உலகின் விலையுயர்ந்த  உதடுகள்....!

இத்தனை பெரும் மதிப்பு மிக்க உதட்டுக்கு சொந்தமானவர் மாடல் சார்லி ஆக்டேவியாதான்

News18 Tamil
Updated: January 8, 2019, 11:05 PM IST
உலகின் விலையுயர்ந்த  உதடுகள்....!
இத்தனை பெரும் மதிப்பு மிக்க உதட்டுக்கு சொந்தமானவர் மாடல் சார்லி ஆக்டேவியாதான்
News18 Tamil
Updated: January 8, 2019, 11:05 PM IST
உதடுகளில் வைரக்கற்களால் லிப் ஆர்ட் செய்து கின்னஸ் சாதனைப் பெற்றுள்ளது ரோசெண்டார்ஃப் நிறுவனம். கூடவே உலகின் மிகவும் விலையுயர்ந்த உதடுகள்  என்கிற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.   

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோசெண்டார்ஃப் (Rosendorff) டைமண்ட் நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிறுவனம்  தங்களின் 50  ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டி இந்த கின்னஸ் சாதனையை நடத்தியுள்ளது.
ரோசெண்டார்ஃப் ஆஸ்திரேலியாவில் 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரபலமான நிறுவனமாகும். இவர்கள் வைர நகைகளை விற்பனை செய்வதில் சிறப்பு மிக்க நிறுவனம்.இந்த நிகழ்ச்சியில் லிப் ஆர்ட் செய்தவர் மேக்அப் ஆர்டிஸ்ட் க்ளார் மாக். ஒவ்வொன்றும் மதிப்பு மிக்க வைரம் என்பதால் மிகத் தெளிவுடனும் கவனமுடனும் இந்த ஆர்ட்டைச் செய்துள்ளார். லிப் ஆர்ட்டில் மொத்தம் 3.78 கோடி மதிப்புள்ள 126 வைரக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் மொத்த எடை 22.92 காரட் ஆகும்.

Loading...இத்தனை பெரும் மதிப்பு மிக்க உதட்டுக்கு சொந்தமானவர் மாடல் சார்லி ஆக்டேவியாதான். இவர் உலகம் முழுவதும்  முத்திரைப் பதித்த அழகி. மேக்அப் ஆர்டிஸ்டான  க்ளார் மாக், முதலில் உதட்டில் கருப்பு நிற மாட் லிப்ஸ்டிக்கைப் அப்ளை செய்துள்ளார். பின் ஃபால்ஸ் ஐலாஷ் ஒட்டக்கூடிய பிசின் பயன்படுத்தி வைரங்களை உதடுகளில் ஒட்டியுள்ளார். இந்த லிப் ஆர்ட் முழுமை பெற இரண்டரை மணி நேரம் ஆகியதாம்.

இதுகுறித்து மாடல் ஆக்டேவியாவிடம் கேட்டதற்கு ”மிகவும் பெருமையக உணர்கிறேன். பல மணி நேர ஆராய்ச்சிகள், வடிவமைப்புகள், திட்டமிடல்கள் என நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது. அவ்வாறு செயல்பட்டதனால்தான் விலை மதிப்பில்லாத இந்த சாதனைக் கிடைத்துள்ளது.இதைத்தவிர வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்” என மகிழ்ச்சியில்  மனம் நிறைந்து பேசினார்.  நிகழ்ச்சியில் மொத்தம் விலை உயர்ந்த வைரங்கள் என்பதால்  போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

Rosendorff


இது குறித்து ரோசெண்டார்ஃப் நிறுவனம் கூறிய போது “ பல வழிமுறைகளைப் பின்பற்றி இதைச் செய்ய வேண்டும். அதனால் கவனமுடன் கையாண்டதுதான் மிகவும் நெருக்கடியாக இருந்தது. இருப்பினும் உலக சாதனையைப் பெற்றதில் மகிழ்ச்சியே!” எனக் கூறினார்.

இதற்கு முன் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சூரத் டைமண்ட் ஜுவல்லரி நிறுவனம் 6,690 வைரக் கற்களைப் பயன்படுத்தி தாமரை மோதிரம் வெளியிட்டு கின்னஸ் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...