வாரணாசி என்றாலே பணாரஸ் புடவைகளுக்குப் பெயர் போனது. அதேபோல் பிரசித்திப் பெற்ற நிகழ்ச்சிகளை கவனம் ஈர்க்கும் விதமாக அதை அப்படியே அச்சிட்டு புடவை நெய்யும் சிறப்பும் வாரணாசி நெசவாளர்களுக்கு உண்டு.
அப்படி சமீபத்தில் மோடியின் தேர்தல் வெற்றியை பாராட்டி மோடி உருவம் பொறித்த புடவைகள் அச்சிட்டு பிரபலமானது. அதேபோல் புல்வாமா தாக்குதலை அணுசரிக்கும் விதமாகவும் புடவையில் அச்சிட்டு அதை வெளியிட்டனர்.
இந்த வரிசையில் உலகக் கோப்பை நடந்து வருவதையொட்டி நேற்று அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய அணியை உற்சாகப்படுத்த இந்திய அணியின் ஜெர்சியான நீல நிறத்தில் பணாரஸ் புடவை நெய்து அதில் 400 உலகக் கோப்பைகள் மற்றும் மட்டைப் பந்துகளை நெய்து நெசவாளர் சர்வேஷ் குமார் நேற்று வெளியிட்டார்.
ஆனால் இந்தியா நேற்றைய அரை இறுதியிப் போட்டியின் தோல்வி காரணமாக இறுதி சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் சர்வேஷ் குமார் பெருத்த ஏமாற்றத்தை அடைந்துள்ளார். இதனால் உலகக் கோப்பை புடவை எந்த அளவிற்கு விற்கப்படும் என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் புடவையை உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் அன்பளிப்பாக அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைப் புடவை நெய்ய முற்றிலும் தூய வெள்ளி நூல் பயன்படுத்தியுள்ளார். ஐந்து அரை மீட்டர் நீளம் கொண்ட இந்த புடவை 50,000 ரூபாய் என்று விற்கப்படுகிறது. இதை இயந்திரங்களின்றி கைகளாலேயே நெய்ததால் 30 நாட்கள் ஆகியுள்ளன. இதனால்தான் இந்த மதிப்பு என்று சர்வேஷ் குமார் கூறியுள்ளார்.
அவர் கிரிக்கெட் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால்தான் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த உலகக் கோப்பைப் புடவையை நெய்துள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.