கருவை தன் வயிற்றில் சுமந்து, குழந்தையை பெற்றெடுக்கும் பொறுப்பை தாய்மார்களிடம் இயற்கை ஒப்படைத்துள்ளது. இதனால், ஒரு தந்தையின் வேலை உயிரணுவை கொடுப்பதோடு முடிந்து விட்டது என்று நாம் கருதிக் கொள்கிறோம். ஆனால், மரபணு குறித்த மருத்துவம் சொல்லும் சேதி வேறுமாதிரியாக இருக்கிறது.
பெற்றோர் இருவரின் மரபணுக்கள் சேர்ந்து தான் கர்ப்ப கால பயணம் அமையும் என்று அறிவியல் கூறுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றால், தாய்மார்களின் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தந்தையும் ஆரோக்கியமானவராக இருப்பது அவசியமாகும். குறிப்பாக குழந்தையின் நஞ்சுக்கொடி வளர்ச்சியில் தந்தையின் மரபணுவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, தந்தை பலவீனமானவராக இருப்பின் அதன் தாக்கம் குழந்தைகளிடமும் எதிரொலிக்கும்.
பெண்களில் சிலர், கருத்தரிக்கும்போது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தினசரி ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். தங்களுடைய உடல்நலன் சிறப்பாக இருப்பதன் மூலமாக குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் உள்ளது.
ஆனால், இது தவறான புரிதல் என வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆய்வாளர் ரூபியோ ஃபுரேத்தே கூறுகிறார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “என்னுடைய மருத்துவ அனுபவத்தில் சொல்கிறேன், கருத்தரிப்பில் தந்தையின் பங்கு என்பது சுருக்கமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், தாயின் ஆரோக்கியத்தைப் போலவே தந்தையின் ஆரோக்கியமும் அவசியமாகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆணின் ஊட்டச்சத்து குறைபாடு, அவரது புகைப்பிடித்தல், மது போன்ற காரணங்களால், அவரது மனைவிக்கு குழந்தையின்மை குறைபாடு, கருச்சிதைவு போன்ற பிரச்சினைகள் உருவாகும் என்று நிரப்புநர்கள் கூறுகின்றனர்.
Also Read : கால்சியம் குறைபாட்டை சரி செய்ய வீகன் உணவுகள் போதுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!
தந்தையின் உடல்நிலை குழந்தையிடம் எதிரொலிக்கும்...
கருத்தரித்தலுக்கு முன்பாக பெற்றோரின் உடல்நலன் எப்படி இருக்கிறது என்பது குழந்தையின் உடல்நலனிலும் எதிரொலிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருத்தரித்தலுக்கு முந்தைய காலத்தில் தந்தை மற்றும் தாயின் உடல்நலன், மனநலன், உணவுப் பழக்கம் ஆகியவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இவ்வாறான பழக்கம் பலரிடம் இல்லை என்பதால் பலரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
21 ஆம் நூற்றாண்டில், இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி எண்ணற்ற மக்கள் மருத்துவமனைக்கு படையெடுத்து செல்வதே இதற்கு சான்றாக உள்ளது.
நீண்ட கால பாதிப்புகளை கொண்ட தந்தையர்கள்
தந்தையர்களுக்கு நீண்ட காலமாக இருக்கக் கூடிய உடல்நலப் பிரச்சினைகள் குழந்தைகளின் உடல்நலனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து கடந்த 2020ஆம் ஆண்டில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தந்தையர்களுக்கு பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்றும், ஆரோக்கியமான பிரசவத்தை இது பாதிப்பதாக அமையும் என்றும் கூறப்பட்டது.
ஆகவே, கருத்தரித்தலுக்கு முந்தைய நிலையிலும் தந்தை, தாய் ஆகிய இருவரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பது அவசியம் என்று ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy, Pregnancy care