Home /News /lifestyle /

பெண்களுக்கான ஸ்டைலிஷ் ஹேர்ஸ்டைல்ஸ்

பெண்களுக்கான ஸ்டைலிஷ் ஹேர்ஸ்டைல்ஸ்

போனிடெய்ல் ஹேர்ஸ்டைலில் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ்

போனிடெய்ல் ஹேர்ஸ்டைலில் ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ்

பெண்கள் தங்களை அழகாகக் காட்ட எடுக்கும் முயற்சிகளில் பிரதானமானது, ஹேர்ஸ்டைல். முகத்தில் உள்ள மேக்அப் கச்சிதமாக இருந்தாலும், உடை அட்ராக்டிவாக இருந்தாலும், தலைமுடி நேர்த்தியாக, உங்கள் தோற்றத்துக்கு பொருத்தமாக இல்லையென்றால் ஒரு பிளெசன்ட் லுக் கிடைக்காது. ஹேர்ஸ்டைல் என்பது முகத்துக்கும், அணிகின்ற ஆடைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ் டிரஸில் கர்லி லூஸ் ஹேரில் இருப்பதும், அலுவலகத்துக்கு பங்கி ஹேர்ஸ்டைலில் செல்வதும் பொருத்தமானதாக இருக்காது. பெண்களுக்கான 5 அட்ராக்டிவ் ஹேர்ஸ்டைல்களை அறிமுகப்படுத்துகிறோம்.

1. போனிடெய்ல்

இது ஒரு சிம்பிள் ஹேர்ஸ்டைல். சுத்தமாக மேக்அப் போடாமல் இந்த ஹேர்ஸ்டைலில் இருந்தாலும் முகம் பளிச்சென்று இருக்கும். ஸ்போட்டியாக துருதுருவென இருக்கும் பெண்களுக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல், போனிடெய்ல். ஓர் இடத்துக்கு வேகமாக புறப்பட வேண்டும் என்றால் சுலபமாக இந்த ஹேர்ஸ்டைலை செய்து கொள்ளலாம். மிகவும் கம்பர்டபுளாகவும் இருக்கும். முன்புறம் நான்கைந்து முடிகளை தொங்கவிடுவதும், நெற்றிக்கு மேலே வளைவான பொஃப் வைத்துக் கொள்வதும் கூடுதல் அட்டேன்ஷன் கொடுக்கும்.

2. சைடு ஹேர் ஸ்ட்ரான்ட்ஸ்

சைடு ஹேர் ஸ்டாண்ட்ஸ் ஹேர்ஸ்டைலில் ஜெனிஃபர் லாரன்ஸ்


ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு செல்லும்போது உங்கள் கூந்தலை டிராமாட்டிக் லுக்கில் மாற்ற, சைடு ஹேர் ஸ்ட்ரான்ட்ஸ் ஹேர்ஸ்டைல் பொருத்தமானதாக இருக்கும். குளித்து முடித்தவுடன் நன்றாக கூந்தலை டிரை செய்து, விரல்களால் நன்கு கோதிவிட்டு வாசனையான ஹேர்ஸ்பிரே அப்ளை செய்து சிம்பிளாக உங்கள் மொத்த கூந்தலையும் வலது தோளிலோ, இடது தோளிலோ படறவிட்டால் போதும். தோள் மீது படர்ந்துள்ள அழகிய முடி உங்கள் முகத்துக்கு எக்ஸ்ட்ரா அழகைக் கொடுக்கும்.

3. ஸ்போர்ட் சூப்பர் ஸ்லீக் ஸ்ட்ரான்ட்ஸ்

ஸ்லீக் ஹேர் ஸ்ட்ராண்ட்ஸ் ஸ்டைலில் நடிகை கிம் கர்தாஷியன்


ஸ்ட்ரெய்ட்னிங் அயர்ன் மூலம் உங்கள் முகத்துக்கு ஏற்றவாறு முடியின் பக்கவாட்டிலிருந்தோ, நடுவிலிருந்தோ அயர்ன் செய்து ஸ்ட்ரெய்ட்டன் செய்ய வேண்டும். இந்த ஹேர்ஸ்டைலில் உங்கள் முடிக்கு எக்ஸ்ட்ரா மெருகூட்ட அயர்ன் செய்தபின்பு பொருத்தமான ஹேர் ஜெல் அல்லது புரொட்டக்டிவ் ஹேர் ஸ்பிரே பயன்படுத்துங்கள்.

4. பாய்கட் ஹேர்ஸ்டைல்

பாய் கட் ஹேர்ஸ்டைலில் நடிகை ஹாலே பெர்ரி


நீண்ட முடியை பராமரித்து சலிப்படைந்து விட்டீர்களா உங்களுக்கு சரியான சாய்ஸ், பாய்கட். வேலைக்கு செல்லும் பெண்கள், விளையாட்டு மற்றும் தடகளப் பயிற்சி பெறும் பெண்கள் மட்டுமல்ல. முடிக்கு அதிக நேரம் செலவு செய்ய விருப்பமில்லாத பெண்களும் கூட இந்த ஹேர்ஸ்டைலை பரிசோதிக்கலாம். பாய்கட் என்பது ஒரு பொதுவான சொல்தான். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அட்ராக்டிவான, வித்தியாசமான ஹேர்கட் வகைகள் உள்ளன. இந்த ஹேர்கட் செய்யும் பெண்களின் கண்களும், உதடுகளும் அதிகமாக கவனிக்கப்படும். ஹாலிவுட்டில் பாய்கட் ஹேர்ஸ்டைலை பரிசோதித்துப் பார்க்காத ஹீரோயின்களே இல்லை. இங்கிலாந்து இளவரசி டயானாவின் பேவரிட் ஹேர்ஸ்டைலும் இதுதான்.

5. மெஸ்ஸி ஹேர்ஸ்டைல்

மெஸ்ஸி ஹேர்ஸ்டையில் நடிகை ஏஞ்சலினா ஜோலி


முடி குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும், ஸ்ட்ரெய்ட் ஹேராக இருந்தாலும், கர்லி ஹேராக இருந்தாலும், எல்லா விதமான கூந்தலுக்கும் பொருந்துகிற ஹேர்ஸ்டைல், மெஸ்ஸி. இது ஸ்டைலையும், எக்ஸ்ட்ரா கவர்ச்சியையும் அளிக்கக் கூடியது. மெஸ்ஸி ஹேர்ஸ்டைல் பேஷன் ஷோவில் கலந்துகொள்ளும் மாடல்களின் விருப்பமான சாய்ஸ். சீப்பையே தொடாமல் விரல்களாலேயே உங்கள் முடியை வேண்டிய திசையில் நகர்த்தி உங்கள் உடைக்கும், முகவெட்டுக்கும் ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். பொருத்தமாக முடியை சரி செய்தவுடன் முடியை கடினமாக்கும் ஸ்பிரே அடித்துவிட்டால் சிலமணி நேரங்களுக்கு கூந்தல் உங்கள் விருப்பம் போல் அமைதியாக இருக்கும்.
Published by:Veeramani Panneerselvam
First published:

Tags: Attractive hairstyles for women, Stylish hairstyles for women

அடுத்த செய்தி