நிறம் பேசும் அடையாளம்..! பெண்கள் தினத்தன்று நீங்கள் அணியப்போகும் ஆடை நிறம் என்ன..?

இந்த பெண்கள் தினத்தில் நீங்கள் அணியப்போகும் உடையின் நிறம்தான் நீங்கள் யார் என்பதை உணர்த்தவிருக்கிறது.

நிறம் பேசும் அடையாளம்..! பெண்கள் தினத்தன்று நீங்கள் அணியப்போகும் ஆடை நிறம் என்ன..?
பெண்கள் தினம்
  • Share this:
நிறங்கள்... குறிப்பாக ஆடைகளின் நிறங்கள் பேசும் மொழி கணத்த குரல் கொண்டது. அந்த குரல் கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி கொண்டது. எதிர்ப்பு தெரிவிப்பதானாலும், சமாதானமானாலும் , எந்தச் சார்பு கொண்டவர் என்பதானாலும் அவர் அணிந்திருக்கும் உடை ஒன்று போதும் அனைத்தையும் பேசிவிடும்.

குறிப்பாக பெண்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்க, தங்கள் தேவைகளுக்காக குரல் எழுப்ப பயன்படுத்தும் ஆயுதம் ஆடைகளின் நிறம்தான். அதற்கு சிறந்த உதாரணம் கோல்டன் குளோப் விருது.

டைம்ஸ் அப் இயக்கத்துடன் இணைந்து பெண்களுக்கான பாலியல் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு வேண்டி கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் பெண் பிரபலங்கள் கருப்பு உடை அணிந்துவந்தது உலகையே கவனிக்க வைத்தது. இதில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பேசாமலேயே தங்கள் ஆதரவை கருப்பு உடை அணிந்து வெளிப்படுத்தினர். இது உலக அரங்கில் மட்டுமல்ல.. இந்தியாவிலும் நீங்கள் அணியும் உடையை வைத்தே நீங்கள் யார் என்பது கணிக்கப்படுகிறது.




ஊதியத்தில் சம உரிமை, பாலியல் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு, பாலின பாகுபாடு களைதல் என இன்றும் பெண்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன. இத்தனைக்கும் மத்தியில் இதுவரைக் கடந்துவந்த பாதையை எண்ணி கர்வத்தோடு பெருமைக்கொள்ள கொண்டாடப்படுவதுதான் உலகப் பெண்கள் தினம். இந்த பெண்கள் தினத்தில் நீங்கள் அணியப்போகும் உடையின் நிறம்தான் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தவிருக்கிறது. அந்த நிறங்கள் என்ன...அவை என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

சிவப்பு : தைரியத்தின் அடையாளம். இது நான் மன உறுதி கொண்டவள். தைரியம் நிறைந்த பெண் என்பதை உணர்த்த நினைக்கிறீர்கள் எனில் சிவப்பு நிறம் அணிந்து செல்லுங்கள்.ஊதா நிறம் : இந்த நிறம் நீங்கள் சுயமரியாதையை விரும்பும் பெண். சுயமரியாதைக் கொண்ட பெண் என்பதை உணர்த்தும். அதோடு உங்கள் கண்ணியத்தை , விசுவாசத்தை, நேர்மையை அடையாளப்படுத்தும் நிறம்.

வெள்ளை : அமைதியை விரும்பும் பெண். எதிலும் பொருமையாக இருந்து தீர்வு காணும் குணம் கொண்டவர்கள் வெள்ளை நிறம் தேர்வு செய்யலாம். மென்மையான , அமைதியான வழியில் எதையும் சாதிக்கும் பெண்களுக்கு இந்த நிறம் ஏற்புடையதாக இருக்கும்.

பச்சை : நம்பிக்கையின் அடையாளம் பச்சை. தன்னம்பிக்கை அதிகம் கொண்ட பெண்கள், தன்னம்பிக்கைதான் தங்களுடைய பலமாகக் கருதும் பெண்கள் பச்சை அணிந்து செல்லலாம்.



பிங்க் : பெண்ணியத்தை போற்றும் நிறம். இரக்கம் , காதல் என உணர்ச்சிகளின் வசம் உங்கள் வெற்றி அமைந்துள்ளது எனில் பிங்க் தேர்வு செய்யுங்கள். எதற்கும் அன்பு ஒன்றே தீர்வு என அன்பின் வழியில் பயணிக்கும் பெண்கள் உங்களின் அடையளத்தை வெளிப்படுத்த பிங்க் அணியலாம்.

கருப்பு : போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை, உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பெண், தேடுதல் கொண்ட பயணங்கள் என வாழும் பெண்களுக்கு கருப்புதான் பிடித்த வண்ணமாக இருக்கும். அதுமட்டுமன்றி பொருப்புகள் அதிகம் கொண்ட பெண்களுக்கும் கருப்புதான் அடையாளம்.

மஞ்சள் : ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான வாழ்க்கை வாழும் பெண்கள் மஞ்சள் நிறத்தை தேர்வு செய்யுங்கள். நட்பு பாராட்டும் பெண்களுக்கும் மஞ்சள்தான் வெளிச்சம்.

 
First published: March 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading