Home /News /lifestyle /

உடல் ஆரோக்கியம் பேணும் நெய்: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!

உடல் ஆரோக்கியம் பேணும் நெய்: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள்!

நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளையும் கரைத்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது.

நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளையும் கரைத்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது.

நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளையும் கரைத்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது.

  • News18
  • Last Updated :
பாட்டி காலத்தில் நெய் தினசரி உணவுகளில் கட்டாயமாக இடம் பெறும். இன்று அது பண்டிகை நாட்களில் மட்டும் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்கிறது.  இந்த நிலை மாறி தினசரி உணவில் நெய்யை கட்டாயம் சேர்ப்பதற்கான காரணங்களை பட்டியலிடுகிறது இந்தத் தொகுப்பு. 

சமையலுக்கு உகந்தது

நெய் பயன்படுத்தி சமைக்கும் உணவுகள் எளிதில் கெட்டுப் போகாது. இதற்கு ஃபிரிஜும் தேவையில்லை. சில உணவுப் பொருட்கள் 100 நாட்கள் கூட கெடாமல் இருக்கும். நெய் வெண்ணையிலிருந்து உருக்கி எடுக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. பாலிலிருந்து வெண்ணை எடுக்கும்போதே அதில் இருக்கும் சர்க்கரை, கெட்டக் கொழுப்புகள் போன்றவை நீக்கப்படுகின்றன. நெய் காற்றுப்புகாதவாறு அடைத்து வைத்தால் ஒரு வருடம் வரையிலும் பயன்படுத்தலாம்.


உடலுக்கு ஆற்றலை தரக் கூடியது

நெய் உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை அளிக்கக் கூடியது. நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது. இது கல்லீரலால் எளிதில் உறிஞ்சப்பட்டு ஆற்றலாக வெளியிடுகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாகி நல்ல பலனை அளிக்கிறது. எனவேதான் விளையாட்டு வீரர்கள் நெய்யை ஆற்றலுக்கான தூண்டுகோலாக உணவுடன் சேர்த்துக் கொள்கின்றனர்.


உடல் எடையைக் குறைக்கும்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் நெய் சாப்பிடலாம். காரணம் நெய்யில் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளையும் கரைத்து, கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்கிறது.


செரிமானத்திற்கு ஏற்றது

நெய்யில் இயற்கையாகவே இரைப்பை அமிலம் சுரக்கிறது. இதனால் செரிமானத்தை சீராக்குகிறது. செரிமானம் சீராக அமைந்தாலே உடல் அரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் எடையும் சீராக இருக்கும்.
செரிமானக் கோளாறு இருப்பவர்களுக்கும் நெய் பரிந்துரைக்கப்படுகிறது.


கண்களுக்கு நல்லது

நெய்யில் அதிகப்படியான வைட்டமின் A மற்றும்  E இருக்கிறது. இவை இரண்டுமே கண்களுக்குத் தேவையான வைட்டமின்கள் என்பதால் கண்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு நெய் நல்ல மருந்தாகவும் அமைகிறது.


சருமத்தைப் பராமரிக்க உகந்தது

முகத்தில் ஏற்படும் கருவலையம், உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றுக்கும் சிறந்த அழகுப் பராமரிப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.


நோய் எதிர்ப்புசக்தி கொண்டது

நெய்யில் பியூட்டிரிக் ஆசிட் (Butyric acid) இருக்கிறது. இது இரப்பை அமிலத்துடன் சேர்த்து உற்பத்தியாகும். இவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புசக்தியை அளிக்கிறது. பொதுவாகவே புரதச் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களில் இந்த அமிலம் இருக்கும். நச்சுயிறிகளை அழித்து உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய் பிரச்னை வராமல் தடுக்க உதவும்.


ஆயுர்வேதத்திற்கு சிறந்தது

ஆயுர்வேத மருத்துவத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளுடன் நெய்யும் பயன்படுத்துகிறார்கள். நெய் மூலிகையில் இருக்கும் மருத்துவ சக்தியை உள்ளிழுத்து அந்தந்த பாகங்களுக்கு சீராக அனுப்புகிறது.


பாசிடிவ் உணவு

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சுத்தமான உணவு என்பதால் தூய்மையை நினைவூட்டுகிறது. அதன் நருமணம் மனதிற்கு நல்லெண்ணங்களை ஏற்படுத்துகிறது. இதனால்  நெய் நேர்மறையான எண்ணங்கள், உடல் வளர்ச்சி மற்றும் வேலைகளில் கவனம் ஆகியற்றை தூண்டுவதற்கு உதவுவதாகவும் கருதுகின்றனர்.


உடலுக்கு நல்ல கிளெசராக பயன்படும்

உடலில்  மன அழுத்தம், உடல் சோர்வு, மனச் சோர்வு, எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றை உருவாக்கும் அமிலங்கள் இயற்கையாகவே சுரக்கின்றன. அவை ஒட்டுமொத்தமாக கெட்டக் கொழுப்புகளாக உடலில் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கின்றன. அவற்றைக் கரைக்கும் மருந்தாக நெய் பயன்படுகிறது.எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட கெட்டக் கொழுப்புகளைக் கரைத்து உடலை சுத்தப்படுத்துகிறது.
Published by:Sivaranjani E
First published:

Tags: Ghee, Health tips

அடுத்த செய்தி