Home /News /lifestyle /

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை ’கோட் சூட்’ அணிய வைத்த டிசைனர் இவர்தான்..!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை ’கோட் சூட்’ அணிய வைத்த டிசைனர் இவர்தான்..!

விஜய்

விஜய்

”மேடையில் நின்று பேசிய போது நின்ற விதம், அந்த உடைக்கே உரிய பாணியில் பேசிய ஸ்டைல் என அனைத்தும் கவனம் பெறச் செய்தன”

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் கோட் சூட் அணிந்து வந்தது பேசுபொருளாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் கதாநாயகனான விஜய் நேற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி தன்னுடைய வரவேற்பை சிறப்பாக்கினார். யாரும் எதிர்பாராத விதத்தில் கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்து அரங்கையே அசர வைத்தார்.

இதுவரை நடந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் என்னதான் பிரமாண்டமாக நடந்தாலும் விஜய் சாதாரணமாக கேசுவல் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் என்றுதான் அணிந்து வருவார். ஆனால் இந்த முறை மாஸ்டர் இசை வெளியீட்டு விழா கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக மிக எளிமையாகவே நடைபெற்றது.

ஆனால், விஜய் மிடுக்காக கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்தது கவர்ந்திழுக்கச் செய்தது. அதாவது மோனோ ஸ்டைல் என்று சொல்லக் கூடிய பேண்ட் சட்டை, கோட் என அனைத்தையும் கருப்பு நிறத்திலேயே தேர்வு செய்திருந்தார். அவர் கோட் சூட் அணிந்ததை விட அதை அவர் கையாண்ட விதம் கண் இமைக்காமல் ரசிக்க வைத்தது.

பல்லவி சிங்


மேடையில் நின்று பேசிய போது நின்ற விதம், அந்த உடைக்கே உரிய பாணியில் பேசிய ஸ்டைல் என அனைத்தும் கவனம் பெறச் செய்தன. பிரபல காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங்தான் விஜய்க்காக இந்த கோட் சூட்டை வடிவமைத்து ஸ்டைல் செய்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டுமல்ல மாஸ்டர் படத்திற்கும் இவர்தான் ஆடை வடிவமைப்பாளர். இவரோடு ஷ்ருதி மஞ்சாரி மற்றும் காவ்யா ஸ்ரீராம் ஆகியோரும் மாஸ்டர் படத்திற்கான ஆடை வடிவமைப்புகளைச் செய்துள்ளனர்.

இதேபோல் பிகில் இசை வெளியீட்டு விழாவிலும் அட்லீக்கு மோனோ ஸ்டைலில் கருப்பு நிற கோட் சூட் அணிவித்து ஸ்டைலிங் செய்தது ஷ்ருதி மஞ்சாரி என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளர்களும் கோட் குறித்து கேள்வி எழுப்பியதற்கு ”நண்பர் அஜித் போல் அணிந்து வரலாமே என்று நினைத்தேன். எனக்கு நல்லா இருக்கா” என்று கேட்டதும் அரங்கம் ஆரவாரச் சத்தங்களால் அதிர்ந்தது.

படிக்க :

தமிழகத்தில் ட்ரெண்டாகும் கொரோனா வைரஸ் புடவை...!

மருத்துவமனைக்கு நோயாளியைப் பார்க்கச் சென்றால் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்..!

தர்பூசணி சாப்பிட்டால் விதைகளை தவிர்க்கிறீர்களா...? அதன் மருத்துவ குணம் தெரிந்தால் அப்படி செய்ய மாட்டீர்கள்..!

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Acor Vijay, Master

அடுத்த செய்தி