போர் அடிக்கும்போது சாப்பிட உதவும் 10 வகை ஸ்நாக்ஸ் : ஆரோக்கியத்திற்கும் நல்லது
போர் அடிக்கும்போது சாப்பிட உதவும் 10 வகை ஸ்நாக்ஸ் : ஆரோக்கியத்திற்கும் நல்லது
நாம் உண்ணும் உணவில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளன என்பதை பொறுத்து தான் அவை நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும். சாப்பாட்டை விடவும் அதிக அளவில் ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட்டு வருகிறோம். பல்வேறு வகையான ஸ்நாக்ஸ் வகைகள் இருந்தாலும், சில ஸ்நாக்ஸ் வகைகள் நமது உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. அந்த வகையில் மிக ஆரோக்கியமான 10 ஸ்நாக்ஸ் வகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல்வேறு வகையான ஸ்நாக்ஸ் வகைகள் இருந்தாலும், சில ஸ்நாக்ஸ் வகைகள் நமது உடலுக்கு ஆரோக்கியம் தருபவை.
நாம் உண்ணும் உணவில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளன என்பதை பொறுத்து தான் அவை நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும். சாப்பாட்டை விடவும் அதிக அளவில் ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட்டு வருகிறோம். பல்வேறு வகையான ஸ்நாக்ஸ் வகைகள் இருந்தாலும், சில ஸ்நாக்ஸ் வகைகள் நமது உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. அந்த வகையில் மிக ஆரோக்கியமான 10 ஸ்நாக்ஸ் வகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்க கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். வயிற்றப்புண் ஏற்பட்டால் சரியாக சாப்பிட முடியாமல் தவிப்பார்கள்.இவர்கள் முறையாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் நீங்கும்.
ஓட்ஸ் :ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலில் சீரான அளவில் ஆற்றலை வைத்துக்கொள்ள ஓட்ஸ் உதவுகிறது. பாலுடன் ஓட்ஸ் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் மிக சிறந்த ஸ்னாக்ஸ் தயாராகி விடும். மேலும் இதில் உலர் பழங்கள் போன்றவற்றையும் சேர்த்து கொண்டு சாப்பிடலாம்.
ஸ்மூத்திஸ் : பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் சிறந்த உணவு இந்த ஸ்மூத்திஸ். இதற்கு கிரேக் யோகர்ட்டை தேர்வு செய்து சாப்பிட்டு வரலாம். இது நல்ல பலனை தரும். அத்துடன் உங்களுக்கு நிறைவான உணர்வை தர கூடியது. ஸ்மூத்திஸில் புரதம் அதிக அளவில் உள்ளதால் ஆற்றலை உருவாக்க கூடும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு : கார்போஹைடிரேட் அதிக அளவில் இதில் உள்ளதால் உடலுக்கு தேவையான முழு ஆற்றலை இது பெற்று தரும். மேலும் இதில் வைட்டமின் ஏ, சி ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் போன்ற முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளது. சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டு வந்தால் எப்போதும் நிறைவான உணர்வை பெற்று, உற்சாகமுடன் இருக்கலாம்.
பீனட் பட்டர் : ஆரோக்கியமான கொழுப்புகளும், புரதமும் இதில் நிறைந்துள்ளது. இதை ஸ்மூத்திஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மிக சுவையாக இருக்கும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகையை சேர்ந்ததாகும். பீனட் பட்டரை பிரெட்டில் தடவி சாப்பிட்டு வருவதும் சிறந்த ஸ்னாக்ஸ் வகையாகும்.
பீட்ரூட் ஜுஸ் : சிறிது கருப்பு மிளகு மற்றும் உப்பை பீட்ரூட் ஜுஸில் கலந்து குடித்து வரலாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தசையை வலுப்பெற செய்ய கூடியது. பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தால் அதிக ஸ்டாமினா கிடைக்கும். இதுவும் ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும்.
புரோட்டீன் பவ்டர் : சமீப காலமாக பலர் புரோட்டீன் பவ்ரடை ஸ்னாக்ஸ் போன்று சாப்பிட்டு வருகின்றனர். இதில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், போன்ற பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே சோர்வாக உணரும் போது புரோட்டீன் பவ்டரை சாப்பிட்டு வரலாம்.
உலர் பழங்கள் : பாதாம், வால்நட், காய்ந்த திராட்சை, முந்திரி, பூசணி விதை, ஃபிலாஸ்க் சீட்ஸ், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை சிறிது சிறிதாக எடுத்து கொண்டு அவற்றை சாப்பிட்டு வரலாம். இது மிக சிறந்த ஸ்நாக்ஸ் ஆகும். இவற்றில் ஏராளாமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே உடலுக்கு மிகவும் நல்லது.
முட்டை : வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வருவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். சோர்வாக இருக்கும் போது வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் உடனே கிடைத்து விடும். மேலும் இதிலுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதற்கு உதவும்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.