் நுகர்வக்கும் மற்றும் கர்ப்ப விளைவு அல்லது பிறப்பு குறைபாடுகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளன. மேலும் சமீபத்திய ஆய்வுகள் காஃபின் நுகர்வுக்கும் தன்னிச்சையான கருச்சிதைவு அல்லது அசாதாரண கரு வளர்ச்சிக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என கூறுகின்றன.

First published:

Tags: Coffee