200 வருட பழமையான ஆடைகளை மட்டுமே அணியும் புதுமை இளைஞர்..!

தன்னுடைய 14 வயதிலிருந்தே  பழமையான ஆடைகளை அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

news18
Updated: July 2, 2019, 7:28 PM IST
200 வருட பழமையான ஆடைகளை மட்டுமே அணியும் புதுமை இளைஞர்..!
ஸாக் மாக்லியோட் பின்செண்ட்
news18
Updated: July 2, 2019, 7:28 PM IST
காலம் செல்லச் செல்ல ஆடைகளும் தன் பரிணாம வளர்ச்சியை மெருகேற்றிக் கொண்டே இருக்கின்றன. மக்களும் காலத்திற்கு ஏற்ப தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

பிரட்டனைச் சேர்ந்த 25 வயது இளைஞர் காலம் மாறினாலும் உடை மாறினாலும் பழமை மாறாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வருகிறார். ஸாக் மாக்லியோட் பின்செண்ட் (Zack MacLeod Pinsent) என்ற அந்த இளைஞர், 18-ம் நூற்றாண்டின் பழமையான ஆடைகளை மட்டுமே அணிகிறார். ஜீன்ஸ் , டீ.ஷர்ட் என இன்றைய இளைஞர்கள் மோகம் கொண்டிருக்கும் எந்த ஆடைகளையும் விரும்பாத இவர் 200 வருட பழமையான ஆடைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய முன்னோர்கள் அதாவது, தாத்தாக்கள் பயன்படுத்திய ஆடைகளை வீட்டில் பராமரித்து வந்துள்ளனர். இதை சிறு வயது முதலே பார்த்து வளர்ந்ததால் இன்றைய ஆடைகளைக் காட்டிலும் பழமை ஆடைகளின் மீதே அவரின் விருப்பம் இருந்துள்ளது. இதனால் தன்னுடைய 14 வயதிலிருந்தே  பழமையான ஆடைகளை அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் அணியும் ஆடைகளை அவரே வடிவமைத்து அணிகிறார் என்பதுதான் இதன் சிறப்பு. இதற்காக வரலாறுகளைத் தேடி அதன் அச்சு பிசராமல் வடிவமைக்கிறார். மேலும் இவர் ஆடைகள் விற்பனைக் கடையும் வைத்திருக்கிறார். அதிலும் இதுபோன்ற 200 வருட பழமையான ஆடைகளையே வடிவமைத்து விற்பனை செய்கிறார். இதனால் இவருக்கு விற்பனையும் கலை கட்டுகிறது என பிபிசியில் அளித்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.Loading...

அவர், தான் அணியும் ஆடைகளை ஒவ்வொரு நாளும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்கிறார். அதோடு சில குறிப்புகளாக அந்த ஆடை குறித்த வரலாறு மற்றும் ஃபேப்ரிக் குறித்த தகவல்களையும் பதிவிடுகிறார்.
ஸாக்கை காணும்போதெல்லாம் பிரமாண்ட கோட், கேப் , பூட்ஸ் என்று அந்த ஆடைக்கு பொருத்தமான அத்தனை அணிகலன்களையும் கச்சிதமாக அணிந்து வலம் வருகிறார். அணிவது மட்டுமன்றி அந்த ஆடைக்கான நேர்த்தியையும் மிக அழகாகக் கையாளுகிறார் என்பதுதான் அவருக்கும் சிறப்பு அந்த ஆடைக்கும் பெருமை.
First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...