Home /News /lifestyle /

இளைஞர் தினம் முதல் அமாவாசை வரை.... ஜனவரி 2022ல் இனி வரும் பண்டிகை தினங்கள்!

இளைஞர் தினம் முதல் அமாவாசை வரை.... ஜனவரி 2022ல் இனி வரும் பண்டிகை தினங்கள்!

ஜனவரி 2022ல் இனி வரும் பண்டிகை தினங்கள்

ஜனவரி 2022ல் இனி வரும் பண்டிகை தினங்கள்

மார்கழி மாதத்தின் கடைசி நாள் 'போகி பண்டிகை' கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 2022ல், அமாவாசை, சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, புத்ராதா ஏகாதசி, மகர சங்கராந்தி, பொங்கல், லோஹ்ரி, பூர்ணிமா, சதுர்த்தி மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய சில முக்கியமான விரதங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வருகின்றன.

ஜனவரி 2022ல் இனி வரும் பண்டிகைகளின் பட்டியல் :

ஜனவரி 12 புதன்கிழமை: சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசிய இளைஞர் தினம்

ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமாகும். இந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக 1984ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த 1985ம் ஆண்டு முதல் இந்த தினத்தில் இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனவரி 13, வியாழன்: வைகுண்ட ஏகாதசி, போகி பண்டிகை

ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படும்.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் 'போகி பண்டிகை' கொண்டாடப்படுகிறது. போகி என்றாலே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்கிற பழமொழி தான் நம் நினைவிற்கு முதலில் வரும்.

ALSO READ |  மனத்தூய்மையுடன் இருங்கள்... ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் - சுவாமி விவேகானந்தர்

ஜனவரி 14, வெள்ளி : மகர சங்கராந்தி, பொங்கல், உத்தராயணம், லோஹ்ரி, கூர்ம துவாதசி விரதம்

பொங்கல் என்பது சாதி, சமய, பேதம் இன்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா.

ஜனவரி 15, சனிக்கிழமை : சனி பிரதோஷம் , மாட்டுப்பொங்கல்

சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும்.

தமிழகத்தில் ஜனவரிவ் 15 மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தெலுங்கு மாநிலங்களில் ஜனவரி 15-ம் தேதி கனுமா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 17, திங்கட்கிழமை:

பவுஷ் பூர்ணிமா, சத்ய விரதம், மக ஸ்னானம் தொடங்குகிறது, பவுர்ணமி வழிபாடு மற்றும் காணும் பொங்கல்.

ALSO READ |  அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை - சுவாமி விவேகானந்தர்

ஜனவரி 21, வெள்ளிக்கிழமை : சங்கடஹர சதுர்த்தி

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.

ஜனவரி 25, செவ்வாய்: காலஷ்டமி

காலஷ்டமி நாளில் பைரவரை வணங்க தடைப்பட்ட விஷயங்கள் நிவர்த்தியாகும்.

ஜனவரி 26, புதன்: குடியரசு தினம்

ஜனவரி 28, வெள்ளி: சர்வ ஏகாதசி

சர்வ ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் நீங்கும் என நம்பப்படுகிறது.

ஜனவரி 30, ஞாயிறு: பிரதோஷ விரதம், மாதாந்திர சிவராத்திரி

மாதாந்திர சிவராத்திரி ஜனவரி 30ம் தேதி வருகிறது. அதே நாளில் பிரதோஷ விரதமும் செய்யப்படுகிறது. இது சிவபெருமானின் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும்.

ALSO READ |  பாலுக்கு பதிலாக தண்ணீர் ஊற்றிய ஊழியர்கள் - கதை சொல்லி விவரித்த விவேகானந்தர்!

ஜனவரி 31, அமாவாசை :

31ம் தேதி அமாவாசை வருகிறது. இந்த அமாவாசை தர்ச அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

கோவிட்-19ன் புதிய ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும்போது நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Pongal, Republic day

அடுத்த செய்தி