முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்ணோயியல் புற்றுநோயால் அதிகரிக்கும் கருவுறுதல் பிரச்சனைகள் : சிகிச்சை முறை என்ன..?

பெண்ணோயியல் புற்றுநோயால் அதிகரிக்கும் கருவுறுதல் பிரச்சனைகள் : சிகிச்சை முறை என்ன..?

பெண்ணோயியல் புற்றுநோய்

பெண்ணோயியல் புற்றுநோய்

பெண்களைப் பாதிக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தான் பெண்ணோயியல் புற்றுநோய் (Gynaelogical cancers) என்கின்றனர் மருத்துவர்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

 புற்றுநோய் என்றாலே உயிரை அச்சுறுத்தக்கூடிய நோயாகவே இன்றளவும் உள்ளது. ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியாவிடில் உயிரைக்கூடப் பறிக்கும் அபாயம் உள்ளது. அதிலும் தற்போது பெண்களை அதிகளவில் பாதிக்கக்கூடிய பெண்ணோயியல் புற்றுநோய் பாதிப்பு கருவுறுதல் பிரச்சனைக்கு வழிவகுப்பதாக அமைகிறது. இதற்கான அடிப்படை சிகிச்சைகளை அளிக்கும் போது சில இனப்பெருக்க உறுப்புகளின் பாதிப்பு ஏற்பட்டுக் கருவுறுதல் பிரச்சனை ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனை ஆரம்பக் கட்டத்தில் கண்டறிவது கடினமாக விஷயம். மூன்றாவது மற்றும் நான்காவது கட்டத்தில் தான் கண்டறியப்படுகிறது. கர்ப்பப்பை புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், யோனி புற்றுநோய், வல்வார் புற்றுநோய் என பெண்ணோயியல் புற்றுநோயில் பல வகைகள் உள்ளது.

இவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் மற்றும் கூடுதலாக கீமோதெரபி மற்றும் இடுப்பு கதிர்வீச்சு போன்ற நிலையான சிகிச்சைகள் மூலம் தீர்வு காணமுடியும். இருந்தபோதும் உடலில் எந்த இடத்தில் புற்றுநோய் ஏற்பட்டு அதற்குச் சிகிச்சை அளித்தாலும் பக்கவிளைவுகள் ஏற்படும். இந்த விளைவுகள் தான் இனப்பெருக்க அமைப்பு பாதிக்கும் அபாயத்தை ஏற்படுகிறது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எப்படி என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

Also Read : வீட்டிலேயே டோமினோஸ் மாதிரி ஓரிகனோ மசாலாவை தயாரிப்பது எப்படி?

புற்றுநோய் சிகிச்சைகள் எப்படி உங்களது கருவுறுதலைப் பாதிக்கிறது?

பெண்ணோயியல் புற்றுநோய்

அறுவை சிகிச்சைகள் :

இனப்பெருக்க அமைப்பின் இடுப்பு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை சுற்றியுள்ள இனப்பெருக்க திசுக்களை சேதப்படுத்துவதோடு உங்களது கருவுறுதலைப் பாதிக்கும்.

ஹார்மோன் சிகிச்சை:

மாதவிடாய் சுழற்சியை ஹார்மோன் சிகிச்சையால் சரி செய்யும் போது கருவுறுதலைப் பாதிக்கிறது. இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை மற்றும் வறண்ட பிறப்புறுப்புகள் அனைத்தும் ஒவ்வொருவரின் ஹார்மோன்களைப் பொறுத்து பக்க விளைவுகளாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மாற்று அறுவை சிகிச்சைகள்:

புற இரத்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று மற்றும் பிற ஸ்டெம் செல் செயல்முறைகளின் போது அதிக அளவு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் கருவுறாமை பாதிப்பு ஏற்படுவதோடு கருப்பைக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது.

மற்ற சிகிச்சைகள்:

top videos

    நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் பிற புற்றுநோய் சிகிச்சை உங்கள் கருவுறுதலைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாக அசாதாரண யோனி இரத்தபோக்கு அல்லது வெளியேற்றம், இடுப்பு வலி அல்லது வீக்கம், சிறுநிரகப்பையில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவைபெண்ணோயியல் புற்றுநோயின் அறிகுறிகளாக உள்ளன. இந்நோய்க்கான சிகிச்சை முறைகள் உங்களது கருவுறுதலில் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இதற்கான முறையான சிகிச்சையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் நிச்சயம் இதுபோன்ற பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். மேலும் கருவுறுதல் பிரச்சனையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

    First published:

    Tags: Women Fertility, Women Health