முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒர்க்அவுட் செய்யும்போது அணிய வேண்டிய ஸ்போர்ட்ஸ் பிராக்கள் : வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஒர்க்அவுட் செய்யும்போது அணிய வேண்டிய ஸ்போர்ட்ஸ் பிராக்கள் : வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஒர்க்அவுட் பிரா வகைகள்

ஒர்க்அவுட் பிரா வகைகள்

நீங்கள் வாங்கும் இறுக்கமான கிராப் டாப் அல்லது ப்ராலெட்  தீவிரமான உடற்பயிற்சி அமர்வுக்கு சரியான பொருத்தமாக இருக்காது.ஏனெனில் இந்த பிராக்கள் நல்ல பிட்டாக கடுமையானதாக இருந்தாலும், கடுமையான ஒர்க்அவுட்டின் போது உங்கள் மார்பக திசுக்களை சேதப்படுத்தும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தினசரி ஒர்க்அவுட் செய்யும்போது அதற்கான உடைகளையே அணிந்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், வொர்க்அவுட் செய்யும் பெண்கள் தங்களுக்கான சரியான ஸ்போர்ட்ஸ் ப்ராக்களை தேர்வு செய்வதில் சற்று தவறவிடுகின்றனர். நீங்கள் வாங்கும் இறுக்கமான கிராப் டாப் அல்லது ப்ராலெட் உங்களைப் போலவே அழகாக இருந்தாலும், அது ஒரு தீவிரமான உடற்பயிற்சி அமர்வுக்கு சரியான பொருத்தமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

ஏனெனில் இந்த பிராக்கள் நல்ல பிட்டாக கடுமையானதாக இருந்தாலும், உங்கள் மார்பக திசுக்களை சேதப்படுத்தும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, சரியான ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிவது உங்கள் மார்பகங்களின் இயக்கம் மற்றும் சேதத்தை குறைக்கிறது. பொதுவாக ஸ்போர்ட்ஸ் பிராக்கள் நீங்கள் அன்றாடம் அணியும் சாதாரண ப்ராவை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே,ஸ்போர்ட்ஸ் ப்ராவைத் நீங்கள் தேர்தெடுப்பதற்கு முன்னர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.

கப் சைஸ் தேர்வு: பிரா கப் எந்த இடைவெளிகளும் சுருக்கங்களும் இல்லாமல் உங்கள் மார்பகங்களோடு சரியாக பொருத்தவேண்டும். மேலும் நீங்கள் தேர்வு செய்யும் உள்ளாடை தட்டையாக இருக்க வேண்டும். அது விலா எலும்புக்கு தொந்தரவு தரும் வகையில் இருக்கக்​​கூடாது. ஏனெனில் இது மார்பக திசுக்களை காயப்படுத்தலாம்.

பிரா ஸ்ட்ராப்: பிரா ஸ்ட்ராப் மிகவும் மெல்லியதாக இருக்கக் கூடாது. ஏனெனில் அது நிலையானதாக இருக்கும் என்று கூறமுடியாது. அதேசமயம் மிகவும் தடினமாகவும் இருக்கக்கூடாது. அது தோள்பட்டையில் சுமையை அதிகரிக்கும். அது பிராவின் எடை மற்றும் பருமனை அதிகரிக்கிறது.

HIIT/BASKETBALL/FOOTBALL-க்கு உதவும் ஹை சப்போர்ட் பிராஸ்: ஹை சப்போர்ட் பிராக்களை அணிவதன் மூலம் உங்கள் உடல் செயல்பாடுகளினால் மார்பில் ஏற்படும் துள்ளலை இயற்கையாகவே அமுக்கமுடியும். இதனால் உங்கள் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளில் நீங்கள் சௌகரியமாக ஈடுபடலாம். ஒரு நல்ல உயர் ஆதரவு கொண்ட பிரா அணிவதன் பொருள் அதனை அணியும் போது உங்கள் உடல் லைட்டாக உணர வேண்டும். வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் உணரவைக்க கூடாது.

நடைபயணம்/கால்ப்-க்கான மீடியம் சப்போர்ட் பிரா: மிதமான மற்றும் லேசான பவுன்ஸ் கொண்ட செயல்பாடுகளுக்கு, மீடியம் சப்போர்ட் பிராக்களை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் அவை துள்ளல் மற்றும் தீவிரத்தைக் கையாள சிறிது அழுத்தத்தைக் கொண்டுள்ளன.

பைலேட்ஸ்/யோக பயிற்சிக்கான லைட் சப்போர்ட் பிராக்கள்: இந்த ப்ராக்கள் குறைந்த பவுன்ஸ் கொண்ட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்த பிரா ஸ்ட்ரக்ச்சர் கடுமையானதாக இருக்காது மற்றும் மிகவும் இலகுவானது. இதனை நாள் முழுவதும் நீங்கள் அணியலாம். இந்த வகை பிராக்களை நடைபயிற்சி, பைலேட்ஸ் மற்றும் யோகா பயிற்சி போன்ற சில செயல்பாடுகளுக்கு நீங்கள் அணியலாம்.

வாங்குவதற்கு முன் ட்ரையல் பார்க்க வேண்டும்:

கால்பந்து வீரரும் தனிப்பட்ட பயிற்சியாளருமான ஜோதி ஆன் பர்ரெட் என்பவர் கூறியதாவது, ஒருவர் ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்குவதற்கு முன் அதை ட்ரையல் பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறார். ட்ரையல் அறையில் அதன் இயக்கத்தை சோதிப்பது பார்ப்பது முக்கியம். உங்கள் கைகளை உயர்த்தி, திருப்பவும், குதிக்கவும், எந்த ஒரு அசௌகரியத்தையும் உணரவில்லை என்றால் நீங்கள் அதை வாங்கலாம்.

Work From Home - இல் இருப்பவர்கள் சௌகரியமான உடைகளை தேர்வு செய்ய டிப்ஸ்..!

உங்களுக்கு பொருத்தமான ஸ்போர்ட்ஸ் பிராக்களை வாங்க இந்த மூன்று சோதனைகளை செய்து பாருங்கள்:

பேண்ட் அளவு சோதனை: நீங்கள் சரியான சைஸ் பிரா தான் அணிந்திருக்கிறீர்களா என்பதை சரிபார்க்க உங்களுக்கும் உங்கள் ஸ்போர்ட்ஸ் பிரா பேண்டிற்கும் இடையில் உங்கள் விரலை வைக்கவும். பேண்ட் உங்கள் உடலுக்கு எதிராக உறுதியாக இருக்கிறதா என்பதை உணர வேண்டும்.

கப் சோதனை: ஸ்போர்ட்ஸ் பிராக்களை அணிந்தவுடன் உங்கள் கைகளை தலைக்கு மேலே உயர்த்தவும். அப்போது பிரா பேண்டும் மேலே சென்றால், நீங்கள் அதைவிட சிறிய அளவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஸ்ட்ராப் சோதனை: உங்கள் ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்த பிறகு, பிரா ஸ்ட்ராப்களை உங்கள் காதுகளுக்கு மேலே இழுக்க முடிந்தால், நீங்கள் காட்டாயம் அதை விட சிறிய அளவு பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக மிகவும் இறுக்கமான பிராவை தேர்ந்தெடுத்துவிட வேண்டாம்.

First published:

Tags: Bra, Exercise, Sports, Workout