ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அன்றாட உணவில் இந்த 4 மசாலாக்களை சேர்த்தால் போதும்... நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கவலையே வேண்டாம்...

அன்றாட உணவில் இந்த 4 மசாலாக்களை சேர்த்தால் போதும்... நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கவலையே வேண்டாம்...

இந்திய மசாலாக்கள்

இந்திய மசாலாக்கள்

பாரம்பரியமான இந்திய மசாலாக்கள் வெறும் நறுமண பொருட்கள் மட்டும் கிடையாது, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய மசாலாக்கள் உடனான நமது தொடர்பு இன்று, நேற்று உருவானது அல்ல பல்லாயிரம் கணக்கான வருடங்களாகவே நமது உணவில் சுவை மற்றும் வாசனையை அதிகரிக்க மசாலா பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரியமான இந்திய மசாலாக்கள் வெறும் நறுமண பொருட்கள் மட்டும் கிடையாது, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளன.

கிராம்பு, ஏலக்காய், சாதத்தை, மிளகுத்தூள், உலர் இஞ்சி, வெந்தயம், கொத்தமல்லி விதைகள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலுக்கி எடுத்து வரும் கொரோனா பெருந்தொற்று போதாது என தக்காளி காய்ச்ச, குரங்கு அம்மை, பன்றிக் காய்ச்சல் என அடுத்தடுத்து புதுப்புது தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இந்த சமயத்தில் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இதற்காக வைட்டமின் மாத்திரைகள், சப்ளிமெண்ட்கள் என செயற்கையான பொருட்கள் தேவையில்லை, இந்திய சமையற்கட்டுகளில் இருக்க கூடிய சில மசாலா வகைகளே போதுமானது.

பன்சாரி குழுமத்தின் சுகாதார நிபுணரும் இயக்குநருமான ஷம்மி அகர்வால் கூறுகையில் “உணவே மருந்து, அது உடலை முழுமையாக குணப்படுத்தும். இதனால் தான் ஒவ்வொரு இந்தியா குடும்பங்களிலும் தங்களது உணவில் மசாலா மற்றும் மூலிகைகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மஞ்சள், கருப்பு மிளகு, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

நமது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கூடிய முக்கியமான 4 மசாலா பொருட்களின் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்...

1. மிளகு:

ஆக்ஸினேற்ற பண்புகள் நிறைந்த மிளகு, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், குடல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸை எதிர்த்து போராடக்கூடிய வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

நீங்கள் ப்ளாக் டீ குடிப்பவரா..? உங்களுக்கான குட் நியூஸ்...

2.சீரகம்:

மிளகிற்கு அடுத்தபடியாக இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் சீரகம் ஆகும். கிட்டதட்ட இதனை அனைத்து உணவு வகைகளிலும் காணலாம். இரும்புச்சத்து நிறைந்த சீரகமானது, கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. மேலும் இந்த மசாலா பொருளில் அளவுக்கு அதிகமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.

3. மஞ்சள் தூள்:

இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான மசாலா பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மழைக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தவும் பயன்படுகிறது. மஞ்சளில் நிறைந்துள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.

4. வெந்தயம்:

நமது அன்றாட சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வெந்தயமானது, பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. வெந்தயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதனை தேனுடன் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுவதோடு, உடல் எடையை குறைப்பதற்கும், சர்க்கரை நோய், மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

First published:

Tags: Immunity boost, Indian Spices