Home /News /lifestyle /

சாதம் மீந்து போச்சா?... கவலைய விடுங்க இதோ 4 அசத்தலான ஃபிரைடு ரைஸ் ரெசிபி! 

சாதம் மீந்து போச்சா?... கவலைய விடுங்க இதோ 4 அசத்தலான ஃபிரைடு ரைஸ் ரெசிபி! 

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Food Recipes | வழக்கமான போரான ஐடியாக்களுக்குப் பதிலாக மீந்து போன சாதத்தை வைத்து சுவையான, ஆரோக்கியமான ஃபிரைடு ரைஸ் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கஷ்டப்பட்டு சமைத்த சாப்பாடு மீந்து போய்விட்டால் இல்லத்தரசிகளின் மனம் கவலையில் ஆழ்ந்துவிடும். மீந்த சாதத்தை கீழே கொட்டவும் முடியாமல், தினமும் காலையில் பழைய சாதம் சாப்பிடவும் முடியாமல் திண்டாடுவார்கள். ஆனால் மீந்து போன சாதத்தை வைத்து ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அசர வைக்க கூடிய வகையில் சுவையான ரெசிபிக்களை தயார் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

    வழக்கமான போரான ஐடியாக்களுக்குப் பதிலாக மீந்து போன சாதத்தை வைத்து சுவையான, ஆரோக்கியமான ஃபிரைடு ரைஸ் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்...

    1. செஷ்வான் ஃபிரைடு ரைஸ்:

    தேவையான பொருட்கள்:

    இஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - 1.5 தேக்கரண்டி
    நறுக்கப்பட்ட வெங்காயம் - 1
    பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
    ரெட் சில்லி பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
    சோயா சாஸ் - 1.5 தேக்கரண்டி
    வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - ருசிக்கு ஏற்ப
    நறுக்கிய காய்கறிகள் -1 கப்
    ஷெஸ்வான் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
    வெங்காயத்தாள் - சிறிதளவு

    செய்முறை:

    ஒரு கடாயில், எண்ணெய்யை சூடாக்கி, முதலில் இஞ்சி மற்றும் பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அது நன்றாக சிவக்கும் வரை வதக்க வேண்டும்.

    அதன்பின்னர் ரெட் சில்லி பேஸ்ட், செஷ்வான் சாஸ், வினிகர், சோயா சாஸ், உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். விருப்பத்திற்கு ஏற்ப முட்டைகோஸ், சோளம், கேப்சிகம், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.

    அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பின்னர், மீந்து போன அரிசி சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் குலைந்து போகாமல் இருக்க, மிதமான வெப்பத்தில் வைத்து, கலவையை லேசாக மட்டுமே கிளறிவிட வேண்டும். கடைசியாக ஸ்பிரிங் ஆனியனை தூவி, சுடச்சுட செஷ்வான் ஃபிரைடு ரைஸைப் பரிமாறவும்.

    Read More : மழைக்கால ஸ்பெஷல்: மசூர் வடை மசூர் வடை தான்பா!


    2. முட்டை ஃபிரைடு ரைஸ்:

    தேவையான பொருட்கள்:

    இஞ்சி விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
    முட்டை - 2
    சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
    ஸ்பிரிங் ஆனியன் - 1/2 கப்
    நறுக்கிய காய்கறிகள் (முட்டைக்கோஸ், கேரட் மற்றும் கேப்சிகம்) - 2 கப்
    ஷெஸ்வான் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - ருசிக்கு ஏற்ப

    செய்முறை:

    சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி மற்றும் பூண்டு விழுதைச் சேர்ந்து நன்றாக வதக்கவும். இத்துடன் வெட்டிவைத்துள்ள வெங்காயம் மற்றும் முட்டைக்கோஸ், கேரட், கேப்சிகம் ஆகிய காய்கறிகளைச் சேர்த்து, அடுப்பை ஹைபிளேமில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை வதக்கவும். இத்துடன் உப்பு மற்றும் மிளகாய்த்தூளைச் சேர்க்க வேண்டும்.

    வெங்காயம் மற்றும் காய்கறிகள் நன்றாக வதக்கியதும், அத்துடன் 2 முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். காய்கறிகள் மற்றும் முட்டை உள்ள கலவையில் ஷெஸ்வான் மற்றும் சோயா சாஸ்களைச் சேர்க்கவும்.

    சாஸின் பச்சை வாசம் குறைந்ததும், மீந்து போன அரிசி சாதத்தை கலக்க வேண்டும். சாதம் காய்கறிகள் மற்றும் முட்டையுடன் நன்றாக கலந்த பின்னர் ஸ்பிரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறலாம். சாதம் குலைந்து போகாமல் இருக்க, மிதமான வெப்பத்தில் வைத்து, கலவையை லேசாக மட்டுமே கிளறிவிட வேண்டும்.

    3. பர்ன்ட் கார்லிக் ஃபிரைடு ரைஸ் (Burnt Garlic Fried Rice)

    தேவையான பொருட்கள்:

    நறுக்கிய காய்கறிகள் - கேரட், கேப்சிகம், பிரஞ்சு பீன்ஸ் மற்றும் சோளம்
    பூண்டு விழுது - 1.5 டேபிள்ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய பச்சை மிளகாய் - 2
    மிளகுத் தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    ஸ்பிரிங் ஆனியன் - 1/2 கப்
    உப்பு - ருசிக்கு ஏற்ப

    செய்முறை:

    சூடான கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்யை விட்டு, அத்துடன் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    அத்துடன் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கேப்சிகம், பிரஞ்சு பீன்ஸ் மற்றும் சோளம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உப்பு, சோயா சாஸ், சிவப்பு மிளகாய் தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    கடைசியாக மீந்து போன சாதத்தை கலந்து, அலங்கரத்திற்காக சிறிதளவு வறுக்கப்பட்ட பூண்டு, வெங்காயம் மற்றும் ஸ்பிரிங் ஆனியனை தூவிப் பரிமாறவும்.

    4. நான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்:

    தேவையான பொருட்கள்:

    நறுக்கப்பட்ட வெங்காயம் - 1
    இஞ்சி விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    ஸ்பிரிங் ஆனியன் - 1/2 கப்
    நறுக்கிய காய்கறிகள் - கேரட், முட்டைக்கோஸ், சோளம், பீன்ஸ், காளான் மற்றும் கேப்சிகம்
    பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - ருசிக்கு ஏற்ப

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் சூடானதும், அதில் இஞ்சி மற்றும் பூண்டு விழுது, பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றைக் கலந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அத்துடன் கேரட், முட்டைக்கோஸ், சோளம், பீன்ஸ், காளான் மற்றும் கேப்சிகம் ஆகிய காய்கறிகளின் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அதன் பின்னர் கருப்பு மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.

    இந்த கலவையுடன் மீதமுள்ள சாதத்தை சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து கலந்துவிடவும். கடைசியாக ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறலாம்.

    கலர்ஃபுல்லான காய்கறிகள், குறைந்த காரம் உள்ள இந்த ஃபிரைடு ரைஸை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    விரைவான ஃபிரைடு ரைஸ் ரெசிபிகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம், இது உங்கள் சுவை மொட்டுகளை சுவைகளின் வெடிப்புடன் திருப்திப்படுத்த உதவும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Food, Health, Lifestyle

    அடுத்த செய்தி