முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாக்கும் ஆரோக்கியமான 3 சூப் ரெசிபீஸ்!

குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாக்கும் ஆரோக்கியமான 3 சூப் ரெசிபீஸ்!

குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாக்கும் ஆரோக்கியமான 3 சூப் ரெசிபீஸ்!

குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாக்கும் ஆரோக்கியமான 3 சூப் ரெசிபீஸ்!

பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்ற வைரஸ் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை நாம் உட்கொள்ள வேண்டும். அதற்கு சூப் தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலம் வந்தாலே என்னவெல்லாம் சூடாக சாப்பிடலாம் என்று நினைப்போம். இந்நேரத்தில் முதலில் நாம் தேர்வு செய்து டீ அல்லது காபியாகத் தான் இருக்கும். ஆனால் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி போன்ற வைரஸ் நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற ஊட்டச்சத்து நிறைந்த பானங்களை நாம் உட்கொள்ள வேண்டும். அதற்கு சூப் தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

பொதுவாக குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் காரணமாக செரிமான பிரச்சனை ஏற்படும். இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், குளிர்காலத்தில் உடலைக் கதகதப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் சூப்களை எவ்வாறு தயார் செய்யலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

குளிருக்கு இதமான சூப்களின் லிஸ்ட்…

முட்டைக்கோஸ் சூப் :

முட்டைக்கோஸில் ஆன்டி ஆக்ஸிடன்டன்டகள், நார்ச்சத்துக்ள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகளவில் உள்ளன. மேலும் வைட்டமின் சியும் உள்ளதால் இதில் செய்யப்படும் சூப்கள் செரிமான பிரச்சனை முதல் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

தேவையான பொருட்கள் :

நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கப்

ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் – 1

மிளகு - ½ டீஸ்பூன்

நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி,

கேரட் தோலுரித்து நறுக்கியது - 2

சிவப்பு மிளகுத்தூள் மற்றும் உப்பு தேவையான அளவு

செய்முறை :

அடுப்பை மீடியம் வெப்பத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி வெங்காயம் மற்றும் கேரட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் , மிளகுத்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிய பின்னர் முட்டைக்கோஸ் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்தவுடன் மீண்டும் சிறிதளவு மிளகு சேர்த்தால் ஆரோக்கியமான முட்டைக்கோஸ் சூப் ரெடியாகிவிடும்.

சிக்கன் வெஜிடபிள் சூப் :

பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே, சளி இருமல் போன்ற பிரச்சனைகளும் நம்முடனே வந்துவிடும். இந்நேரத்தில் நாட்டுக்கோழியில் சூப் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று வீட்டில் உள்ள முதியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். இதே போன்று தான் காய்கறிகள் மற்றும் கோழி சேர்த்து செய்யப்படும் சூப்கள் உடலுக்கு நன்மை அளிக்கிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் வெஜிடபிள் சூப்பில் ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின் ஏ மற்றும் சி, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதோடு வைரஸ் போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவியாக உள்ளது.

சூப் செய்யத் தேவையான பொருட்கள் :

காளான் – 1 கப்

கேரட் – 3

கோழி – 2 கப்

மிளகு, உப்பு, தேவையான அளவு

கிராம்பு, இஞ்சி, பூண்டு,

செய்முறை :

சிக்கன் வெஜிடபிள் சூப் செய்வதற்கு முதலில், கோழியை வேக வைக்க வேண்டும். மிதமான வெப்பத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு, கேரட், காளான் சேர்த்து வதக்க வேண்டும்.பின்னர் சிக்கனை சேர்த்துக் கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும். நல்ல கொதித்து வந்தவுடன் காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.

ஸ்வீட் கார்ன் சூப் :

இன்றைக்கு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சூப்களில் ஒன்றாக உள்ளது ஸ்வீட் கார்ன் சூப். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மூலம் உடலின் கொலஸ்ட்ரால் அளவு குறைக்கப்படுவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது

தேவையானப் பொருட்கள்

சோளம் - 1

நறுக்கிய கேரட் - ½ கப்,

நறுக்கிய சின்ன வெங்காயம்- 3 தேக்கரண்டி

கிராம்பு நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு

கருப்பு மிளகு - தேவையான அளவு

உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்க வேண்டும். இதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். 2 நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து வதக்கிய பின்னர் சோளம் மற்றும் கேரட்டைச் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து பாதியளவு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறி கொள்ளலாம்

First published:

Tags: Soup, Winter