Home /News /lifestyle /

கர்ப்ப காலத்தில் அதிகமாக முதுகு வலிக்கிறதா? இந்த 5 ஆசனங்கள் செய்தல் வலியைப் போக்க உதவும்!

கர்ப்ப காலத்தில் அதிகமாக முதுகு வலிக்கிறதா? இந்த 5 ஆசனங்கள் செய்தல் வலியைப் போக்க உதவும்!

கர்ப்ப கால முதுகு வலியைப் போக்க உதவும் ஆசனங்கள்

கர்ப்ப கால முதுகு வலியைப் போக்க உதவும் ஆசனங்கள்

Back Pain During Pregnancy : கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலியைப் போக்க உதவும் 5 முக்கிய ஆசனங்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தாய்மை, ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நிகழும் அற்புதமான தருணம். கர்ப்ப காலத்தில் உடலில் ஹார்மேன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. ரிலாக்ஸின் எனும் ஹார்மோன் உடலில் சுரப்பதால் தசை, தசை நார் மற்றும் இடுப்பு எலும்புகளைத் தளர்த்தி பிரசவ காலத்தில் இடுப்பையும், பிறப்பு உறுப்புகளையும் அகலமாக்கி குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது. மேலும் கருவுற்ற பெண்களுக்கு நாளுக்கு நாள் கருப்பை வளர்ச்சி அதிகரிப்பதால் முதுகின் வளைவை அதிகரிக்கிறது. இதனால் பெண்கள் மிகுந்த இடுப்பு வலியை அனுபவிப்பார்கள்.

    அதிலும் குழந்தைப் பிறப்பின் போது பெண்கள் படும் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தளவிற்கு முதுகு வலியால் துடிப்பார்கள். எனவே இதுபோன்ற வலியைக் குறைப்பதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களைச் செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள். மேலும் முதுகுவலியைப் போக்கவும், பிரசவத்திற்குத் தயார்ப்படுத்தும் ஆசனங்கள் என்ன? என்பது குறித்து இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.

    கர்ப்ப காலத்தில் முதுகு வலியைக் குறைப்பதற்கு உதவும் யோகா ஆசனங்கள் :

    புஜங்காசனம்:

    புஜங்காசனம்


    உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் நன்மையளிக்கும் ஆசனம் தான் புஜங்காசனம். பாம்பு படமெடுப்பு போல் உடல் வளைந்து முகம் நேராக இருக்குமாறு செய்யப்படும் இந்த ஆசனம் கர்ப்பிணிப் பெண்களுக்கு முதுகுவலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மன அழுத்தம் மற்றும் சோர்விலிருந்து மனதையும்,உடலையும் பாதுகாக்கிறது.

    பலாசனா:

    பலாசனா


    குழந்தைகள் வளரும் போது முதலில் இரண்டு கால்களையும் மடங்கி கால்களின் மீது உட்காருவதால் தான் பலாசனா என்பது குழந்தைகள் போஸ் என்றழைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தனது முழங்காலில் அமர்ந்து, மெதுவாக முன்னோக்கி வளைந்து, முழு பின்புற பகுதியையும் கைகளையும் நீட்டித்து மேற்கொள்ளும் இந்த ஆசனத்தால் அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆகின்றது. மேலும் உடலுக்கு ஆக்ஸிஜனை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

    உட்கதா கோனாசனா:

    உட்கதா கோனாசனா


    தெய்வ தோரணை ஆசனம் என்றழைக்கப்படுகிறது உட்கதா கோனாசனா. கால்களை அகலமாகவும், பாதங்களை வெளிப்புறமாக மற்றும் கைகளை ஆசி வழங்குவது போல் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தைக் கர்ப்பிணிப் பெண்கள் செய்து வரும் போது முதுகு வலியைப் போக்குவதோடு இடுப்பு மற்றும் இடுப்புப் பகுதிக்கு மேல் வலியைக் குறைக்க உதவுகிறது.

    விருசாசனம்:

    விருசாசனம்


    மரத்தின் நிலை போன்று தோற்றமளிக்கும் ஆசனம் தான் விருசாசனம். எல்லோரும் எளிமையாக முறையில் செய்யக்கூடிய ஆசனமாக உள்ளது. ஒரு காலில் நின்று மற்றொரு காலை மடக்கி தொடையில் வைக்குமாறு செய்யக்கூடிய இந்த ஆசனத்தால் உடல் முழுவதும் செயலாற்றுகிறது. நேராக நிமிர்ந்து நிற்கும் போது முதுகில் உள்ள வலிகள் குறையக்கூடும்.

    Also Read : பார்ட் பார்டாக உடலில் கொழுப்பை கரைக்கும் உத்திகளை தெரிந்து கொள்ளுங்கள்!

    மர்ஜாரி + பிட்டிலாசனா:

    மர்ஜாரி + பிட்டிலாசனா


    கேட் – கவ் போஸ் என்றழைக்கப்படும் மர்ஜாரி + பிட்டிலாசனத்தை கர்ப்ப காலத்தில் பெண்கள் மேற்கொள்வது நல்லது. இந்த ஆசனம் செய்வதால் கீழ், மேல் மற்றும் நடு முதுகு வலியைப் போக்க உதவியாக உள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Back pain, Pregnancy care, Yoga, Yoga Health Benefits

    அடுத்த செய்தி