ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

புடவைகளுக்கென பிரத்யேக 'AVANTRA' ஷோரும்... டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஒன் ஸ்டாப் ஸ்டோர்

புடவைகளுக்கென பிரத்யேக 'AVANTRA' ஷோரும்... டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஒன் ஸ்டாப் ஸ்டோர்

புடவைகளுக்கென பிரத்யேக 'AVANTRA' ஷோரும்

புடவைகளுக்கென பிரத்யேக 'AVANTRA' ஷோரும்

இங்கு காட்டன் புடவைகள் தொடங்கி கண்டெம்புரரி டிசைன் வரை அனைத்து வகையான புடவைகளையும் வாடிக்கையாளர்களுக்காக வைத்துள்ளது. 25 முதல் 40 வயது வரை கொண்ட அனைத்து பெண்களுக்கும் ’One Stop Store’- ஆக திறக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  புடவையை விட சிறந்த ஃபேஷன் ஆடை இருக்க முடியுமா என்றால் சந்தேகம்தான். அதனால்தான் இன்றும் அது ஃபேஷன் துறையில் கோலோச்சி நிற்கிறது. ஏனெனில் புடவைக்கு ஒல்லி, குண்டு என்பதெல்லாம் தெரியாது. யார் கட்டினாலும் அது அவர்களின் அழகை மெறுகேற்றிக் காட்டும். அந்த வகையில் பெண்களுக்கென டிரெண்ட்ஸ் நிறுவனமும் ’AVANTRA ’ என்கிற பெயரில் புடவைகளுக்கான எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரை சென்னையில் திறந்துள்ளது.

  கடந்த 23ஆம் தேதி சென்னையின் முதல் கடையை தியாகராயா நகர் ஜி.என் செட்டி ரோட்டிலும் இரண்டாவது கிளையை வேளச்சேரியிலும் திறந்துள்ளது. இதை நடிகை ஸ்ரேயா சரண் திறந்து வைத்துள்ளார்.

  இங்கு காட்டன் புடவைகள் தொடங்கி கண்டெம்புரரி டிசைன் வரை அனைத்து வகையான புடவைகளையும் வாடிக்கையாளர்களுக்காக வைத்துள்ளது. 25 முதல் 40 வயது வரை கொண்ட அனைத்து பெண்களுக்கும் ’One Stop Store’- ஆக திறக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் இந்த கடைக்குள் சென்றால் புடவை மட்டுமல்லாது அதற்கு மேட்சிங்கான ரெடிமேட் பிளவுஸ், அணிகலன்கள், லெஹங்கா என பெண்களுக்கு தேவையான எல்லாமே கிடைக்கின்றன. அதோடு புடவை ரகத்திலும் சமரசமில்லாமல் வேலைக்கு செல்லும் பெண்கள் தொடங்கி திருமணத்திற்கு தயாராகும் பெண்களுக்கு வரை அனைத்து அக்கேஷன்களுக்கு ஏற்ற வகையில் புடவை ரகங்கள் கிடைக்கின்றன.

  அதுமட்டுமன்றி இங்கு பிளவுஸ், லெஹங்கா வாங்கினால் அதை உங்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ்டு செய்து கொடுக்கும் வகையில் டெய்லரிங் சர்வீஸும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எந்தவித கவலையும் இன்றி உங்களுக்கு சௌகரியமான வகையில் ஆடையை கஸ்டமைஸ்டு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

  Also Read : ரிசப்ஷன் போறீங்களா..? புடவையில் அசத்த ஜெனிலியாவின் இந்த ஸ்டைலை டிரை பண்ணுங்க...

  இவ்வளவு இருக்கிறதே விலையும் அதிகமாக இருக்குமா என்றால் அங்கும் உங்களுக்கு ஆச்சரியம்தான். விலையிலும் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப 399 முத 39,999 வரையில் சில்க் புடவை, கைத்தரி புடவைகள், காட்டன் புடவை, ஃபேன்சி புடவை என எந்த வகையான புடவைகளையும் வாங்க முடியும். புடவை அல்லாத மற்ற வகை ஆடைகளின் விலை 99 முதல் 1999 வரையில் ஆரம்பமாகிறது.

  எனவே உங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் அன்றாட தேவைக்காக இருந்தாலும் சரி இங்கு சென்றால் உங்களுடைய தேவை பூர்த்தியாகும் என்பதில் ஐயமில்லை...

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Saree look, Sarees, Trends