Home /News /lifestyle /

தங்கம் சேர்க்கப்பட்ட அழகு சாதன பொருட்கள்..கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? 

தங்கம் சேர்க்கப்பட்ட அழகு சாதன பொருட்கள்..கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? 

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Beauty Care | பெண்களுக்கு தங்கத்தின் மீதிருக்கும் ஆசையை தூண்டும் விதமாக அழகு சாதனம் மற்றும் சரும பராமரிப்பு பொருட்களிலும் அது சேர்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  பெண்களுக்கு தங்கத்தின் மீதிருக்கும் ஆசையை தூண்டும் விதமாக அழகு சாதனம் மற்றும் சரும பராமரிப்பு பொருட்களிலும் அது சேர்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தங்கம் போன்ற உலோகங்கள் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இளம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.

  ஆரம்பத்தில் ஆடம்பர பொருளாக பார்க்கப்பட்ட இந்த பொருட்கள் தற்போது அனைத்து தரப்பு பெண்களும் வாங்கக்கூடிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  பண்டைய காலம் முதலே தங்கபஸ்பம் உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பராமரிப்புக்கும் பலன் தரக்கூடியது எனக்கருதப்படுகிறது. தற்போது நவீன முறையில் அழகு சாதன பொருட்களில் தங்கம் கலக்கப்பட்டு வருகிறது.எனவே தங்கம் உட்செலுத்தப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என பார்க்கலாம்...

  தங்கத்தின் மதிப்பு போலவே வயசும் குறையாது:

  மன்னர்கள் காலம் தொட்டு இன்றைய ஆன்லைன் யுகம் வரை தங்கத்திற்கான மதிப்பு சிறிதும் குறையவில்லை. அதேபோல் தங்க துகள்கள் சேர்த்து தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால், அவை விரைவிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தங்கத் துகள்கள் தோலின் ஆழமான அடுக்குகளில் கூட ஈசியாக ஊடுருவி, புது செல்களை உருவாக்கி, சருமத்தை புத்துயிர் பெறச்செய்கிறது.

  மேலும், தங்கம் உட்செலுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது உடலில் கொலாஜன் உருவாவதைத் தூண்டுவதாக ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் தோலில் சுருக்கம், தொய்வு, கோடுகள் போன்றவை ஏற்படுவது குறைக்கப்படுகிறது.

  Read More : வயதான தோற்றத்தை மறைக்க இந்த கிரீம் போதும்!


  சருமத்தை பாதுகாக்கும்:

  தங்கத்தில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தோல் நிறம் சிவந்துபோதல், முகப்பரு வீக்கம், ஹைப்பர் பிக்மென்டேஷன் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. தங்கத்தால் தூண்டப்பட்ட கூடுதல் ஆக்ஸிஜன் தோலில் ஆழமாக ஊடுருவி சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்குகிறது. இதனால் சருமம் மாசு மரு இல்லாத ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும்.

  தங்கம் போல ஜொலிக்கலாம்:

  அழகு சாதனபொருட்களில் கலக்கப்படும் மைக்ரோனைஸ் செய்யப்பட்ட தங்க துகள்கள் சூரிய ஒளியில் உங்கள் சருமத்தை சும்மா தகதகவென மின்னவைக்கிறது. தங்க ஆபரணங்கள் அணிந்தால் அணியக்கூடிய அழகும், வசீகரமும் தங்கம் உட்செலுத்தப்பட்ட அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.

  தங்கத்திற்கு மாற்றான பொருட்கள்:

  தங்கம் உட்செலுத்தப்பட்ட பொருட்கள் சருமத்திற்கு பல வகையான நன்மைகளைக் கொடுத்தாலும் பிற தயாரிப்புகளுடன் ஒப்பிடும் போது அதன் விலை அதிகம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தங்கத்தின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைப் போலவே, பல மாற்று தீர்வுகள் உள்ளன, அவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலையையும் கொண்டுள்ளன.

  தங்கம் உட்செலுத்தப்பட்ட அழகு சாதன பொருட்களில் கிடைக்ககூடிய அதே அளவு நன்மைகள், கிரீன் டீ, ஒயிட் கிரேப் சீட் அல்லது வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தோல் பராமரிப்பு பொருட்கள் மூலமாகவும் கிடைக்கின்றன. இதனால் சருமத்திற்கு ஓவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் அளவும் மிகவும் குறைவாகவே உள்ளது.

  இருப்பினும் இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு என்னவென்றால், ஒரு நபரின் சருமத்திற்கு எந்த மாதிரியான பொருள் பொருந்தும் என்பதை புரிந்துக் கொள்வது ஆகும். ஒரு நபருக்கு ஏற்ற தயாரிப்பு மற்றவருக்கு பொருந்தாது போகலாம். எனவே, உங்கள் தோல் பராமரிப்பு முறைகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், உங்கள் தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Beauty parlour, Beauty Tips, Fashion

  அடுத்த செய்தி