ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிருக்கு கதகதப்பா வீட்டிலேயே சிம்பிளாக செய்து குடிக்க ஹாட் சாக்லேட் ரெசிபீஸ்.!

குளிருக்கு கதகதப்பா வீட்டிலேயே சிம்பிளாக செய்து குடிக்க ஹாட் சாக்லேட் ரெசிபீஸ்.!

ஹாட் சாக்லேட்

ஹாட் சாக்லேட்

நம் வீட்டிலேயே இந்த குளிர் காலத்தில் நம்மை இதமாகவும் சூடாகவும் வைத்துக் கொள்ள எளிமையான முறையில் வீட்டிலேயே சுவையானசாக்லேட் ட்ரிங்க்ஸ் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்கனவே குளிர்காலம் துவங்கி விட்டது, குளிர் காலங்களில் உடலுக்கும் மனதுக்கும் இதமாக சூடாக வீட்டிலே தயாரிக்க முடிந்த சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உண்டு. அதிலும் குளிருக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சாக்லேட் ஃபிளேவரைக் கொண்ட உணவுப் பொருட்களை தயார் செய்து சூடாக பருகும் போது அவை வேறு விதமான உற்சாக மனநிலையை கொடுக்கும். அந்த வகையில்  இந்த குளிர் காலத்தில் நம்மை இதமாகவும் சூடாகவும் வைத்துக் கொள்ள நம் வீட்டிலேயே எளிமையான முறையில்  சுவையான சாக்லேட் ட்ரிங்க்ஸ் எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மசாலா ஹாட் சாக்லேட்:

தேவையான பொருட்கள்:

கொக்கோ பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்

கிராம்பு - 4

ஏலக்காய் - 4

இலவங்கப்பட்டை - 1

பால் - 2 கப்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் பால், கிராம்பு, ஏலக்காய் மற்றும் லவங்கப்பட்டை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயை குறைத்து விட்டு, கடாயிலை இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை மூடி வைத்துவிட வேண்டும். பின்பு சர்க்கரை மற்றும் கொக்கோ பவுடரை அதனுடன் சேர்த்து இன்னும் ஒரு நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். சூடான ஹாட் சாக்லேட் தயார்.

ஹாட் சாக்லேட் வித் மார்ஷ்மெல்லோ:

தேவையான பொருட்கள்:

கிரீம் - 1/2 கப்

துருவிய மில்க் சாக்லேட் - 1 கப்

லவங்கப்பட்டை - ½ கப்

பால் - 2 கப்

சாக்லேட் - 1 பீஸ்

மார்ஷ் மெல்லோஸ் - தேவையான அளவு

செய்முறை:

கடாயை நன்றாக சூடு படுத்தவும். அதன்பின் துருவிய மில்க் சாக்லேட் மற்றும் சிறிதளவு கிரீம் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சாக்லேட் நன்றாக உருகி கிரீமுடன் ஒன்றாக கலக்கும் வரை இதனை நாம் செய்ய வேண்டும்.

பின்பு பாலுடன் லவங்க பட்டைகளை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விட வேண்டும். அதன் பின்பு அந்த கிரீமியான சாக்லேட் பாலை, சாக்லேட் கோட்டட் ஜாரில் நிரப்பிக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு மார்ஷ்மெல்லோஸ் சேர்த்து சூடாக பரிமாறலாம்

ஆரஞ்சு ஹாட் சாக்லேட்:

தேவையான பொருட்கள்:

பால் - இரண்டு கப்

இலவங்கப்பட்டை - ½ டேபிள் ஸ்பூன்

ஆரஞ்சு ஜெஸ்ட் - தேவையான அளவு

உருக்கிய டார்க் சாக்லேட் - தேவையான அளவு

ஆரஞ்சு லிக்கர் - 50 மில்லி கிராம்

கிரீம் - 100 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் பாலை ஊற்றி அதன் பின் கிரீம் லவங்கப்பட்டை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு செஸ்ட் வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த உடன் அடுப்பை அணைத்துவிட்டு அந்த திரவத்தை வேறொரு கிண்ணத்தில் மாற்றுங்கள்.

பின் பாலுடன் மெல்ட் செய்யப்பட்ட சாக்லேட் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி, மிதமான சூட்டில் வைக்கவும். கொஞ்சம் சூடானவுடன் ஆரஞ்சு லிக்கரை சேர்க்க வேண்டும்.

Also Read : குளிர் தாங்க முடியலயா..? உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்...

அந்தக் கலவையில் இருந்து வாசனை வரத் தொடங்கும் போது, அதை எடுத்து கிளாஸ்களில் ஊற்றுங்கள்..

மீதமுள்ள ஆரஞ்சு ஜெஸ்ட்களை வைத்து அழகுப்படுத்தி சூடாக பரிமாறலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Chocolate, Warm Drinks, Winter diet