Home /News /lifestyle /

Valentine week- Teddy Day 2020 : என்ன வரலாறு?

Valentine week- Teddy Day 2020 : என்ன வரலாறு?

காதலர் தின வாரம் - டெடி டே

காதலர் தின வாரம் - டெடி டே

காதலர் தின வாரக் கொண்டாட்டத்தில், பிப்ரவரி 10-ம் தேதி, உலகம் முழுவதும் டெடி பியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் இந்த நாளில் காதலர்கள் மட்டுமல்லாது நண்பர்கள், நமக்குப் பிடித்தவர்கள், உடன் பிறந்தவர்கள் என்று பலரும் டெடி பியர் பொம்மைகளைப் பரிசளிப்பார்கள்.

வேலண்டைன்ஸ் வாரத்தின் முக்கியமான நாள் இன்று "Teddy Day". டெடி பியரைப் பிடிக்காதவர்கள் யார்? ஆனால், ஏன் காதலர் தினத்தில் இந்த டெடி டே என்னும் விஷயம் தெரியவேண்டாமா? முன்னாள் அமெரிக்க அதிபரான தியோடர் ரோஸ்வெல்ட்டின் நினைவாக ஒரு டெடி பியர் வடிவமைக்கப்பட்டது. ஒருமுறை அவருடைய வேட்டைப் பயணத்தின்போது விலங்குகளைக் கொல்வதில்லை என்று அவர் முடிவு செய்ததன் காரணமாகவே இந்த மரியாதை அவருக்கு செய்யப்பட்டது. அதிலிருந்துதான் காதலர் தின வாரத்தில் அன்பைத் தெரிவிக்கும் விதமாக டெடி தினமும் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன் பீஸ் மற்றும் பார்பரா தம்பதியினர் இந்த `டெடி ரகசியத்தை' தங்கள் ”Why men dont listen and women cant read map" என்னும் புத்தகத்தில், குழந்தை வடிவில் குண்டாக, உயரம் குறைவாக இருக்கும் இந்த டெடி பொம்மைகள் தாய்மைக்கான ஹார்மோன்களைச் சுரக்க வைப்பதாகச் சொல்கிறார்கள்.

Daddys' Little Princessகளுக்கும், நண்பர்களுக்கும் டெடி பியர் கொடுத்து அசத்துங்கள்.

Also See...

 
Published by:Gunavathy
First published:

Tags: Valentines day

அடுத்த செய்தி