தென்னிந்தியாவின் ’ஃபேஷன் ஐகான்’என வோக் இதழால் அங்கீகரிக்கப்பட்ட ஜெயம் ரவியின் மனைவி..!

என்னைப் பொருத்தவரை ஃபேஷன் என்பது என் வாழ்க்கையின் ஒரு அங்கம்.

தென்னிந்தியாவின் ’ஃபேஷன் ஐகான்’என வோக் இதழால் அங்கீகரிக்கப்பட்ட ஜெயம் ரவியின் மனைவி..!
என்னைப் பொருத்தவரை ஃபேஷன் என்பது என் வாழ்க்கையின் ஒரு அங்கம்.
  • News18
  • Last Updated: October 10, 2019, 10:01 PM IST
  • Share this:
வோக் இதழ் 12 ஆம் வருடத்தை கொண்டாடுவதால் அக்டோபர் மாத சிறப்பிதழாக தென்னிந்திய சினிமா பிரபலங்களை அடையாளம் கண்டு அங்கீகரித்துள்ளது.

அந்த வகையில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என நயந்தாராவை பெருமைப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவியும் ஃபேஷன் தொழிலதிபர் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு அவரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதில் அவர் தென்னிந்தியாவில் இன்ஸ்டாகிராமில் 37 ஆயிரம் ஃபாலோயர்களைக் கொண்ட ஃபேஷன் ஐக்கான் என்றும் மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட நபர் என குறிப்பிட்டுள்ளது.

இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி பெருமையாக உள்ளதாக பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் “ என்னுடைய முதல் ஃபோட்டோஷூட்டே வோக் இதழால் நடத்தப்பட்டு வெளியாகியுள்ளது. என்னை அடையாளம் கண்டு அங்கீகரித்ததற்கு வோக் இந்தியா இதழுக்கு மிக்க நன்றி. கடந்த சில வருடங்களாக தென்னிந்திய ஃபேஷன் அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது. அது பலராலும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. என்னைப் பொருத்தவரை ஃபேஷன் என்பது என் வாழ்க்கையின் ஒரு அங்கம். அதில் சிறு வயதிலிருந்தே படித்து வளர்ந்த வோக் இதழ் என் வளர்ச்சியை அடையாளம் கண்டுள்ளது. வோகைத் தவிற வேறெது இந்த அங்கீகாரத்திற்கு ஈடாகும் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
View this post on Instagram

 

A post shared by Aarti Ravi (@aarti.ravi) on


அந்த நேர்காணலில் நிகழ்ச்சிகள் அல்லாத மற்ற நாட்களில் ஜீன்ஸ் டாப் காம்பினேஷனைதான் மிகவும் விரும்புவதாகவும், அதில்தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும் கூறியுள்ளார். தனக்குப் பிடித்த ஃபேஷன் ஐக்கான்களில் தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூர் கான் ஆகிய இருவரை கூறியுள்ளார். 
View this post on Instagram
 

Finally after months of keeping it to myself I’m so happy to share my first #Vogue shoot & story ☺️ Thank you so much @vogueindia for recognising me and making me a part of this prestigious anniversary issue. This issue is long due as South Indian fashion has evolved drastically over the years & deserves a lot more attention. To me, fashion has always been an integral part of my life and who better than #Vogue, a magazine I grew up reading to take notice of our growth. A big thanks to @akshaara for the story & making me feel so comfortable throughout. Last but not the least, I owe this all to my husband #jayamravi for encouraging me to do this and be myself always! Special mention to the photo shoot team: Thank you guys! ❤️ October issue out in stands now 🥰 Photography: @rohande Stylist: @dhfranklin Asst Stylist: @preksha.chordia Makeup: @leiyamua Hair: @rachelstylesmith @phiphi_shimray Location: @novotelchennaichamiersroad Outfit: @anamikakhanna.in Jewellery: @amrapalijewels Shoes: @balmain


A post shared by Aarti Ravi (@aarti.ravi) on


ஆடைத் தேர்வு குறித்த கேள்விக்கு ஆடைகள் வாங்கச் சென்றால் கணவருடன்தான் செல்வேன். அவரும் நான் ஏறி இறங்கும் அனைத்துக் கடைகளுக்கும் பொருமை காத்து என்னோடு வருவார். நான் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு வாங்கிவிடும் நபர் அல்ல. ஒரு ஆடையை எடுத்தால் அனைத்தையும் கவனிப்பேன் “ என்று பதிலளித்துள்ளார். தற்போது குச்சி பிராண்டின் ஸ்னீக்கர்ஸ்தான் மிகவும் பிடித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading